.இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
.in
.in
அறிமுகப்படுத்தப்பட்டது 1989
TLD type அதியுயர் ஆள்களப் பெயர்
நிலைமை இயங்குநிலை
பதிவேடு இந்திய இணையப் பெயர்ப் பதிவகம்
வழங்கும் நிறுவனம் என். ஐ. எக்சு. ஐ.
பயன்பாட்டு நோக்கம் இந்தியாவின் கொடி இந்தியாவுடன் தொடர்புடைய அமைப்புக்கள் அல்லது நிறுவனங்கள்
ஆவணங்கள் ஆவணங்கள்
Dispute policies கொள்கைகள்
வலைத்தளம் www.registry.in

.இந்தியா (ஆங்கிலம்: .in, தேவநாகரி: .भारत, உருது: .بھارت, தெலுங்கு: .భారత్, குஜராத்தி: .ભારત, பஞ்சாபி: .ਭਾਰਤ, வங்காளம்: .ভারত) என்பது இந்தியாவுக்கான இணையத்தின் அதியுயர் ஆள்களப் பெயராகும். ஆங்கிலத்தில் அமைந்த .in ஆள்களப் பெயரானது 1989ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆள்களப் பெயர் இந்திய இணையப் பெயர்ப் பதிவகத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றது. இந்திய இணையப் பெயர்ப் பதிவகம் இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிறுவனமாகும்.[1]

[தொகு] உப ஆள்களப் பெயர்கள்

ஆறு உப ஆள்களப் பெயர்கள் தகுதியுள்ள இந்திய நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவையாவன:-

  • .ac.in (கல்வி சார்ந்த நிறுவனங்கள்)
  • .edu.in (கல்வி நிறுவனங்கள்)
  • .res.in (இந்திய ஆய்வு நிறுவனங்கள்)
  • .ernet.in (பழைய ஆள்களப் பெயர், கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களுக்கு)
  • .gov.in (இந்திய அரசாங்கம்)
  • .mil.in (இந்திய இராணுவம்)[2]

[தொகு] சுதேச மொழிகளில்

22 சுதேச மொழிகளில் ஆள்களப் பெயர் பெறுவதற்கு இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அவை 2012இன் நடுப்பகுதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.[3]

[தொகு] மேற்கோள்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=.இந்தியா&oldid=1062505" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்