1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1992 பென்சன் & ஹெட்சசு உலகக்கிண்ணம்
1992 Benson and Hedges World Cup
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
துடுப்பாட்ட வடிவம்ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
போட்டித் தொடர் வடிவம்தொடர்சுழல் முறை, வெளியேற்றம்
நடத்துனர்(கள்) ஆத்திரேலியா
 நியூசிலாந்து
வாகையாளர் பாக்கித்தான் (1-ஆம் தடவை)
மொத்த பங்கேற்பாளர்கள்9
மொத்த போட்டிகள்39
தொடர் நாயகன்நியூசிலாந்து மார்ட்டின் குரோவ்
அதிக ஓட்டங்கள்நியூசிலாந்து மார்ட்டின் குரோவ் (456)
அதிக வீழ்த்தல்கள்பாக்கித்தான் வசீம் அக்ரம் (18)
1987
1996

1992 துடுப்பாட்ட உலகக் கிண்ணம் (1992 Cricket World Cup, கிரிக்கெட் உலகக்கோப்பை 1992) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் ஐந்தாவது உலகக் கிண்ணத்துக்கான போட்டியாகும். இக்கிண்ணம் பென்சன் அன்ட் எட்ஜசு கிண்ணம் என அழைக்கப்படுகின்றது. இப்போட்டிகள் 1992 பெப்ரவரி 22 முதல் மார்ச் 25 வரை ஆத்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இடம்பெற்றது. இதில் தேர்வு அணிகளான இங்கிலாந்து, ஆத்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, பாக்கித்தான், நியூசிலாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகியவற்றுடன், சிம்பாப்வே அணியும் பங்குபற்றின. இதில் முதல் முறையாக இனவொதுக்கல் சர்ச்சை காரணமாக தடைக்கு உள்ளாகி இருந்த தென்னாப்பிரிக்க அணி கலந்து கொண்டது. மெல்பேர்ணில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இம்ரான் கான் தலைமையிலான பாக்கித்தான் அணி இங்கிலாந்து அணியை 22 ஓட்டங்களால் வெற்றி பெற்று முதல் தடவையாக உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.

புதிய அம்சங்கள்[தொகு]

  • பகல், இரவு ஆட்டம் நடைபெற்றமை,
  • வீரர்கள் நிற ஆடைகளை அணிந்தமை,
  • வெள்ளை நிற பந்து பயன்படுத்தப்பட்டமை,
  • நடுவிக்கட்டில் டீ.வி. கமரா இணைக்கப்பட்டமை,
  • கருப்பு நிற பக்க ஸ்கிரீன் பொருத்தப்பட்டமை.

அணிகளுக்குத் தலைமை[தொகு]

ஒவ்வொரு அணிகளுக்கும் தலைமை தாங்கியவர்களின் விவரம் பின்வருமாறு[1]

தொடர் சுழல் முறை[தொகு]

புள்ளி விபரங்கள்[தொகு]

அணி புள்ளிகள் ஆட்டங்கள் வெற்றி தோல்வி தோல்வி சமம் ஓட்ட வித்தியாச, ஓட்டவிகிதம்
 நியூசிலாந்து 14 8 7 1 0 0 0.59 4.76
 இங்கிலாந்து 11 8 5 2 1 0 0.47 4.36
 தென்னாப்பிரிக்கா 10 8 5 3 0 0 0.14 4.36
 பாக்கித்தான் 9 8 4 3 1 0 0.17 4.33
 ஆத்திரேலியா 8 8 4 4 0 0 0.20 4.22
 மேற்கிந்தியத் தீவுகள் 8 8 4 4 0 0 0.07 4.14
 இந்தியா 5 8 2 5 1 0 0.14 4.95
 இலங்கை 5 8 2 5 1 0 −0.68 4.21
 சிம்பாப்வே 2 8 1 7 0 0 −1.14 4.03

ஆட்ட முடிவுகள்[தொகு]

22 பெப்ரவரி 1992
ஆட்டவிபரம்
 நியூசிலாந்து
248/6 (50 ஓவர்கள்)
 ஆத்திரேலியா
211 (48.1 ஓவர்கள்)
மார்ட்டின் குரோவ் 100* (134)
கிரைக் மக்டெர்மொட் 2/43 (10 ஓவர்கள்)
டேவிட் பூன் 100 (133)
கவின் லார்சன் 3/30 (10 ஓவர்கள்)
 நியூசிலாந்து 37 ஓட்டங்களால் வெற்றி
ஈடன் பார்க், ஆக்லாந்து, நியூசிலாந்து
நடுவர்கள்: கைசர் ஹயட், டேவிட் ஷெப்பர்ட்
ஆட்ட நாயகன்: மார்ட்டின் குரோவ்

22 பெப்ரவரி 1992
ஆட்டவிபரம்
 இங்கிலாந்து
236/9 (50 ஓவர்கள்)
 இந்தியா
227 (49.2 ஓவர்கள்)
ரவி சாஸ்திரி 57 (112)
டேர்மொட் ரீவ் 3/38 (6 ஓவர்கள்)
 இங்கிலாந்து 9 ஓட்டங்களால் வெற்றி
வக்கா அரங்கம், பேர்த், ஆஸ்திரேலியா
நடுவர்கள்: டூலண்ட் பூல்ட்ஜென்சு, பீட்டர் மெக்கொனெல்
ஆட்ட நாயகன்: இயன் பொதம்

23 பெப்ரவரி 1992
ஆட்டவிபரம்
 சிம்பாப்வே
312/4 (50 ஓவர்கள்)
 இலங்கை
313/7 (49.2 ஓவர்கள்)
 இலங்கை 3 இலக்குகளால் வெற்றி
புக்கெகூரா பார்க், நியூசிலாந்து
நடுவர்கள்: பிலூ ரிப்போர்ட்டர், ஸ்டீவ் வுட்வேர்ட்
ஆட்ட நாயகன்: அண்டி பிளவர்

23 பெப்ரவரி 1992
ஆட்டவிபரம்
 பாக்கித்தான்
220/2 (50 ஓவர்கள்)
 மேற்கிந்தியத் தீவுகள் 10 இலக்குகளால் வெற்றி
மெல்பேர்ண் துடுப்பாட்ட அரங்கம், மெல்பேர்ண், ஆஸ்திரேலியா
நடுவர்கள்: ஸ்டீவ் ரெண்டெல், இயன் ரொபின்சன்
ஆட்ட நாயகன்: பிறையன் லாரா

25 பெப்ரவரி 1992
ஆட்டவிபரம்
 இலங்கை
206/9 (50 ஓவர்கள்)
 நியூசிலாந்து
210/4 (48.2 ஓவர்கள்)
ரொஷான் மகாநாம 80 (131)
வில்லி வாட்சன் 3/37 (10 ஓவர்கள்)
கென் ரதர்போர்ட் 65* (71)
ருவான் கல்பகே 2/33 (10 ஓவர்கள்)
 நியூசிலாந்து 6 விக்கெட்டுகளால் வெற்றி
ட்ரஸ்ட் பான்க் பார்க், ஹமில்டன், நியூசிலாந்து
நடுவர்கள்: பிலூ ரிப்போர்ட்டர், டேவிட் ஷெப்பர்ட்
ஆட்ட நாயகன்: கென் ரதர்போர்ட்

26 பெப்ரவரி 1992
ஆட்டவிபரம்
 ஆத்திரேலியா
170/9 (49 ஓவர்கள்)
 தென்னாப்பிரிக்கா
171/1 (46.5 ஓவர்கள்)
 தென்னாப்பிரிக்கா 9 இலக்குகளால் வெற்றி
சிட்னி துடுப்பாட்ட அரங்கம், சிட்னி, ஆஸ்திரேலியா
நடுவர்கள்: பிறையன் ஆல்ட்றிட்ஜ், ஸ்டீவ் பக்நோர்
ஆட்ட நாயகன்: கெப்லர் வெசல்ஸ்

27 பெப்ரவரி 1992
ஆட்டவிபரம்
 பாக்கித்தான்
254/4 (50 ஓவர்கள்)
 சிம்பாப்வே
201/7 (50 ஓவர்கள்)
ஆமிர் சொகைல் 114 (136)
இயன் புட்ச்சார்ட் 3/57 (10 ஓவர்கள்)
ஆண்டி வாலர் 44 (36)
வசீம் அக்ரம் 3/21 (10 ஓவர்கள்)
 பாக்கித்தான் 53 ஓட்டங்களால் வெற்றி.
பெலரிவ் ஓவல், ஹோபார்ட், ஆஸ்திரேலியா
நடுவர்கள்: டூலண்ட் புல்ட்ஜென்ஸ், ஸ்டீவ் ரண்டெல்
ஆட்ட நாயகன்: ஆமிர் சொகைல்

27 பெப்ரவரி 1992
ஆட்டவிபரம்
 இங்கிலாந்து
160/4 (39.5 ஓவர்கள்)
கீத் அத்தர்ட்டன் 54 (101)
கிறிஸ் லூயிஸ் 3/30 (8.2 ஓவர்கள்)
கிரகம் கூச் 65 (101)
வின்ஸ்டன் பெஞ்சமின் 2/22 (9.5 ஓவர்கள்)
 இங்கிலாந்து 6 இலக்குகளால் வெற்றி.
மெல்பேர்ண் துடுப்பாட்ட அரங்கம், மெல்பேர்ண், ஆஸ்திரேலியா
நடுவர்கள்: கார்ல் லைபென்பெர்க், ஸ்டீவ் வுட்வர்ட்
ஆட்ட நாயகன்: கிறிஸ் லூயிஸ்

28 பெப்ரவரி 1992
ஆட்டவிபரம்
 இந்தியா
1/0 (0.2 ஓவர்கள்)
முடிவில்லை
ரே மிட்ச்செல் ஓவல், குயின்ஸ்லாந்து, ஆத்திரேலியா
நடுவர்கள்: இயன் ரொபின்சன், டெவிட் ஷெப்பர்ட்
  • மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

29 பெப்ரவரி 1992
ஆட்டவிபரம்
 தென்னாப்பிரிக்கா
190/7 (50 ஓவர்கள்)
பீட்டர் கெர்ஸ்டன் 90 (129)
வில்லி வாட்சன் 2/30 (10 ஓவர்கள்)
மார்க் கிரேட்பாட்ச் 68 (60)
பீட்டர் கேர்ஸ்டன் 1/22 (7 ஓவர்கள்)
 நியூசிலாந்து 7 இலக்குகளால் வெற்றி
ஈடன் பார்க், ஆக்லாந்து, நியூசிலாந்து
நடுவர்கள்: கைசர் ஹயாட், பிலூ ரிப்போர்ட்டர்
ஆட்ட நாயகன்: மார்க் கிரேட்பாட்ச்

29 பெப்ரவரி 1992
ஆட்டவிபரம்
 சிம்பாப்வே
189/7 (50 ஓவர்கள்)
அலி ஷா 60* (87)
வின்ஸ்டன் பெஞ்சமின் 3/27 (10 ஓவர்கள்)
 மேற்கிந்தியத் தீவுகள் 75 ஓட்டங்களால் வெற்றி
பிறிஸ்பேன் துடுப்பாட்ட அரங்கம், பிறிஸ்பேன், ஆத்திரேலியா
நடுவர்கள்: கார்ல் லைபன்பெர்க், ஸ்டீவ் வுட்வர்ட்
ஆட்ட நாயகன்: பிறையன் லாரா

1 மார்ச் 1992
ஆட்டவிபரம்
 ஆத்திரேலியா
237/9 (50 ஓவர்கள்)
 இந்தியா
234 (47 ஓவர்கள்)
டீன் ஜோன்ஸ் 90 (108)
கபில் தேவ் 3/41 (10 ஓவர்கள்)
 ஆத்திரேலியா 1 ஓட்டத்தால் வெற்றி
பிறிஸ்பேன் துடுப்பாட்ட அரங்கம், பிறிஸ்பேன், ஆத்திரேலியா
நடுவர்கள்: பிறையன் ஆல்ட்றிட்ஜ், இயன் ரொபின்சன்
ஆட்ட நாயகன்: டீன் ஜோன்ஸ்
  • மழை காரணமாக இந்தியாவின் இலக்கு 47 ஓவர்களுக்கு 236 ஓட்டங்களாக்க்கப்பட்டது.

1 மார்ச் 1992
ஆட்டவிபரம்
 பாக்கித்தான்
74 (40.2 ஓவர்கள்)
 இங்கிலாந்து
24/1 (8 ஓவர்கள்)
சலீம் மலீக் 17 (20)
டெரெக் பிரிங்கில் 3/8 (8.2 ஓவர்கள்)
முடிவுகள் இல்லை
அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட், ஆத்திரேலியா
நடுவர்கள்: ஸ்டீவ் பக்னர், பீட்டர் மக்கொனெல்

2 மார்ச் 1992
ஆட்டவிபரம்
 தென்னாப்பிரிக்கா
195 (50 ஓவர்கள்)
 இலங்கை
198/7 (49.5 ஓவர்கள்)
பீட்டர் கேர்ஸ்டன் 47 (81)
டொன் அனுரசிறி 3/41 (10 ஓவர்கள்)
 இலங்கை 3 இலக்குகளால் வெற்றி
பேசின் ரிசர்வ், வெலிங்டன், நியூசிலாந்து
நடுவர்கள்: கைசர் ஹயாட், ஸ்டீவ் வுட்வர்ட்
ஆட்ட நாயகன்: அர்ஜுன ரணதுங்க

3 மார்ச் 1992
ஆட்டவிபரம்
 நியூசிலாந்து
162/3 (20.5 ஓவர்கள்)
 சிம்பாப்வே
105/7 (18 ஓவர்கள்)
மார்ட்டின் குரோவ் 74* (43)
கெவின் டுவர்ஸ் 1/17 (6 ஓவர்கள்)
அண்டி பிளவர் 30 (28)
கிறிசு ஹரிஸ் 3/15 (4 ஓவர்கள்)
 நியூசிலாந்து 48 ஓட்டங்களால் வெற்றி
மெக்லீன் பார்க், நேப்பியர், நியூசிலாந்து
நடுவர்கள்: கார்ல் லைபன்பர்க், டூலண்ட் பூல்ட்ஜன்ஸ்
ஆட்ட நாயகன்: மார்ட்டின் குரோவ்
  • மழை காரணமாக ஒவ்வோர் அணிக்கும் 24 ஓவர்கள் கொடுக்கப்பட்டது. மேலும் பொழிந்த மழையினால் சிம்பாப்வேயின் இலக்கு 18 ஓவர்களில் 154 ஆக்கப்பட்டது.

4 மார்ச் 1992
ஆட்டவிபரம்
 இந்தியா
216/7 (49 ஓவர்கள்)
 பாக்கித்தான்
173 (48.1 ஓவர்கள்)
 இந்தியா 43 ஓட்டங்களால் வெற்றி
சிட்னி துடுப்பாட்ட அரங்கம், சிட்னி, ஆத்திரேலியா
நடுவர்கள்: பீட்டர் மக்கொனெல், டேவிட் ஷெப்பர்ட்
ஆட்ட நாயகன்: சச்சின் டெண்டுல்கர்
  • பாக்கித்தான் அணியின் மெதுவான ஆட்டத்தால், இரண்டு அணிகளுக்கும் 49 ஓவர்கள் கொடுக்கப்பட்டன.

5 மார்ச் 1992
ஆட்டவிபரம்
 தென்னாப்பிரிக்கா
200/8 (50 ஓவர்கள்)
பீட்டர் கேர்ஸ்டன் 56 (91)
மால்கம் மார்சல் 2/26 (10 ஓவர்கள்)
கஸ் லோகி 61 (69)
மேரிக் பிரிங்கில் 4/11 (8 ஓவர்கள்)
 தென்னாப்பிரிக்கா 64 ஓட்டங்களால் வெற்றி
லன்காஸ்டர் பூங்கா, கிறைஸ்ட்சேர்ச், நியூசிலாந்து
நடுவர்கள்: பிறையன் ஆல்ட்றிட்ஜ், ஸ்டீவ் ரெண்டெல்
ஆட்ட நாயகன்: மேரிக் பிறிங்கில்

5 மார்ச் 1992
ஆட்டவிபரம்
 ஆத்திரேலியா
171 (49 ஓவர்கள்)
 இங்கிலாந்து
173/2 (40.5 ஓவர்கள்)
டொம் மூடி 51 (88)
இயன் பொதம் 4/31 (10 ஓவர்கள்)
கிரயெம் கூச் 58 (112)
மைக் விட்னி 1/28 (10 ஓவர்கள்)
 இங்கிலாந்து 8 இலக்குகளால் வெற்றி
சிட்னி துடுப்பாட்ட அரங்கம், சிட்னி, ஆத்திரேலியா
நடுவர்கள்: ஸ்டீவ் பக்னர், கைசர் ஹயாட்
ஆட்ட நாயகன்: இயன் பொதம்

7 மார்ச் 1992
ஆட்டவிபரம்
 இந்தியா
203/7 (32 ஓவர்கள்)
 சிம்பாப்வே
104/1 (19.1 ஓவர்கள்)
சச்சின் டெண்டுல்கர் 81 (88)
ஜோன் டிரைக்கோசு 3/35 (6 ஓவர்கள்)
 இந்தியா 55 ஓட்டங்களால் வெற்றி
ஹமில்ட்டன், நியூசிலாந்து
நடுவர்கள்: டூலண்ட் புல்ட்ஜென்ஸ், ஸ்டீவ் ரெண்டெல்
ஆட்ட நாயகன்: சச்சின் டெண்டுல்கர்
  • மழை காரணமாக வெற்றி இலக்கு 19 ஓவர்களுக்கு 159 ஓட்டங்களாகக் குறைக்கப்பட்டது.

7 மார்ச் 1992
ஆட்டவிபரம்
 இலங்கை
189/9 (50 ஓவர்கள்)
 ஆத்திரேலியா
190/3 (44 ஓவர்கள்)
அரவிந்த டி சில்வா 62 (83)
பீட்டர் டெய்லர் 2/34 (10 ஓவர்கள்)
 ஆத்திரேலியா 7 இலக்குகளால் வெற்றி
அடிலெய்ட், ஆத்திரேலியா
நடுவர்கள்: பிலூ ரிப்போர்ட்டர், இயன் ரொபின்சன்
ஆட்ட நாயகன்: டொம் மூடி

8 மார்ச் 1992
ஆட்டவிபரம்
 நியூசிலாந்து
206/5 (48.3 ஓவர்கள்)
பிறையன் லாரா 52 (81)
கவின் லார்சன் 2/41 (10 ஓவர்கள்)
மார்ட்டின் குரோவ் 81* (81)
வின்ஸ்டன் பெஞ்சமின் 2/34 (9.3 ஓவர்கள்)
 நியூசிலாந்து 5 இலக்குகளால் வெற்றி
ஈடன் பார்க், ஓக்லாந்து, நியூசிலாந்து
நடுவர்கள்: கார்ல் லீபென்பேர்க், பீட்டர் மெக்கொனெல்
ஆட்ட நாயகன்: மார்ட்டின் குரோவ்

8 மார்ச் 1992
ஆட்டவிபரம்
 தென்னாப்பிரிக்கா
211/7 (50 ஓவர்கள்)
 பாக்கித்தான்
173/8 (36 ஓவர்கள்)
இன்சமாம் உல் ஹக் 48 (44)
ஏட்ரியன் கூப்பர் 3/40 (6 ஓவர்கள்)
 தென்னாப்பிரிக்கா 20 ஓட்டங்களால் வெற்றி
பிறிஸ்பேன், ஆத்திரேலியா
நடுவர்கள்: பிறையன் ஆல்ட்ரிட்ஜ், ஸ்டீவ் பக்னர்
ஆட்ட நாயகன்: ஆண்ட்ரூ ஹட்சன்
  • மழை காரணமாக வெற்றி இலக்கு 36 ஓவர்களுக்கு 194 ஆகக் குறைக்கப்பட்டது.

9 மார்ச் 1992
ஆட்டவிபரம்
 இங்கிலாந்து
280/9 (50 ஓவர்கள்)
 இலங்கை
174 (44 ஓவர்கள்)
நீல் பெயர்பிறதர் 63 (70)
அசங்க குருசிங்க 2/67 (10 ஓவர்கள்)
 இங்கிலாந்து 106 ஓட்டங்களால் வெற்றி
கிழக்கு ஓவல், பலராட், ஆத்திரேலியா
நடுவர்கள்: கைசர் ஹயாட், பிலூ ரிப்போர்ட்டர்
ஆட்ட நாயகன்: கிறிஸ் லூயிஸ்

10 மார்ச் 1992
ஆட்டவிபரம்
 இந்தியா
197 (49.4 ஓவர்கள்)
 மேற்கிந்தியத் தீவுகள் 5 இலக்குகளால் வெற்றி (மீளமைக்கப்பட்ட வெற்றியிலக்கு)
பேசின் ரிசேர்வ், வெலிங்டன், நியூசிலாந்து
நடுவர்கள்: ஸ்டீவ் ரன்டெல், ஸ்டீவ் வூட்வார்ட்
ஆட்ட நாயகன்: அன்டர்சன் கம்மின்ஸ்

10 மார்ச் 1992
ஆட்டவிபரம்
 சிம்பாப்வே
163 (48.3 ஓவர்கள்)
 தென்னாப்பிரிக்கா
164/3 (45.1 ஓவர்கள்)
 தென்னாப்பிரிக்கா 7 இலக்குகளால் வெற்றி
மனுக்கா ஓவல், கன்பரா, ஆஸ்திரேலியா
நடுவர்கள்: ஸ்டீவ் பக்னர், டேவிட் ஷெப்பர்ட்
ஆட்ட நாயகன்: பீட்டர் கெர்ஸ்டன்

11 மார்ச் 1992
ஆட்டவிபரம்
 பாக்கித்தான்
220/9 (50 ஓவர்கள்)
 ஆத்திரேலியா
172 (45.2 ஓவர்கள்)
ஆமிர் சொகைல் 76 (104)
ஸ்டீவ் வா 3/36 (10 ஓவர்கள்)
 பாக்கித்தான் 48 ஓட்டங்களால் வெற்றி
வக்கா அரங்கம், பேர்த், ஆஸ்திரேலியா
நடுவர்கள்: கார்ல் லீபென்பேர்க், பிலூ ரிப்போர்ட்டர்
ஆட்ட நாயகன்: ஆமிர் சொகைல்

12 மார்ச் 1992
ஆட்டவிபரம்
 இந்தியா
230/6 (50 ஓவர்கள்)
 நியூசிலாந்து
231/6 (47.1 ஓவர்கள்)
மார்க் கிரேட்பாட்ச் 73 (77)
மனோஜ் பிரபாகர் 3/46 (10 ஓவர்கள்)
 நியூசிலாந்து 4 இலக்குகளால் வெற்றி
கரிஸ்ப்ரூக், டனீடன், நியூசிலாந்து
நடுவர்கள்: பீட்டர் மக்கொனெல், இயன் ரொபின்சன்
ஆட்ட நாயகன்: மார்க் கிரேட்பாட்ச்

12 மார்ச் 1992
ஆட்டவிபரம்
 தென்னாப்பிரிக்கா
236/4 (50 ஓவர்கள்)
 இங்கிலாந்து
226/7 (40.5 ஓவர்கள்)
அலெக் ஸ்டூவர்ட் 77 (88)
ரிச்சார்ட் ஸ்நெல் 3/42 (7.5 overs)
 இங்கிலாந்து 3 இலக்குகளால் வெற்றி (மீளமைக்கப்பட்ட வெற்றியிலக்கு)
மெல்பேர்ண் துடுப்பாட்ட அரங்கம், மெல்பேர்ண், ஆஸ்திரேலியா
நடுவர்கள்: பிறையன் ஆல்ட்றிட்ஜ், டூலண்ட் பூல்ட்ஜென்சு
ஆட்ட நாயகன்: அலெக் ஸ்டூவர்ட்
  • இங்கிலாந்து 12 ஓவர்கள் முடிவில் 62/0 என்ற நிலையில் மழையினால் 43 நிமிடங்கள் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. இதன் காரணமாக வெற்றி இலக்கு 41 ஓவர்களில் 226 ஆகக் குறைக்கப்பட்டது.

13 மார்ச் 1992
ஆட்டவிபரம்
 இலங்கை
177/9 (50 ஓவர்கள்)
ஃபில் சிம்மொன்ஸ் 110 (125)
சந்திக்க ஹத்துருசிங்க 4/57 (8 ஓவர்கள்)
 மேற்கிந்தியத் தீவுகள் 91 ஓட்டங்களால் வெற்றி
பெர்ரி ஓவல், பெர்ரி, ஆஸ்திரேலியா
நடுவர்கள்: டேவிட் ஷெப்பர்ட், ஸ்டீவ் வூட்வார்ட்
ஆட்ட நாயகன்: ஃபில் சிம்மொன்ஸ்

14 மார்ச் 1992
ஆட்டவிபரம்
 ஆத்திரேலியா
265/6 (50 ஓவர்கள்)
 சிம்பாப்வே
137 (41.4 ஓவர்கள்)
மார்க் வா 66* (39)
ஜோன் ட்ரைக்கோஸ் 1/30 (10 ஓவர்கள்)
 ஆத்திரேலியா 128 ஓட்டங்களால் வெற்றி
பெல்லரீவ் ஓவல், ஹொபார்ட், ஆஸ்திரேலியா
நடுவர்கள்: பிறையன் ஆல்ட்றிட்ஜ், ஸ்டீவ் பக்னர்
ஆட்ட நாயகன்: ஸ்டீவ் வா

15 மார்ச் 1992
ஆட்டவிபரம்
 இங்கிலாந்து
200/8 (50 ஓவர்கள்)
 நியூசிலாந்து
201/3 (40.5 ஓவர்கள்)
கிரகாம் ஹிக் 56 (70)
டீபக் பட்டேல் 2/26 (10 ஓவர்கள்)
ஆண்ட்ரூ ஜோன்ஸ் 78 (113)
இயன் பொதம் 1/19 (4 ஓவர்கள்)
 நியூசிலாந்து won by 7 wickets
பேசின் ரிசேர்வ், வெலிங்டன், நியூசிலாந்து
நடுவர்கள்: ஸ்டீவ் ரன்டெல், இயன் ரொபின்சன்
ஆட்ட நாயகன்: ஆண்ட்ரூ ஜோன்ஸ்

15 மார்ச் 1992
ஆட்டவிபரம்
 இந்தியா
180/6 (30 ஓவர்கள்)
 தென்னாப்பிரிக்கா
181/4 (29.1 ஓவர்கள்)
முகமது அசாருதீன் 79 (77)
அட்ரியன் குய்ப்பர் 2/28 (6 ஓவர்கள்)
 தென்னாப்பிரிக்கா 6 இலக்குகளால் வெற்றி
அடிலெய்ட் ஓவல், அடிலெய்ட், ஆஸ்திரேலியா
நடுவர்கள்: டூலண்ட் பூல்ட்ஜென்சு, கைசர் ஹயட்
ஆட்ட நாயகன்: பீட்டர் கெர்ஸ்டன்
  • மழை காரணமாக ஆட்டம் தலா 30 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

15 மார்ச் 1992
ஆட்டவிபரம்
 இலங்கை
212/6 (50 ஓவர்கள்)
 பாக்கித்தான்
216/6 (49.1 ஓவர்கள்)
 பாக்கித்தான் 4 இலக்குகளால் வெற்றி
வக்கா அரங்கம், பேர்த், ஆஸ்திரேலியா
நடுவர்கள்: கார்ல் லீபென்பேர்க், பீட்டர் மக்கொனெல்
ஆட்ட நாயகன்: ஜாவெட் மியன்டாட்

18 மார்ச் 1992
ஆட்டவிபரம்
 நியூசிலாந்து
166 (48.2 ஓவர்கள்)
 பாக்கித்தான்
167/3 (44.4 ஓவர்கள்)
மார்க் கிரேட்பாட்ச் 42 (67)
வசீம் அக்ரம் 4/32 (9.2 ஓவர்கள்)
ரமீஸ் ராஜா 119* (155)
டனி மொரிசன் 3/42 (10 ஓவர்கள்)
 பாக்கித்தான் 7 இலக்குகளால் வெற்றி
லங்காஸ்டர் பூங்கா, கிறிஸ்சேச், நியூசிலாந்து
நடுவர்கள்: ஸ்டீவ் பக்னர், ஸ்டீவ் ரன்டெல்
ஆட்ட நாயகன்: முஷ்டாக் அகமது

18 மார்ச் 1992
ஆட்டவிபரம்
 சிம்பாப்வே
134 (46.1 ஓவர்கள்)
 இங்கிலாந்து
125 (49.1 ஓவர்கள்)
டேவிட் ஹோட்டன் 29 (74)
இயன் பொதம் 3/23 (10 ஓவர்கள்)
 சிம்பாப்வே 9 ஓட்டங்களால் வெற்றி
லவிங்டன் ஸ்போட்ஸ் ஓவல், ஆல்பரி, ஆஸ்திரேலியா
நடுவர்கள்: பிறையன் ஆல்ட்றிட்ஜ், கைசர் ஹயட்
ஆட்ட நாயகன்: எடோ பிராண்டஸ்

18 மார்ச் 1992
ஆட்டவிபரம்
 ஆத்திரேலியா
216/6 (50 ஓவர்கள்)
 ஆத்திரேலியா 57 ஓட்டங்களால் வெற்றி
மெல்பேர்ண் துடுப்பாட்ட அரங்கம், மெல்பேர்ண், ஆஸ்திரேலியா
நடுவர்கள்: பிலூ ரிப்போர்ட்டர், டேவிட் ஷெப்பர்ட்
ஆட்ட நாயகன்: டேவிட் பூன்

இறுதிப் போட்டி[தொகு]

1992 உலக்கிண்ண போட்டித் தொடரின் இறுதிப்போட்டி மெல்போனில் பகல், இரவு ஆட்டமாக நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி 2 விக்கட் இழப்புக்கு 24 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஜாவிட்மீயண்டாட் (58) இம்ரான்கான் (72) பாக்கிஸ்தான் அணியில் உறுதிநிலைக்கு வழி வகுத்தனர். இவர்களைத் தொடர்ந்து இன் சமாம் உல்ஹக் (42) வசீம்அக்ரம் (33) இருவரும் இணைந்து 6 ஓவர்களுக்குள் 52 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர். இறுதியில் பாக்கிஸ்தான் அணி 6 விக்கட் இழப்புக்கு 249 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இங்கிலாந்தின் துடுப்பாட்டம் ஆரம்பமானவுடன் இயன்பொத்தம் ஆட்டமிழந்து அணிக்குப் பேரிழப்பாகியது. முஸ்டாக் அஹ்மத்தின் (3 - 42) பந்துவீச்சினை முகம் கொடுக்க சிரமப்பட்ட இங்கிலாந்து அணியினர் 3 விக்கட்டுக்களை வேகமாக இழந்தனர். நீல் பெயாபிரதர் 62 ஓட்டங்களையும், அலன்லேம்ப் 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இறுதியில் இங்கிலாந்து அணியினரால் சகல விக்கட்டுக்களையும் இழந்து 227 ஓட்டங்களையே பெறமுடிந்தது. இப்போட்டியில் பாக்கிஸ்தான் அணி 22 ஓட்டங்களினால் வெற்றியீட்டி ஐந்தாவது உலகக்கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது. (மூன்று முறையும் இறுதியாட்டத்திற்கு தெரிவான இங்கிலாந்தினால் கிண்ணத்தினை வெல்ல முடியாதமை துரதிர்ஸ்டமாகும்.)

போட்டியில் 33 ஓட்டங்களைப் பெற்று, 49 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை கைப்பற்றிய வசீம் அக்ரம் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார். இப்போட்டித் தொடரின் வீரராக அவுஸ்திரேலியா வீரர் மார்டின் குரோ தெரிவானார்.

சான்றுகள்[தொகு]

  1. "Captains of 1992 Cricket World Cup". பார்க்கப்பட்ட நாள் 8 June 2011.

வெளி இணைப்புகள்[தொகு]