1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்புகள்
| இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்கள் |
|---|
1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்புகள் சனிக்கிழமை 1998, பெப்ரவரி 14 ஆம் நாள் தமிழ்நாடு, கோயம்புத்தூர் நகரில் இடம்பெற்றன. 35 ஆண்கள், 10 பெண்கள், ஒரு குழந்தை உட்பட மொத்தம் 46 பேர் இத்தொடர் குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்டனர். மேலும் 2000 பேர் காயமடைந்தனர். 11 வெவ்வேறு இடங்களில் 12 கிமீ சுற்றுவட்டத்தில் மொத்தம் 13 குண்டுகள் வெடிக்கப்பட்டன. 4 குண்டுகள் ஆர். எஸ். புரம் என்ற இடத்திலும், இரண்டு பேருந்து நிலையத்திற்கு அருகிலும், ஒன்று கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அருகிலும், மற்றொன்று "உக்கடம்" பகுதியிலும் வெடித்தன. பாஜக தலைவர் எல். கே. அத்வானி உரையாற்றவிருந்த இடத்துக்கு 100 மீ தூரத்திலேயே முதலாவது குண்டு வெடித்தது. இக்குண்டுவெடிப்புகளுக்கு அல்-உம்மா என்ற தீவிரவாத அமைப்பு காரணமெனக் குற்றம் சாட்டப்பட்டது[1].
பொருளடக்கம் |
[தொகு] பின்விளைவு
பிப்ரவரி 15 அன்று காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் சந்தேகத்திற்குரிய அல்-உம்மாவைச் சேர்ந்த 6 இளைஞர்கள் திருமால் தெருவில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள், பிப்ரவரி 17 அன்று அல்-அமீன் காலனியில் கவனிப்பார் இன்றியிருந்த குண்டு வெடித்ததில் விளையாடிக்கொண்டிருந்த 4 இஸ்லாமிய சிறுவர்கள் இறந்தார்கள். இக்குண்டுத் தாக்குதல்களை அடுத்து சில நாட்களில் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பான அல்-உம்மா தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்கப்பட்டது.
[தொகு] குற்றச்சாட்டு
இக்குண்டுத்தாக்குதல்களின் சூத்திரதாரி எனக்கருதப்படும் எஸ். ஏ. பாஷா உட்பட 72 பேர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டனர்[2].
[தொகு] இதையும் பார்க்கவும்
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Basha, 72 others convicted for Coimbatore blasts The Pioneer - August 1, 2007
- ↑ Basha, 72 others convicted for Coimbatore blasts The Pioneer - August 1, 2007