அக்டோபர் 28
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(28 அக்டோபர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| << | அக்டோபர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
| MMXIII | ||||||
அக்டோபர் 28 கிரிகோரியன் ஆண்டின் 301வது நாளாகும். நெட்டாண்டுகளில் 302வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 64 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- 306 - மாக்செண்டியஸ் ரோமப் பேரரசன் ஆனான்.
- 312 - முதலாம் கொன்ஸ்டண்டீன் மாக்செண்டியசைத் தோற்கடித்து ரோமப் பேரரசனானான்.
- 1492 - ஸ்பெயின் நாட்டுக் கடலோடியான கொலம்பசும் அவரது கூட்டத்தினரும் வழி தவறிச் சென்று கியூபாவில் கரை இறங்கினர்.
- 1775 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பொஸ்டனில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதை பிரித்தானியா தடுத்தது.
- 1834 - சுவான் ஆற்றுக் குடியேற்றத்தில் (தற்போதய மேற்கு அவுஸ்திரேலியாவில்) பழங்குடிகளுக்கும் ஆங்கிலேயக் குடியேற்ற வாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் பல பழங்குடியினர் கொல்லப்பட்டனர்.
- 1886 - நியூ யார்க்கில் அமெரிக்க அதிபர் குரோவர் கிளீவ்லாண்ட் விடுதலைச் சிலையைத் திறந்து வைத்தார்.
- 1918 - முதலாம் உலகப் போர்: ஆஸ்திரியா-ஹங்கேரியிடம் இருந்து செக்கொசிலவாக்கியா விடுதலை பெற்றது.
- 1918 - மேற்கு கலீசியாவில் புதிய போலந்து அரசு அமைக்கப்பட்டது.
- 1922 - முசோலினி தலைமையில் இத்தாலிய பாசிஸ்டுகள் ரோம் நகரை சென்றடைந்து இத்தாலிய அரசைக் கைப்பற்றினர்.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலி, அல்பேனியா ஊடாக கிறீஸ் நாட்டைக் கைப்பற்றியது. இந்நாள் கிறீசின் "ஓக்கி நாள்" (Όχι=No, இல்லை) ஆக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.
- 1941 - லித்துவேனியாவின் கௌனாஸ் என்ற இடத்தில் நாசி ஜெர்மனியர் 9,000 யூதர்களை சுட்டுக் கொன்று அதே இடத்தில் புதைத்தனர்.
- 1942 - கனடா முதல் அலாஸ்கா வரையான அலாஸ்கா நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.
- 1942 - போலந்தின் கிராக்கொவ் நகரில் இருந்து 2,000 யூத சிறுவர்களும் 6,000 பெரியவர்களும் நாசிகளினால் வதைமுகாமுக்கு அனுப்பப்பட்டனர்.
- 1948 - சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் போல் முல்லர் டிடிரியைக் கண்டுபிடித்தமைக்காக நோபல் பரிசு பெற்றார்.
- 1962 - கியூபாவிலிருந்து சோவியத் ஏவுகணைகளை அகற்றுவதாக சோவியத் தலைவர் நிக்கிட்டா குருஷேவ் அறிவித்தார்.
- 1971 - ஐக்கிய இராச்சியம் தனது முதலாவது (2007 வரை ஒன்றே ஒன்றுமான) "புரொஸ்பெரோ" என்ற செய்மதியை விண்ணுக்கு ஏவியது.
- 1972 - முதலாவது ஏர்பஸ் A300 பறக்க விடப்பட்டது.
- 1985 - சண்டினீஸ்டாவின் டானியேல் ஒர்ட்டேகா நிக்கராகுவாவின் அதிபரானார்.
- 1985 - மிக்கைல் கொர்பச்சோவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.
- 2001 - பாகிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் புகுந்து தீவிரவாதிகள் கண்முடித்தனமாக சுட்டதில் பெண்கள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.
- 2001 - கேரளாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக நாகர்கோயில் பகுதியில் இலேசான நில அதிர்வு ஏற்பட்டது.
- 2006 - 1930களில் ரஷ்யக் கம்யூனிஸ்டுகளால் உக்ரேனின் பிகீவ்னியா காட்டில் கொலை செய்யப்பட்ட 817 உக்ரேனியர்களினது இறுதிக் கிரியைகள் அவர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தில் இடம்பெற்றன.
- 2006 - தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே 8 மாதங்களாகத் தடைப்பட்டிருந்த அமைதிப் பேச்சுக்கள் ஜெனீவாவில் மீண்டும் ஆரம்பமாயின.
பிறப்புக்கள்[தொகு]
- 1955 - பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர், கணிப்பொறி மென்பொருள் வல்லுனர்
- 1956 - மஹ்மூத் அஹ்மதிநெஜாத், ஈரான் குடியரசுத் தலைவர்
இறப்புகள்[தொகு]
- 1627 - ஜஹாங்கீர், இந்தியாவின் முகலாயப் பேரரசின் மன்னன் (பி. 1569)
- 1704 - ஜான் லாக், ஆங்கிலேய தத்துவவியலாளர் (பி. 1632)
- 1900 - மாக்ஸ் முல்லர், ஜெர்மனிய மொழியியலாளர் (பி. 1823)
சிறப்பு நாள்[தொகு]
- செக் குடியரசு, சிலவாக்கியா - தேசிய நாள் (1918)