ஹல்க் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹல்க்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஆங் லீ
தயாரிப்புஅவி ஆராட்
லாரி பிரான்கோ
கேல் அன்னே ஹர்ட்
ஜேம்ஸ் ஸ்காமஸ்
மூலக்கதைஹல்க்
படைத்தவர் ஸ்டான் லீ
ஜாக் கிர்பி
திரைக்கதைஜேம்ஸ் ஸ்காமஸ்
மைக்கேல் பிரான்ஸ்
ஜான் டர்மன்
இசைடேனி எல்ஃப்மான்
நடிப்புஎரிக் பனா
ஜெனிஃபர் கானலி
சாம் எலியட்
ஜோஷ் லுகாஸ்
நிக் நோல்டி
கலையகம்யுனிவர்சல் ஸ்டுடியோஸ்
மார்வெல் ஸ்டுடியோஸ்
வல்ஹல்லா
குட் மெஷின்
விநியோகம்யுனிவர்சல் ஸ்டுடியோஸ்
வெளியீடுசூன் 20, 2003 (2003-06-20)
ஓட்டம்138 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$137 மில்லியன்
மொத்த வருவாய்$245,360,480

ஹல்க் (ஆங்கில மொழி: Hulk) இது 2003 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது மார்வெல் காமிக்ஸ் புத்தகத்தின் வரைகதைகளில் தோன்றும் ஹல்க் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் போன்ற நிறுவனங்கள் தயாரிக்க யுனிவர்சல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது.

அவி ஆராட், லாரி பிரான்கோ, கேல் அன்னே ஹர்ட், ஜேம்ஸ் ஸ்காமஸ் போன்றோர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை ஆங் லீ என்பவர் இயக்க, எரிக் பனா,[1][2] ஜெனிஃபர் கானலி, சாம் எலியட், ஜோஷ் லுகாஸ், நிக் நோல்டி[3][4] போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படம் ஜூன் 20, 2003 அன்று உலகம் முழுவதும் வெளியாகி, உலகளவில் $245 மில்லியனை வசூலித்தது. மற்றும் 2003 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகும். மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இரண்டாவது படமாக தி இன்க்ரெடிபிள் ஹல்க் என்ற தலைப்பில் ஜூன் 13, 2008 அன்று வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Rob Worley (2003-06-19). "Countdown to Hulk: Ang Lee's new green destiny". Comic Book Resources. பார்க்கப்பட்ட நாள் 2008-06-17.
  2. "Bana was TV Hulk Fan". Sci Fi Wire. 2001-12-27 இம் மூலத்தில் இருந்து 2008-04-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080401080622/http://www.scifi.com/scifiwire/art-main.html?2001-12%2F27%2F12.00.film. 
  3. Bonin, Liane (19 June 2003). "Hulk 's Nick Nolte on rage, science, and Shakespeare". Entertainment Weekly. பார்க்கப்பட்ட நாள் 5 January 2016.
  4. Lee, Alana (15 July 2003). "Nick Nolte: Hulk". BBC. பார்க்கப்பட்ட நாள் 5 January 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹல்க்_(திரைப்படம்)&oldid=3314769" இலிருந்து மீள்விக்கப்பட்டது