ஹென்றி மட்டீஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| ஹென்றி மட்டீஸ் | |
கர்ல் வான் வெக்டென் என்பவரால் எடுக்கப்பட்ட ஹென்றி மட்டீசின் நிழற்படம், 1933. |
|
| இயற்பெயர் | ஹென்றி மட்டீஸ் |
| பிறப்பு | 31 டிசம்பர் 1869 Le Cateau-Cambrésis, Nord-Pas-de-Calais |
| இறப்பு | 3 நவம்பர் 1954 (aged 84) நைஸ், பிரான்ஸ் |
| நாடு | பிரெஞ்சு |
| துறை | ஓவியம், அச்சோவியம், சிற்பம், வரைதல், collage |
| இயக்கம் | Fauvism, நவீனத்துவம் |
| படைப்புகள் | ஒரு தொப்பியுடன் பெண் (சீமாட்டி மட்டீஸ்), 1905 |
ஹென்றி மட்டீஸ் (31 டிசம்பர் 1869 – 3 நவம்பர் 1954) ஒரு பிரெஞ்சு ஓவியர். ஒரு வரைவாளராகவும், அச்சோவியம் செய்பவராகவும், சிற்பியாகவும், முதன்மையாக ஒரு ஓவியராகவும் மட்டீஸ், 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் அறியப்பட்ட கலைஞர்களுள் ஒருவர் ஆவார். தொடக்கத்தில் இவர் ஒரு "காட்டு விலங்கு" என முத்திரை குத்தப்பட்டாலும், 1920களில், பிரான்சின் செந்நெறி ஓவிய மரபின் காவலர் எனப் புகழப்பட்டார். நிறம், வரைதல் ஆகிய வெளிப்பாட்டு மொழிகளில் அவருக்கிருந்த திறமை அவரது அரை நூற்றாண்டுக்கால ஆக்கங்களில் வெளிப்பட்டது. இதன் மூலம் அவரை நவீன ஓவியத்தில் ஒரு முக்கிய மனிதராக அடையாளம் காண முடிந்தது.