அக்டோபர் 4
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(4 அக்டோபர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| << | அக்டோபர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
| MMXIII | ||||||
அக்டோபர் 4 கிரிகோரியன் ஆண்டின் 277வது நாளாகும். நெட்டாண்டுகளில் 278வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 88 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 610 - ஹெராகிளியஸ் ஆபிரிக்காவில் இருந்து கொன்ஸ்டண்டீனப்போலை கப்பல் மூலம் அடைந்து பைசண்டைன் பேரரசன் போக்காஸ் மன்னனை ஆட்சியில் இருந்து கவிழ்த்து பேரரசனானான்.
- 1209 - நான்காம் ஒட்டோ புனித ரோமப் பேரரசனானான்.
- 1537 - மத்தியூ பைபிள் எனப்படும் முதலாவது முழுமையான ஆங்கில விவிலிய நூல் அச்சிடப்பட்டது.
- 1582 - கிரெகொரியின் நாட்காட்டி பாப்பரசர் பதின்மூன்றாம் கிரெகொரியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அக்டோபர் 4 இற்குப் பின்னர் நேரடியாக அக்டோபர் 15 இற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது.
- 1777 - அமெரிக்கப் புரட்சி: பிலடெல்பியாவின் ஜெர்மண்டவுன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் ஜோர்ஜ் வாஷிங்டனின் படைகளை சேர் வில்லியம் ரோவின் பிரித்தானியப் படைகள் தோற்கடித்தன.
- 1824 - மெக்சிகோ குடியரசு ஆகியது.
- 1830 - பெல்ஜியம் நெதர்லாந்து நாட்டில் இருந்து பிரிந்து தனிநாடாகியது.
- 1853 - கிரிமியப் போர்: ஒட்டோமான் பேரரசு ரஷ்யா மீது போரை அறிவித்தது.
- 1883 - ஓரியண்ட் எக்ஸ்பிரஸ் கடுகதி தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
- 1910 - போர்த்துக்கல் குடியரசு அறிவிக்கப்பட்டது. இரண்டாம் மனுவேல் மன்னன் ஐக்கிய இராச்சியத்துக்கு தப்பினான்.
- 1918 - நியூ ஜேர்சியில் ஷெல் கம்பனியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா சொலமன் தீவுகளைக் கைப்பற்றியது.
- 1957 - பண்டா - செல்வா ஒப்பந்தத்திற்கு எதிராக கண்டிக்கு நடைப்பயணம் நடத்தப்பட்டது.
- 1957 - முதலாவது செயற்கைச் செய்மதி ஸ்புட்னிக் 1 பூமியைச் சுற்றி வர விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
- 1958 - பிரான்சின் ஐந்தாவது குடியரசு அமைக்கப்பட்டது.
- 1959 - லூனா 3 விண்ணுக்கு ஏவப்பட்டது. இது சந்திரனைச் சுற்றி வந்து அதன் தொலைவுப் படத்தை பூமிக்கு அனுப்பியது.
- 1963 - கியூபாவை சூறாவளி தாக்கியதில் 7,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- 1965 - ஐக்கிய அமெரிக்காவுக்கு சென்ற முதலாவது பாப்பாண்டவர் பாப்பரசர் ஆறாம் போல் நியூயோர்க் வந்ட்தடைந்தார்.
- 1966 - பசூட்டோலாந்து ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று லெசோத்தோ எனப் பெயர் மாற்றம் பெற்றது.
- 1992 - மொசாம்பிக்கின் 16 ஆண்டு கால உளநாட்டுப் போரை முடிவுக்கு வந்தது.
- 1992 - ஆம்ஸ்டர்டாம் நகரில் குடியிருப்பு மனைகள் மீது விமானம் ஒன்று மோதியதில் தரையில் இருந்த 39 பேர் உட்பட 43 பேர் கொல்லப்பட்டனர்.
- 1997 - ஐக்கிய அமெரிக்காவின் வரலாற்றில் இரண்டாவது மிகப் பெரிய வங்கிக் கொள்ளை வட கரொலைனாவில் இடம்பெற்றது. 17.3 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இவற்றில் 95 விழுக்காடு பணம் திரும்பப் பெறப்பட்டது.
- 2001 - சைபீரியாவில் விமானம் ஒன்றை உக்ரைனின் ஏவுகணை தாக்கியதில் விமானம் கருங் கடலில் வீழ்ந்து 78 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள் [தொகு]
- 1884 - சுப்பிரமணிய சிவா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1925)
- 1904 - திருப்பூர் குமரன், இந்திய விடுதலைப் போராட்ட தியாகி (இ. 1932)
- 1936 - கிறிஸ்தோபர் அலெக்சாண்டர், கட்டடக் கலைஞர்
- 1988 - டெரிக் ரோஸ், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள் [தொகு]
- 1669 - ரெம்பிரான்ட், டச்சு ஓவியர் (பி. 1606)
- 1947 - மாக்ஸ் பிளாங்க், நோபல் பரிசு பெற்ற ஜேர்மனிய இயற்பியலாளர் (பி. 1858)
- 2000 - மைக்கல் ஸ்மித், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1932)
சிறப்பு நாள் [தொகு]
- லெசோத்தோ - விடுதலை நாள் (1966)
- அசிசியின் புனித பிரான்சிசின் திருவிழா (கத்தோலிக்கம்)
- உலக வன விலங்குகள் நாள்
- உலக விண்வெளி வாரம் ஆரம்பம்