2009 சூலை 22 சூரிய கிரகணம்
| ஜூலை 22, 2009 சூரிய கிரகணம் | |
|---|---|
| கிரகணத்தின் வகை | |
| காம்மா | 0.0696 |
| பரிமாணம் | 1.0799 |
| சாரொசு | 136 (37 of 71) |
| அதியுயர் கிரகணம் | |
| காலம் | 398 s (6 நிமி 38.8 செக்) |
| இடம் | பசிபிக் பெருங்கடல் |
| ஆள்கூறுகள் | |
| பட்டையின் அதியுயர் அகலம் |
258.4 கிமீ |
| நேரங்கள் (UTC) | |
| பகுதி கிரகணம் | 23:58:18 (ஜூலை 21) |
| முழு கிரகணம் | 00:51:16 |
| நடு கிரகணம் | 00:54:31 |
| பெரும் கிரகணம் | 02:35:21 |
2009 சூலை 22 சூரிய கிரகணம் (solar eclipse of July 22, 2009) 21ம் நூற்றாண்டின் மிக நீண்ட முழுமையான சூரிய கிரகணம் ஆகும். இந்நிகழ்வு சில இடங்களில் 6 நிமிடங்கள் 39 செக். வரை நீட்டித்திருந்தது[1]. இந்நிகழ்வைக் காண்பதற்காக கிழக்கு சீனா, நேபாளம், மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு பெருந்தொகையான உல்லாசப்பயணிகளும் வானியல் நோக்கர்களும் சென்றிருந்தனர்[1][2][3].
இந்த கிரகணம் 1991 ஆம் ஆண்டு ஜூலை 11 இல் நிகழ்ந்த பெரும் சூரிய கிரகணத்தைப் போல சாரோசு தொடரின் ஒரு பகுதியாகும். இத்தொடரின் அடுத்த நிகழ்வு 2032 இல் நிகழும்[4].
இந்நிகழ்வானது ஒரே மாதத்தில் நிகழ்ந்த மூன்று கிரகணங்களில் இரண்டாவதாகும். 2009 இல் ஜூலை 7 ஆம் நாளில் சந்திர கிரகணமும் ஆகஸ்ட் 6 ஆம் நாளில் இன்னுமொரு சந்திர கிரகணமும் நிகழ்ந்தன.
பொருளடக்கம் |
சூரியகிரகணம் தெரிந்த இடங்கள் [தொகு]
வடக்கு மாலை தீவுகள், வடக்கு இந்தியா, கிழக்கு நேபாளம், வடக்கு வங்காள தேசம், பூட்டான், வடக்கு பிலிப்பீன்ஸ், மியான்மாரின் வடக்கு முனை, மத்திய சீனா, பசிபிக் பெருங்கடல் (ரியூகியூ தீவுகள், மார்ஷல் தீவுகள், கிரிபட்டி உட்பட) ஆகிய இடங்களில் சூரிய கிரகணத்தை அவதானிக்க முடிந்தது.
இந்தியாவில் [தொகு]
முழுமையான கிரகணம் இந்தியாவின் சூரத், உஜ்ஜைன், இந்தூர், போபால், வாரணாசி, அலகாபாத், கயா, பாட்னா, ஜல்பைகுரி, குவஹாத்தி, இடாநகர் ஆகிய நகரங்களில் காணக்கூடியதாக இருந்தது[5]. பீகாரின் டரெகானா நகரிலேயே மிக அழகான சூரிய கிரகணம் தென்படும் என எதிர்வு கூறப்பட்டது[6][7]. தரெக்னாவில் ஏராளமான விண்வெளி ஆர்வலர்களும், சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும், முக்கியப் பிரமுகர்களும் சூரிய கிரகணத்தைக் காண பெருமளவில் கூடியிருந்தார்கள்[8].
இலங்கையில் [தொகு]
இலங்கையில் சூரிய கிரகணத்தை நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் அவதானிக்க முடிந்தது. கொழும்பு, யாழ்ப்பாணம், காலி உட்பட பல இடங்களில் இச்சூரிய கிரகணம் பகுதியாகத் தென்பட்டது. யாழ். குடா நாட்டில் காலை 5.58 மணி முதல் காலை 7.15 மணி வரையும் கொழும்பில் காலை 6.03 மணி முதல் 7.12 மணி வரையும் காலியில் காலை 6.03 மணி முதல் காலை 7.11 மணி வரையும் தென்பட்டது[9]
படிமங்கள் [தொகு]
முழு கிரகணம் [தொகு]
-
வங்காளதேசம், கூரிகிராம் நகரில்
பகுதி கிரகணம் [தொகு]
-
சப்பான், மியாசாக்கி நகரில்
-
சீனாவின் நுகான் நகரில்
-
பிலிப்பீன்ஸ், குவெசோன் நகரில்
-
Partial eclipse from Daegu, South Korea.jpg
தென் கொரியாவின் டாயெகு நகரில்
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 AFP: Solar eclipse sparks tourism fever in China
- ↑ Scientists: China the best place to observe longest solar eclipse in 2,000 years_English_Xinhua
- ↑ Indian students on solar eclipse 'odyssey' to China
- ↑ NASA: Total Solar Eclipses with Durations Exceeding 06m 00s (2001 to 3000 )
- ↑ NASA - Total Solar Eclipse of 2009 July 22
- ↑ Eclipse gives Bihar village its days in the sun
- ↑ [http://www.news-relay.com/latest-news/longest-total-solar-eclipse-2009-nasa-declares-taregana-in-bihar-is-the-best-location/ Longest & Total Solar Eclipse 2009: NASA declares Taregana in Bihar is the Best Location to View Surya Grahan
- ↑ 'I'll remember eclipse all my life'
- ↑ இலங்கை உட்பட ஆசிய நாடுகளெங்கும் தென்பட்ட அபூர்வ சூரிய கிரகணம்; மக்கள் ஆர்வத்துடன் அவதானிப்பு, தினகரன்
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Solar eclipse of 2009 July 22 தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம், செ.பொ.கோபிநாத்தின் பதிவு
- Solar eclipse of July 22, 2009: Time & Place in Indian cities
- NASA homepage for July 22, 2009 total solar eclipse
- The Longest eclipse of the 21st century time – July 22 2009
- Solar Eclipse July 2009 time in India
- The 21st century’s longest total solar eclipse to be Internet broadcast worldwide
- How To Watch July 22, 2009 Total Solar Eclipse Live On Web
- City of Brass at Beliefnet.com: The longest solar eclipse of the 21st century
- Solar Eclipse Could Create Chaos AP
- Watch Solar eclipse live from Guwahati
- Solar Eclipse July 2009 time
- July eclipse is best chance to look for gravity anomaly
- Solar eclipse: All roads lead to Bihar
