ஹோலியா மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஹோலியா | ||
|---|---|---|
| நாடுகள்: | இந்தியா | |
| பகுதி: | கர்நாடகம், மஹாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் | |
| பேசுபவர்கள்: | 8,000 | |
| மொழிக் குடும்பம்: | திராவிடம் தென் திராவிடம் தமிழ்-கன்னடம் கன்னடம் ஹோலியா |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | ||
| ISO/FDIS 639-3: | hoy | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
ஹோலியா மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், கர்நாடகம், மஹாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 8,000 மக்களால் பேசப்படுகிறது. இது ஹோலார், ஹோலாரி, ஹோலே, ஹோலியான், ஹோலு, கோலாரி-கன்னடா, கோஹ்ல்லாரு போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இம்மொழியை முதல் மொழியாகப் பேசுபவர்கள் மத்தியில் இதன் கல்வியறிவு 1% மட்டுமேயாகும். இவர்களுடைய இரண்டாம் மொழியான கன்னட மொழி தொடர்பில் அவர்களுடைய கல்வியறிவு 5% ஆகும்.
மத்தியப் பிரதேசத்தில் இம்மொழியினர் முதல் மொழியாக ஹிந்தியே பேசிவருகின்றனர்.