மே 8
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(8 மே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| << | மே 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
| MMXIII | ||||||
மே 8 கிரிகோரியன் ஆண்டின் 128ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 129ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 237 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1450 - இங்கிலாந்தில் கென்ட் நகரில் ஆறாம் ஹென்றி மன்னனுக்கெதிராக ஜாக் கேட் என்பவன் தலைமையில் கிளர்ச்சி இடம்பெற்றது.
- 1821 - கிரேக்க விடுதலைப் போர்: கிரேக்கர்கள் துருக்கியர்களை கிராவியா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர்.
- 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைநகராக வேர்ஜீனியாவின் ரிச்மண்ட் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
- 1886 - ஜோன் பெம்பர்ட்டன் கொக்கா கோலா எனப் பின்னர் பெயரிடப்பட்ட மென்பானத்தைக் கண்டுபிடித்தார்.
- 1902 - கரிபியன், மார்டீனிக் தீவில் பெலே எரிமலை வெடித்ததில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1914 - பராமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1933 - மகாத்மா காந்தி ஹரிஜன் மக்களின் நலனுக்காக 21-நாட்கள் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: கொக்கோஸ் தீவுகளில் நிலைகொண்டிருந்த பிரித்தானிய இலங்கை இராணுவப் பிரிவை சேர்ந்த இராணுவத்தினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இக்கிளர்ச்சி அடக்கப்பட்டு மூவர் தூக்கிலிடப்பட்டனர்.
- 1945 - அல்ஜீரியாவின் சேட்டிஃப் என்ற இடத்தில் நூற்றுக்காணக்கான அல்ஜீரியர்கள் பிரெஞ்சுப் படைகளினால் கொல்லப்பட்டனர்.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தனர்.
- 1984 - லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் விளையாட்டுகளைப் பகிஷ்கரிக்கப்போவதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.
- 2007 - புதிய வட அயர்லாந்து உயர் சபை அமைக்கப்பட்டது.
பிறப்புக்கள் [தொகு]
- 1828 - ஹென்றி டியூனாண்ட், செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவியவர் (இ. 1910)
- 1916 - சுவாமி சின்மயானந்தா, இந்திய ஆன்மிகவாதி (இ. 1993)
இறப்புகள் [தொகு]
- 1947 - ரொபேர்ட் ஹோர்விட்ஸ், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
- 1951 - மு. நல்லதம்பி, ஈழத்துப் புலவர்
சிறப்பு நாள் [தொகு]
- உலக செஞ்சிலுவை நாள்
- ஐரோப்பா - வெற்றி நாள் (1945)
- தென் கொரியா - பெற்றோர் நாள்