ஹார்விபட்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம் அருகிலுள்ள கார்வி பட்டி எனும் ஊர் உள்ளது. இந்த ஊர் உள்ளாட்சி அமைப்பில் பேரூராட்சி நிலையிலுள்ள ஒரு ஊராகும். மதுரையிலிருந்த ஹார்வி மில்ஸ் (தற்போது மதுரா கோட்ஸ் எனும் பெயர் மாற்றமடைந்துள்ளது) எனும் நூற்பாலைத் தொழிலாளர்களுக்காக நூற்பலை நிர்வாகம் அமைத்த குடியிருப்புப் பகுதி இது.இப்பகுதியிலிருந்து இந்த நூற்பாலைப் பணிக்குச் செல்பவர்களுக்காக இக்குடியிருப்பின் அருகிலுள்ள திருப்பரங்குன்றம் தொடருந்து நிலையத்திலிருந்து நூற்பாலை வரை மூன்று வேளைகள் தொழிலாளர்களுக்கு தனி தொடருந்து இயக்கப்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த தொடருந்து நிறுத்தப்பட்டுவிட்டது.