எச். ஜி. வெல்ஸ்
| ஹெச். ஜி. வெல்ஸ் | |
|---|---|
1916க்கு முன் வெல்ஸ் |
|
| பிறப்பு | ஹெர்பர்ட் ஜார்ஜ் வெல்ஸ் செப்டம்பர் 21, 1866 புரோம்லே, ஐக்கிய ராஜ்யம் |
| இறப்பு | ஆகத்து 13 1946 (அகவை 79) லண்டன், ஐக்கிய ராஜ்யம் |
| தொழில் | எழுத்தாளர், ஆசிரியர், வரலாற்றாளர், இதழாளர் |
| நாடு | பிரித்தானியர் |
| இலக்கிய வகை | அறிபுனை (சமூக அறிபுனை) |
| குறிப்பிடத்தக்க படைப்பு(கள்) |
தி டைம் மெஷீன், தி இன்விசிபிள் மேன், தி ஐலாண்ட் ஆஃப் டாக்டர் மோரோ, தி வார் ஆஃப் தி வோர்ல்ட்ஸ், தி ஃபர்ஸ்ட் மென் ஆன் தி மூன், தி ஷேப் ஆஃப் திங்ஸ் டூ கம் |
|
தாக்கங்கள்
|
|
|
பின்பற்றுவோர்
|
|
ஹெச். ஜி. வெல்ஸ் அல்லது எச். ஜி. வெல்சு (H. G. Wells, செப்டம்பர் 21, 1866 – ஆகஸ் 13, 1946) ஒரு ஆங்கில எழுத்தாளர். சம காலத்திய புதினங்கள், வரலாறு, அரசியல், சமூக விமர்சனம் என்று பலவகைப்பட்ட துறைகளில் எழுதினாலும் இவர் தனது அறிபுனை படைப்புகளாலேயே அறியப்படுகிறார். வெல்ஸ் அறிபுனை இலக்கியத்தின் தந்தையர் என்று கருதப்படும் இருவருள் ஒருவர். (மற்றவர் ழூல் வேர்ண்).
வெல்ஸ் ஒரு சமதர்மவாதி. பொதுவாக அவர் அமைதிவாதத்தை ஆதரித்தாலும் முதலாம் உலகப் போர் துவங்கிய போது அதனை ஆதரித்தார். ஆனால் பின்னர் இந்த ஆதரவு எதிர்ப்பாக மாறி விட்டது. இவரது பிறகாலத்திய எழுத்துகளில் அரசியல் கருத்துகள் பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளன. இவரது எழுத்தின் மத்திய காலகட்டத்தில் (1900-1920) எழுதப்பட்ட படைப்புகளில் அறிபுனை படைப்புகள் குறைவு. கீழ் நடுத்தர வர்க்கம், பெண் வாக்குரிமைப் போராளிகள் போன்ற சமூகத் தொடர்புடைய விஷயங்களைப் பற்றி இக்காலகட்டத்தில் புதினங்களை எழுதினார். காலப் பயணம், மரபியல் சோதனைகள், வேற்று கிரக வாசிகள் பூமியைத் தாக்குதல், நிலவுக்கு மனிதன் செல்வது, அணு ஆயுதப் போர் போன்ற பிரபல அறிபுனை பாணிகளை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடி வெல்சே. இவரது எழுத்துக்களால் கவரப்பட்ட ராபர்ட் கொடார்ட் என்னும் அறிவியலாளர் எறிகணைகளை (ராக்கெட்) கண்டுபிடித்தார். வெல்சின் படைப்புகள் பின் வந்த எழுத்தாளர் தலைமுறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவற்றுள் பல திரைப்படங்களாகவும், வானொலி நிகழ்ச்சிகளாகவும் தயாரிக்கப் பட்டுள்ளன.
குறிப்பிடத்தக்க படைப்புகள் [தொகு]
- தி டைம் மெஷீன்
- தி இன்விசிபிள் மேன்
- தி ஐலாண்ட் ஆஃப் டாக்டர் மோரோ
- தி வார் ஆஃப் தி வோர்ல்ட்ஸ்
- தி ஃபர்ஸ்ட் மென் ஆன் தி மூன்
- தி ஷேப் ஆஃப் திங்ஸ் டூ கம்
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் ஹெச். ஜி. வெல்ஸ் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |