மார்ச் 7
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(7 மார்ச் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| << | மார்ச் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||
| MMXIII | ||||||
மார்ச் 7 கிரிகோரியன் ஆண்டின் 66ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 67ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 299 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1793 - ஸ்பெயின் மீது பிரான்ஸ் போரை அறிவித்தது.
- 1798 - பிரெஞ்சு இராணுவம் ரோமினுள் நுழைந்தது. ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது.
- 1799 - பிரான்சின் முதலாம் நெப்போலியன் பாலஸ்தீனத்தின் ஜாஃபா நகரைக் கைப்பற்றினான். அவனது படைகள் கிட்டத்தட்ட 2,000 அல்பேனியர்களைக் கொன்றனர்.
- 1814 - பிரான்சின் முதலாம் நெப்போலியன் குரோன் நகரில் உருசியர்களுக்கும் புருசியர்களுக்கும் எதிரான போரில் வெற்றி பெற்றான்.
- 1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வடமேற்கு ஆர்கன்சாவில் அமெரிக்கப் படைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படையினரை வென்றனர்.
- 1876 - அலெக்சாண்டர் கிரகம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1902 - இரண்டாம் போவர் போர்: தென்னாபிரிக்காவின் போவர்கள் பிரித்தானியர்களுக்கு எதிரான கடைசிச் சமரில் வெற்றியீட்டினர்.
- 1911 - மெக்சிக்கோவில் புரட்சி வெடித்தது.
- 1912 - தென் முனையைத் தாம் டிசம்பர் 14, 1911 இல் அடைந்ததாக ருவால் அமுன்சென் அறிவித்தார்.
- 1918 - முதலாம் உலகப் போர்: பின்லாந்து ஜெர்மனியுடன் கூட்டுச் சேர்ந்தது.
- 1936 - லொக்கார்னோ உடன்படிக்கைகள், வெர்சாய் ஒப்பந்தம் ஆகியவற்றிற்கு எதிராக ரைன்லாந்தை ஜெர்மனி கைப்பற்றியது.
- 1951 - கொரியப் போர்: கொரியாவில் ஐநாப் படைகள் சீனப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர்.
- 1969 - கோல்டா மெயிர் இசுரேலின் முதற் பெண் பிரதமரானார்.
- 1989 - மக்கள் சீனக் குடியரசு திபெத்தின் லாசா பகுதியில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தனர்.
- 1996 - பாலஸ்தீனத்தில் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.
- 2006 - காசியில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
- 2007 - இந்தோனீசியாவின் யாஹ்யகர்த்தா விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த கருடா விமானம் வயல் ஒன்றில் வீழ்ந்து வெடித்ததில் 49 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள் [தொகு]
- 1274 - தாமஸ் அக்குவைனஸ், இத்தாலிய கத்தோலிக்க மதகுரு (பி. 1225)
- 1857 - ஜூலியஸ் வாக்னர்-ஜோரெக், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1940)
- 1938 - டேவிட் பால்ட்டிமோர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
- 1938 - ஆல்பர்ட் ஃபெர்ட், பிரெஞ்சு இயற்பியலாளர்
- 1952 - விவியன் ரிச்சர்ட்ஸ், மேற்கிந்தியத் துடுப்பாளர்
இறப்புக்கள் [தொகு]
- கிமு 322 - அரிஸ்டாட்டில், மெய்யியலாளர் (பி. கி.மு. 384)
- 1892 - சேர் வில்லியம் எச். கிரெகரி, இலங்கையின் முன்னாள் ஆளுநர்
- 1932 - அரிஸ்டைட் பிறையண்ட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1862)
- 1944 - கல்லடி வேலுப்பிள்ளை, ஆசுகவி, ஈழத்து எழுத்தாளர் (பி. 1860)
- 1954 - ஓட்டோ டியெல்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1876)
- 1974 - ஜே. பி. சந்திரபாபு, பாடகர், நடிகர் (பி. 1924)
- 1990 - சுத்தானந்த பாரதியார், கவியோகி (பி. 1897)
- 1995 - ஜோர்ஜெஸ் கோஹ்லெர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1946)
- 1997 - எட்வர்ட் பேர்செல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1912)
- 1999 - இஸ்டான்லி குப்ரிக்கு, அமெரிக்கத் திரைப்பட இயக்குனர் (பி. 1928)