2006 உலகக்கோப்பை காற்பந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(2006 உலகக்கோப்பை கால்பந்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
2006 FIFA World Cup - ஜெர்மனி
FIFA Fußball-Weltmeisterschaft
Deutschland 2006
அதிகாரப்பூர்வ சின்னம்
அதிகாரப்பூர்வ சின்னம்
அணிகள் 32
(தகுதிச் சுற்றில் பங்கேற்றவை): 198)
இடம் ஜெர்மனி
நடைபெறும் ஆட்டங்கள் 64

2006 உலகக்கோப்பை கால்பந்து அல்லது 2006 பிபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து போட்டித்தொடரின் இறுதிப்போட்டிகள் ஜெர்மனியில் ஜூன் 9 முதல் ஜூலை 9 2006 வரை நடைபெற்றன. தகுதிச் சுற்றில் போட்டியிட்ட 198 அணிகளிலிருந்து 32 அணிகள் இறுதிப் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. இறுதிப் போட்டியில் இத்தாலி பிரான்சினைத் தோற்கடித்து உலகக் கோப்பையை வென்றது.

ஜூன் 2000 -ஆம் ஆண்டில் ஜெர்மனி நாட்டிற்கு இப்போட்டியை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இவ்வுரிமைக்காக தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மொராக்கோ, பிரேசில் ஆகிய மற்ற நாடுகளும் போட்டியிட்டன.

ஆடு களங்கள்[தொகு]

மொத்தம் 12 ஜெர்மானிய நகரங்களில் போட்டிகள் நடைபெற்றன.

அணிகள்[தொகு]

தகுதி பெற்ற நாடுகள்

குழுக்கள்[தொகு]

இறுதிப்போட்டியில் பங்குபெறும் 32 அணிகளும் A,B,C,D,E,F,G,H எனும் எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.[1]

குழு A குழு B குழு C குழு D
ஜெர்மனி இங்கிலாந்து அர்ஜெண்டினா மெக்சிகோ
கோஸ்டா ரிகா பராகுவே  ஐவரி கோஸ்ட்  ஈரான்
 போலந்து  டிரினிடாட் மற்றும் டொபாகோ  செர்பியாவும் மொண்டெனேகுரோவும்  அங்கோலா
 எக்குவடோர்  சுவீடன்  நெதர்லாந்து  போர்த்துகல்
குழு E குழு F குழு G குழு H
 இத்தாலி பிரேசில்  பிரான்சு  எசுப்பானியா
 கானா  குரோவாசியா  சுவிட்சர்லாந்து  உக்ரைன்
 ஐக்கிய அமெரிக்கா  ஆத்திரேலியா  தென் கொரியா  தூனிசியா
 செக் குடியரசு  சப்பான்  டோகோ  சவூதி அரேபியா

நேரடி ஒளிபரப்பு[தொகு]

உலகம் முழுதும் கால்பந்து ரசிகர்களை கவர்வதற்காக நூற்றுக்கும் அதிகமான தொலைக்காட்சி அலைவரிசைகளில் கால்பந்து போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன . இந்தியாவில் ஈ.எஸ்.பி.என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்த போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்தன . CAS ( Conditional Access System ) அமலாக்கத்தில் உள்ள சென்னை நகரத்தில் எஸ்.சி.வி நிறுவனம் சிறப்பு ஏற்பாடுகளின் அடிப்படையில் ஈ.எஸ்.பி.என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியை ஒளிபரப்பியது. இலங்கையில் அரச தொலைக்காட்சியான சனல் ஐ உலகக் கிண்ணப் போட்டிகளை ஒளிபரப்பியது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஆங்கிலம்[தொகு]

தமிழ்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=2006_உலகக்கோப்பை_காற்பந்து&oldid=3607236" இலிருந்து மீள்விக்கப்பட்டது