ஹையிட்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| ஹையிட்டி Haiti République d'Haïti Repiblik d Ayiti ஹையிட்டி குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் "L'Union Fait La Force" (பிரெஞ்சு) "ஒற்றுமை வலிமையைத் தரும்" |
||||||
| நாட்டுப்பண் La Dessalinienne |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
போர்ட்-ஓ-பிரின்ஸ் |
|||||
| ஆட்சி மொழி(கள்) | பிரெஞ்சு, ஹையிட்டிய கிரெயோல் | |||||
| மக்கள் | ஹையிட்டியர் | |||||
| அரசு | குடியரசு | |||||
| - | ஜனாதிபதி | ரெனே பிரேவல் | ||||
| - | தலைமை அமைச்சர் | யாரும் இல்லை | ||||
| அமைப்பு | ||||||
| - | செயிண்ட்-டொமிங்கு ஆக | 1697 | ||||
| - | பிரான்சிடம் இருந்து விடுதலை | ஜனவரி 1, 1804 |
||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 27,750 கிமீ² (146வது) 10,714 சது. மை |
||||
| - | நீர் (%) | 0.7 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2005 estimate | 9,296,000 [1] (85வது) | ||||
| - | 2003 census | 8,527,817 | ||||
| - | அடர்த்தி | 335[1]/km² (38வது) 758.1/sq mi |
||||
| மொ.தே.உ (கொ.ச.வே) | 2006 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $14.76 (2006) பில்லியன் (124வது) | ||||
| - | தலா/ஆள்வீதம் | $1800 (2006) (153வது) | ||||
| ஜினி சுட்டெண்? (2001) | 59.2 (உயர்) | |||||
| ம.வ.சு (2005) | ||||||
| நாணயம் | கோர்ட் (HTG) |
|||||
| நேர வலயம் | (ஒ.ச.நே.-5) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | (UTC-4) | ||||
| இணைய குறி | .ht | |||||
| தொலைபேசி | +509 | |||||
ஹையிட்டி அல்லது ஹெயிட்டி (Haiti), என்பது கரிபியன் தீவான ஹிஸ்பனியோலாவில் அமைந்திருக்கும் பிரெஞ்சு, மற்றும் ஹையிட்டிய கிரெயோல் மொழிகள் பேசும் இலத்தீன் அமெரிக்க நாடாகும். இது ஹிஸ்பனியோலா தீவை டொமினிக்கன் குடியரசுடன் பகிர்ந்துள்ளது.
முன்னாள் பிரெஞ்சு குடியேற்ற நாடான ஹையிட்டி வரலாற்று ரீதியாக பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது: ஹையிட்டி முதலாவது கருப்பின குடியரசு நாடாகும். முழுவதுமாக அடிமைகளின் புரட்சியாளர்களினால் அமைக்கப்பட்ட முதலாவது நாடுமாகும். அத்துடன் இது இலத்தீன் அமெரிக்காவில் விடுதலையை முதன் முதலாக அறிவித்த முதலாவது நாடாகும். ஜனவரி 1, 1804 இல் இது தனது விடுதலையை அறிவித்தது.
ஹையிட்டி பாரிய ஆண்டில்லெஸ் தீவுக்கூட்டத்தின் இரண்டாவது பெரிய தீவான ஹிஸ்பனியோலாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. கரிபியன் நாடுகளில் கியூபா மற்றும் டொமினிக்கன் குடியரசு ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய நாடாகும். இது தனது 360 கிமீ எல்லையை டொமினிக்கன் குடியரசுடன் பகிருகிறது. ஹையிட்டி பல சிறு தீவுகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
[தொகு] மக்கள்
இங்குள்ள கிட்டத்தட்ட 95% மக்கள் ஆபிரிக்காவிலிருந்து குடிபெயர்ந்தவர்கள். மீதமானவர்களில் அரபுக்கள், லெபனியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் ஆவர்.
[தொகு] மதம்
பெரும்பான்மையானோர் (80-85%) ரோமன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுகிறார்கள். இதுவே இங்கு அதிகாரபூர்வமான மதமாகும். 15-20% மக்கள் புரட்டஸ்தாந்து மதத்தினராவர்.
[தொகு] வெளி இணைப்புகள்


