ஹ. மு. நத்தர்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹ. மு. நத்தர்சா (பிறப்பு: ஏப்ரல் 25 1956) காரைக்காலில் பிறந்து தற்போது சென்னை அடையாறு பரமேஸ்வரி நகரில் வசித்துவரும் இவர் சென்னை புதுக்கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவரும், எழுத்தாளரும், பேச்சாளருமாவார். பொதிகைத் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, விண் தொலைக்காட்சி, தமிழன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள அதேநேரம், சமய, இலக்கிய நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், சிற்புரைகள் என அனைத்துத்துறைகளிலும் முத்திரை பதித்துமுள்ளார்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • சின்னசின்ன ஆசை
  • உறவுப்பறவைகள்
  • பெத்தமனசு (சிறுகதைத் தொகுப்புகள்)
  • மதுரைநாயகன் மாவீரன் கான்சாகிபு (ஆய்வு நூல்)

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

  • நிறைஞர் பட்டம்
  • முனைவர் பட்டம்
  • கம்பன் புகழ் இலக்கிய விருது
  • உமறுப்புலவர் விருது

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹ._மு._நத்தர்சா&oldid=2716384" இலிருந்து மீள்விக்கப்பட்டது