சூலை 3
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(3 ஜூலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| << | சூலை 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | 31 | |||
| MMXIII | ||||||
சூலை 3, கிரிகோரியன் ஆண்டின் 184வது நாளாகும். நெட்டாண்டுகளில் 185வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 181 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 324 - ஏட்றியனோப்பில் நகரில் இடம்பெற்ற சமரில் ரோமப் பேரரசன் முதலாம் கொன்ஸ்டன்டீன் லிசீனியசை வென்றான்.
- 987 - ஹியூ காப்பெட் என்பவன் பிரான்சின் மன்னன் ஆனான். இவனது வம்சத்தினர் 1792 இல் பிரெஞ்சுப் புரட்சி இடம்பெறும் வரை பிரான்சை ஆண்டனர்.
- 1250 - பிரான்சின் ஒன்பதாம் லூயி எகிப்தில் ஏழாவது சிலுவைப் போரில் ஈடுபட்டிருந்தபோது பாய்பர்களால் பிடிபட்டான்.
- 1608 - கியூபெக் நகரம் உருவாக்கப்பட்டது.
- 1754 - ஏழாண்டுப் போர்: ஜோர்ஜ் வாஷிங்டனின் படைகள் நெசசிட்டி கோட்டையை பிரெஞ்சுப் படைகளிடம் இழந்தனர்.
- 1775 - அமெரிக்கப் புரட்சிப் போர்: ஜோர்ஜ் வாஷிங்டன் மசாசுசெட்சில் இராணுவத்துக்குத் தலைமை வகித்தார்.
- 1778 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பென்சில்வேனியாவில் பிரித்தானிய இராணுவத்தினர் பெண்கள், குழந்தைகள் உட்பட 360 பேரைக் கொலை செய்தனர்.
- 1778 - புருசியா ஆஸ்திரியாவின் மேல் படையெடுத்தது.
- 1844 - ஐஸ்லாந்தில் கடைசிச் சோடி பெரிய ஓக் பறவைகள் கொல்லப்பட்டன.
- 1848 - அமெரிக்கக் கன்னித் தீவுகளில் பீட்டர் வொன் ஸ்கொல்ட்டன் என்பவரால் அடிமைகள் விடுவிக்கப்பட்டனர்.
- 1867 - தமிழ்நாடு விழுப்புரம் வளவனூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- 1866 - புருசியாவின் வெற்றியுடன் ஆஸ்திரிய-புரூசியப் போர் முடிவுக்கு வந்தது.
- 1872 - யாழ்ப்பாணக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
- 1890 - ஐடஹோ ஐக்கிய அமெரிக்காவின் 43வது மாநிலமாக இணைந்தது.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: பெலரஸ்சின் தலைநகர் மின்ஸ்க் சோவியத் படையினரால் நாசி ஜேர்மனியிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
- 1962 - பிரான்சுக்கு எதிரான அல்ஜீரிய விடுதலைப் போர் நிறைவு பெற்றது.
- 1969 - சோவியத்தின் என்1 என்ற ஏவுகணை ஏவுதளத்திலேயே வெடித்துச் சிதறியது.
- 1970 - பிரித்தானிய விமானம் ஸ்பெயினில் மலையொன்றுடன் மோதியதில் 113 பேர் கொல்லப்பட்டனர்.
- 1988 - அமெரிக்க போர்க் கப்பல் பாரசிக வளைகுடா மீது பறந்த ஈரானிய பயணிகள் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த அனைத்து 290 பேரும் கொல்லப்பட்டனர்.
- 2006 - பூமியில் இருந்து 432,308 கிமீ தூரத்தில் 2004 XP14 என்ற சிறுகோள் பறந்தது அவதானிக்கப்பட்டது.
பிறப்புகள் [தொகு]
- 1883 - பிரான்ஸ் காஃவ்கா, எழுத்தாளர் (இ. 1924)
- 1924 - எஸ். ஆர். நாதன், சிங்கப்பூர் அதிபர்
- 1942 - அடூர் கோபாலகிருஷ்ணன், கேரளத் திரைப்பட இயக்குநர்
- 1962 - டாம் க்ரூஸ், அமெரிக்க நடிகர்
- 1980 - ஹர்பஜன் சிங், இந்தியக் கிரிக்கெட் வீரர்