4ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

4ஜி (4G) என்பது கையடக்க தொலைபேசி தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் 4ஆம் தலைமுறை என அழைக்கப்படுகின்றது. 3ஜி என்னும் மூன்றாம் தலைமுறை நடமாடும் தொலைத்தொடர்பு தொழினுட்பத்தைத் தொடர்ந்து, மேம்பாட்டுடன் 4ஜி அறிமுகப்படுத்தப்பட்டது.

4ஆம் தலைமுறை தொழினுட்பம் பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியத்தினால் வரையறுக்கப்பட்ட திறன்களை வழங்க வேண்டும். இத்தொழினுட்பம் திருத்தப்பட்ட கையடக்க வலை அணுகல், இணையவழி ஒலி பரிமாற்றம், விளையாட்டு சேவைகள், உயர்-வரையறு கையடக்கத் தொலைக்காட்சி, காணொளிக்காட்சி, முப்பரிமாணத் தொலைக்காட்சி, மற்றும் மேகக் கணிமை போன்ற சேவைகளுக்கு பொருந்துவதாகவும், இவ்வசதிகள் தற்பொழுது வழங்கப்படும் நிலையிலும், இதனின் மேமபடுத்தப்பட்ட நிலையிலும் வழங்க ஏதுவாகவும் உள்ளது.

4ஜி முதல் முறையாக மொபைல் வை மேக்ஸ் (WiMax) சேவை 2006இல் தென் கொரியாவிலும் மற்றும் எல்.டி.ஈ சேவை நோர்வே, சுவீடன் நாடுகளில் வணிக நோக்கம் கருதி ஆரம்பிக்கபட்டது.

4ஜி வழங்கும் நாடுகள்[தொகு]

ஆப்கானிஸ்தான்[தொகு]

19 பிப்ரவரி 2013 எடிசலாட் ஆப்கானிஸ்தான் 4ஜி (எல்.டி.ஈ) தொழிநுட்பத்தின் பரீட்சாத்த சேவையை தொடங்குவதாக அறிவித்தது.

ஆப்ரிக்கா[தொகு]

சபரி கொம் (Safaricom) கிழக்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் உள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனம் 2010 அக்டோபரில் 4ஜி சேவையை வழங்குவதாக அறிவித்து பின் 2012 இல் தனது சேவையை வழங்கியது.

ஆஸ்திரேலியா[தொகு]

டெல்ஸ்டிரா 4ஜி எல்.டி.ஈ (LTE) சேவையை 2011 இறுதிக்குள் அனைத்து ஆஸ்திரேலிய தலைநகர் நகரங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிராந்திய மையங்கள் மத்திய வர்த்தக மாவட்டங்களில் 4 ஜி யை மேம்படுத்த விரும்புகிறது என்று, 15 பிப்ரவரி 2011இல் அறிவித்தது. பின் செப்டம்பர் 2011இல் நாட்டின் முதல் 4ஜி எஃப்டி-எல்.டி.ஈ (FD-LTE) சேவை தொடங்கப்பட்டது.[1]

பெல்ஜியம்[தொகு]

28 ஜூன் 2011 அன்று 4ஜி சேவையை வழங்க தீர்மானித்தது.[2] 2012, ஜூலை 3ஆம் நாள் இந்த நுட்பம் 5 முக்கிய நகரங்களில் தனது பரீட்சாத்த சேவையை தொடங்கியது பின் 2012 ஆண்டின் இறுதியில் சேவை வணிகமக்கபட்டது.[3]

பிரேசில்[தொகு]

27 ஏப்ரல் 2012, பிரேசில் டெலிகாம் 4ஜி சேவை ஆரம்பிப்பதாக அறிவித்து 2013 ஆரம்பத்தில் 6 நகரங்களில் 4ஜி சேவையை தொடங்கியது.[4]

கனடா[தொகு]

தெலுஸ்(Telus) மற்றும் பெல் கனடா நிறுவனங்கள் 4ஜி வயர்லெஸ் பிராட்பேண்ட் கனடாவில் தொடங்கியது.

பிரான்ஸ்[தொகு]

22 நவம்பர் 2012 ஆரஞ்சு (Orange) நிறுவனம் 4ஜி திட்டம் தொடங்கப்பட்டது.பின்னர், 29 நவம்பர் 2012 எஸ்.எப்.ஆர்( SFR) 4ஜி சேவை தொடங்கப்பட்டது. இது பிரான்சில் முதல் 4ஜி வர்த்தக வெளியீட்டு இருந்தது.

இந்தியா[தொகு]

ஜூன் 2011 4 இந்தியாவில் பிஎஸ்என்எல் இந்தியாவின் முதல் 4ஜி வைமேக்ஸ் பிராட்பேண்ட் சேவைகளை கொச்சி கேரளா தொடங்கப்பட்டது.

பார்தி ஏர்டெல் ஏப்ரல் 10, 2012 இல் கொல்கத்தாவில் டீ.டி எல்.டி.ஈ (TD-LTE) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவின் முதல் 4ஜி டீ.டி எல்.டி.ஈ (TD-LTE) சேவையை தொடங்கியது.[5]

இத்தாலி[தொகு]

டிசம்பர் 2012 முதல் பாதி முதல் இத்தாலியின் முக்கிய நகரங்களில் சிலவற்றில் 4ஜி சேவையை அறிமுகபடுத்தபட்டது.

கஜகஸ்தான்[தொகு]

2012 இறுதியில் தேசிய தொலைத்தொடர்பு ஆணைக்குழு 4 ஜி சேவைகளை தொடங்கியது.2013 இறுதியில் சேவையை முழு நாடு முழுவதும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கு[தொகு]

செப்டம்பர் 2011 இல்[1] சவுதி அரேபியாவின் மொபிலி நிறுவனம் சோதனைக்கு பின் 4ஜி சேவைக்கு தயார் என அறிவித்தது.

2012 இல் ஆல்ஃபா மற்றும் டச் நிறுவனங்கள் லெபனானில் சில மாதங்களுக்கு பிறகு 4ஜி தயாராக இருக்கும் அறிவித்தது.அதிகாரப்பூர்வமாக ஏப்ரல் 2013 இல் தொடங்கப்பட்டது.

டிசம்பர் 2011 இல் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் எடிசலாட் நாட்டின் நகர்ப்புற பகுதிகளில் சிலவற்றில் 4ஜி சேவையை வழங்கியது.

பிப்ரவரி 2013 இல் ஓமன் நாட்டின் நவ்ராஸ் (Nawras) வணிகரீதியாக 4ஜி தொடங்கியது.[6][7]

ஏப்ரல் 2013 இல் க்யு டெல் (Qtel) (இப்போத ஊரெடூ (Ooredoo) அழைக்கப்படுகிறது) கத்தார்ரில் வணிக ரீதியில் அதன் 4ஜி நடத்த அமைக்கப்படுகிறது.[8]

பாக்கிஸ்தான்[தொகு]

நெதர்லாந்து[தொகு]

நியூசிலாந்து[தொகு]

பிலிப்பைன்சில்[தொகு]

ருமேனியாவில்[தொகு]

ஸ்காண்டிநேவியா[தொகு]

தென் கொரியா[தொகு]

இலங்கை[தொகு]

  • 30 டிசம்பர் 2012 இல் டயலொக் பிராட்பேண்ட் வலையமைப்பு இலங்கையின் முதல் ​​டீ.டி-எல் டி ஈ(TD-LTE) சேவை தொடங்கியது.[9]
  • 2 ஏப்ரல் 2013 இல் டயலொக் அக்சியாடா தென் ஆசியாவின் முதல் முறையாக இலங்கையில் எஃப்டி-எல் டி ஈ(FD-LTE) சேவை தொடங்கியது.[10]
  • 2 ஜூன் 2013 இல் மொபிடெல் இலங்கையில் எஃப்டி-எல் டி ஈ(FD-LTE) சேவை தொடங்கியது.[11]

தாய்லாந்து[தொகு]

ஐக்கிய ராஜ்யம் மற்றும் அயர்லாந்து[தொகு]

4ஜி எனப்படும் புதிய நான்காவது தலைமுறை உயர் வேக மொபைல் நெட்வொர்க் சேவை, விரைவில் இங்கிலாந்து கிடைக்க வேண்டும். அதை ரோல் அவுட் ஆரம்பத்தில் 2012 இறுதியில் இங்கிலாந்து முழுவதும் 10 நகரங்களில், பிளஸ் மேலும் ஆறு நகரங்களில் இலக்கு

அமெரிக்காவில்[தொகு]

20 செப்டம்பர் 2007 அன்று வெரிசோன் வயர்லெஸ் நிறுவனம் வோடபோன் குழுவுடன் இணைந்து ஒரு கூட்டு முயற்சி திட்டத்தினை அறிவித்தது.4ஜி தரமான எல் டி ஈ(LTE) வலையமைப்பு தொடர்பாக.அவர்கள் 2010 இறுதிக்குள் தங்களது சேவை தொடங்கும் என்று கூறினார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Telstra to launch 4G mobile broadband network by end 2011 பரணிடப்பட்டது 2013-05-13 at the வந்தவழி இயந்திரம் Telstra, February 15, 2011
  2. "Roll-out of the first 4G network in Belgium and strategic partnership with Fon". Archived from the original on 2013-12-18. பார்க்கப்பட்ட நாள் 2013-05-14.
  3. "Belgacom extends 4G network in five more cities". Archived from the original on 2013-12-18. பார்க்கப்பட்ட நாள் 2013-05-14.
  4. Anatel will begin reviewing 4G tender proposals and reveal auction date on 5 June
  5. "Airtel launches 4G in Kolkata — The Times of India". The Times Of India. http://timesofindia.indiatimes.com/business/india-business/Airtel-launches-4G-in-Kolkata/articleshow/12617622.cms. 
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-03-30. பார்க்கப்பட்ட நாள் 2013-05-21.
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-05-29. பார்க்கப்பட்ட நாள் 2013-05-21.
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-15. பார்க்கப்பட்ட நாள் 2013-05-21.
  9. "Dialog launches first fixed 4G-LTE service in Sri Lanka". Archived from the original on 2013-12-15. பார்க்கப்பட்ட நாள் 2013-10-19.
  10. "Dialog Launches First Mobile 4G-LTE Service". Archived from the original on 2013-05-18. பார்க்கப்பட்ட நாள் 2013-10-19.
  11. "Mobitel Launches Mobile 4G-LTE Service". Archived from the original on 2013-06-09. பார்க்கப்பட்ட நாள் 2013-10-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=4ஜி&oldid=3540242" இலிருந்து மீள்விக்கப்பட்டது