ஹாரி பாட்டர் அன்ட் கோப்லட் ஒவ் பயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஹாரி பாட்டர் அன்ட் கோப்லட் ஒவ் பயர் (Harry Potter and the Goblet of Fire) ஹாரி பாட்டர் புனைவுத்தொடரின் நான்காம் புனைவு நூல் ஆகும். இப்புனைவு பிரித்தானிய எழுத்தாளர் ஜே. கே. ரோவ்லிங் என்பவரால் எழுதப்பட்டு 2000ம் ஆண்டு ஜூலை 8ம் திகதி வெளியிடப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் 3 மில்லியன் பிரதிகள் முதல் வாரத்தில் விற்றுத்தீர்ந்தது. இப்புனைவு 2001ல் ஹூகோ விருது பெற்றது. ஹாரி பாட்டர் புனைவுகளில் இவ்விருது பெற்ற ஒரே புனைவு இதுவாகும். 2005 நவம்பர் 15ல் இந்நூல் திரைப்படமாக எடுக்கப்பட்டது.

[தொகு] முன் கதைச் சுருக்கம்

ஹாரி பாட்டர் எனும் ஒரு சிறுவன் தனது 11வது வயதில் ஹாக்வர்ட்ஸ் எனும் மந்திர பாடசாலைக்கு செல்வதில் இருந்து ஆரம்பிக்கிறது இத்தொடர். தனது முதலாம் வருடத்தில் தனது பெற்றோரைக் கொன்ற வால்டமோர்ட் இடம் இருந்து சக்தி வாய்ந்த மந்திரக்கலை மீட்கிறான் தன் நண்பர்களான ரொன் மற்றும் ஹர்மய்னி உதவியுடன். இரண்டாம் வருடத்தில் வரலாற்று சிறப்புமிக்க 'இரகசியங்களின் அறை' திறக்கப்பட்டு பல மாணவர்கள் மர்மமான முறையில் இறக்கின்றனர். பசிலிஸ்க் எனும் இராட்சத பாம்பை கொன்றதன் மூலம் ஹாரி மாணவர்களின் இறப்பைத் தடுத்து நிறுத்துகிறான்.அத்துடன் வால்டமோர்ட்டின் மீள் வருகையையும் தடுக்கிறான். மூன்றாம் வருடத்தில் ஹாரி தனது ஞானத்தந்தையான சிரியஸ் ப்ளாக்கை சந்திக்கிறான்.அத்தோடு தனது பெற்றோர்களின் நண்பனான பீட்டர் பெடிக்ரூ வாலேயே அவர்கள் துரோகம் செய்யப்பட்டு வால்டமோர்ட்டினால் இறந்ததையும் அறிகிறான்.

[தொகு] கதை சுருக்கம்

முதலாம் அத்தியாயம் : ரிட்லின் வீடு

கதை 50 வருடங்களுக்கு முன் லிட்டில் ஹங்லிட்டன் இல் உள்ள ரிட்லின் வீட்டில் துவங்குகிறது. அவ்வீட்டில் இருந்த ரிட்ல் குடும்ப உறுப்பினர்கள் மூவரும் மர்மமான முறையில் இறக்கின்றனர். ப்ராங் ப்ரைஸ் எனும் அவ்வீட்டு வேலைக்காரன் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்படுகிறான். பின் ஒரு நாள் இரவு ப்ராங் ரிட்லின் வீட்டில் மர்மமாய் விளக்கு எரிவதைப் பார்த்து சந்தேகித்து அவ்வீட்டினுள் நுழைகிறான்.அங்கு ஒரு அறையில் வால்டமோர்ட், வாம்டெய்ல் ஹாரி பாட்டரை பிடிக்க சத்திட்டம் தீட்டுவதை ஒட்டு கேட்கிறான்.பின் வால்டமோர்ட்டின் பாம்பான நாகினியால் காட்டிக்கொடுக்கப்பட்டு 'அவாடா கெடாவ்றா' மந்திரத்தில் இறக்கிறான்.


இரண்டாம் அத்தியாயம் : தழும்பு

ஹாரி கனவிலிருந்து விழித்தெழுகிறான்;அவனின் நெற்றியில் உள்ள மின்னல் வடிவ தழும்பு கடுமையாக எரியத் துவங்குகிறது.தனது நண்பர்களான் ரொன்,ஹர்மைனி மற்றும் பேராசிரியர் டம்பிள்டோர் ஆகியோருக்கு கடிதம் எழுத நினைக்கிறான்.பின் மனதை மாற்றி தன் ஞானத்தந்தையான சிரியஸ் ப்ளாக்குக்கு கனவைப் பற்றி குறிப்பிடாமல் தழும்பு எரிவதை மட்டும் குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதுகிறான்.


மூன்றாம் அத்தியாயம் : அழைப்பு

மறுநாள் ஹரி தனது சித்தப்பா வீட்டில் இருக்கும் போது தன் நண்பன் ரொன்னிடம் இருந்து உலகக்கிண்ண குயிடிட்ச் இறுதிப்போட்டிக்கான அழைப்பை பெறுகிறான்.பின் ரொன் தன் குடும்பத்துடன் வந்து ஹாரியை சித்தப்பா வீட்டிலிருந்து தன் வீட்டுக்கு தீத்துகள் மூலம் அழைத்துச் செல்கிறான்.


நான்காம் அத்தியாயம் & ஐந்தாம் அத்தியாயம் : பரோவிற்கு திரும்புதல்

ரொன்னின் வீடான பரோவில் ரொனின் இரட்டைத் த்மையன்மார்களான ப்ரெட் மற்றும் ஜோர்ஜ் ஆகியோர் இனிப்பு பண்டங்கள் மற்றும் குறும்பு விளையாட்டு பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடுவதை ஹாரி அறிகிறான்.அவர்களின் தாய் இதற்க்கு கடுமையான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.அங்கேயே ரொன்னின் மூத்த சகோதரர்களான பில் மற்றும் சார்லியை சந்திக்கிறான்.

ஆறாம் அத்தியாயம் : தளதிறப்பு

ஹாரி தனது நண்பர்கள் இருவர் மற்றும் ரொன்னின் குடும்பத்துடன் குயிடிட்ச் உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு தளதிறப்பு வழியாக செல்கிறான்.தளதிறப்பு என்பது மந்திரத்தால் வசியப்படுத்தப்பட்ட ஒரு பொருள், அப்பொருள் தன்னைத் தொடுபவர்களை இன்னுமோர் இடத்திற்க்கு குறுகிய நேரத்தில் அழைத்துச் செல்லும்.அங்கு ஹாரி செட்றிக் மற்றும் அவருடைய தந்தை ஆமோஸ் டிகோரியையும் சந்திக்கிறான்.

ஏழாம் அத்தியாயம் : பக்மேன் மற்றும் க்ரௌச்

உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ஹாரி மந்திர விளையாட்டுத் துறை அமைச்சர் லூடோ பக்மேன் ஐயும் சர்வதேச மந்திர கூட்டுறவுத் திணைக்களத்தின் தலைவர் பார்ட்டிக் க்ரௌச் ஐயும் சந்திக்கிறான்.

எட்டாம் அத்தியாயம் : குயிடிச் உலகக்கிண்ணம்

உலகக்கிண்ண அரங்கத்தில் ஹாரி வின்க்கி எனும் வீட்டு வேலைகளை செய்யும் உயிரினத்தை சந்திக்கிறான்.அது பார்ட்டி க்ரௌச்சுக்காக ஓர் ஆசனத்தை பிடித்து வைத்திருந்தது.ஆனால் அவர் கடைசி வரை வரவே இல்லை.இறுத்ப்போட்டியில் அயர்லாந்து அணி மாபெரும் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.விக்டர் க்ரம் போட்டியில் சிறப்பாக செயற்பட்டவர் ஆவார்.

ஒன்பதாம் அத்தியாயம் : அபாய குறியீடு

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்