32 இருமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

32-இருமம் என்பது கணினி கட்டுமானத்தில், 32 இலக்க இருமங்களை அடிப்படையாகக் கொண்டு நினைவகங்களையும், தரவுகளையும் கொண்டுள்ள நுண்செயலிகளையும், நுண்கணினியும் இவ்வகையான கட்டுமானத்தில் இயங்கி வருகின்றவை 32-இருமம் கணினி எனவும் அதற்கு பயன்படுத்தப்படும் மென்பொருட்களும் இதனை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் மென்பொருட்களை, 32 - இரும மென்பொருள் (ஆங்கிலத்தில் 32 - bit application) என அழைப்பார்கள்.

இந்த 32-இருமத்தினாலான இன்டிசரினுடைய மதிப்பு, 0 முதல் 4 294 967 295 வரை இருக்கும். இவ்வாறு, ஒரு 32-இரும நினைவக முகவரி நுண்சயலியானது நேரடியாக 4 ஜிகாபைட் வரை நினைவகத்தில் இயக்க முடியும்.

கட்டுமானம்[தொகு]

32-இரும முறை பயன்படுத்தப்பட்ட கட்டுமானங்களில் ஐ.பி.எம் நிறுவனத்தின் ஐபிஎம் சிஸ்டம்/360 வகை மிகவும் முன்னோடியானது, அதன்பிறகு டி.இ.சி. நிறுவனத்தின் வேக்ஸ் (VAX), மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா 68கெ, ஏ.ஆர். எம் கட்டுமானம், இன்டெல் நிறுவனத்தின் ஐஏ-32, மற்றும் ஸ்பார்க் (SPARC)32- இரும பதிப்பு, மிப்ஸ் கட்டுமானம் (MIPS architecture), பவர்பிசி (PowerPC), மற்றும் பிஏ-ரிஸ்க் (PA-RISC) கட்டுமானம் உள்ளிட்டவை 32 - இருமத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டன.

படிமங்கள்[தொகு]

எண்முறை படிமங்களில், 32-இருமம் என்பது 24-இருமம் வண்ணத்தின் ஆழத்தினையும், 8-இருமம் ஆல்பா கலவையையும் குறிக்கிறது.

32- இரும கோப்பு வடிவம்[தொகு]

32-இரும கோப்பு வடிவமானது, 32- இருமத்தை(அல்லது 4 பைட்டுகளை) அடிப்படையாகக் கொண்ட ஒரு இரும கோப்பு வடிவமாகும். எ.கா. மேம்படுத்தப்பட்ட மீக்கோப்பு வடிவம் (வின்டோசு மீக்கோப்பு வடிவம்).

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=32_இருமம்&oldid=1370334" இருந்து மீள்விக்கப்பட்டது