2010 ஆர்எக்சு30

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

2010 ஆர்எக்சு30 (2010 RX30) என்பது ஒரு சிறுகோள் (asteroid) ஆகும். இது 2010, செப்டம்பர் 8 ஆம் நாள் 0951 ஜிஎம்டி மணிக்கு பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் கடந்து சென்றது. இது பூமிக்குக் கிட்டவாக சப்பானின் தெற்குப் பகுதிக்கு மேல் 154,000 மைல்கள் (248,000 கிமீ) உயரத்தில் பூமியைக் கடந்தது[1].

இதன் விட்டம் 33 அடிக்கும் 65 அடிக்கும் (10-20 மீ) இடையில் இருந்ததாக நாசா மதிப்பிட்டுள்ளது[2].

இச்சிறுகோள் 2010 செப்டம்பர் 5 ஆம் நாள் அரிசோனாவின் டூசோன் நகரில் நிறுவப்பட்டுள்ள கட்டலீனா விண்வெளி ஆய்வு மையத்தினால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனுடன் 2010 ஆர்எஃப்12 என்ற சிறுகோளும் கடந்துள்ளது அவதானிக்கப்பட்டுள்ளது[3].

இவற்றையும் பார்க்க[தொகு]

  • 2010 ஆர்எஃப்12, இதே நாளில் பூமியைக் கடந்த வேறொரு சிறுகோள்

மேற்கோள்கள்[தொகு]

  1. ஃபின்ச், எல். (செப்டம்பர் 8, 2010). "Harvard scientists keep an eye on wayward asteroids". த பாஸ்டன் குளோப். http://www.boston.com/news/local/breaking_news/2010/09/harvard_scienti_1.html. 
  2. சவ், டெனீஸ் (செப்டம்பர் 8, 2010). "Asteroid near-misses actually common, scientists say". ஸ்பேஸ்.கொம்]]. http://www.space.com/scienceastronomy/earth-asteroid-flybys-common-100908.html. 
  3. தான், கெர் (செப்டம்பர் 8, 2010). "Second Asteroid to Buzz Earth Later Today". National Geographic News (தேசிய புவியியல் கழகம்). http://news.nationalgeographic.com/news/2010/09/100908-asteroids-earth-nasa-catalina-sky-survey-science-space/. 

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=2010_ஆர்எக்சு30&oldid=1356960" இருந்து மீள்விக்கப்பட்டது