ஹபீஸ் முஹம்மது சயீத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹஃபீஸ் முஹம்மது சயீத்
(உருது: حافظ محمد سعید)
பிறப்புமார்ச்சு 10, 1950 (1950-03-10) (அகவை 74)
சர்கோதா, பாக்கித்தான்
தேசியம்பாக்கித்தான்பாக்கித்தான்
அமைப்பு(கள்)ஜமாத்-உத்-தாவா
சமயம்சுன்னி இசுலாம்

ஹஃபீஸ் முஹம்மது சயீத் (Hafiz Muhammad Saeed, உருது: حافظ محمد سعید; பிறப்பு 1950) ஜமாத்-உத்-தாவாவின் அமீர் (தலைவர்) ஆவார்.[1] இந்த அமைப்பு ஓர் ஈகை நிறுவனமாக இருப்பினும் தீவிரவாத இயக்கமான லஷ்கர்-ஏ-தொய்பாவின் முன்னணி அமைப்பாக பரவலாகக் கருதப்படுகிறது. இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹபீஸ் சயீத் இந்திய காவல்துறையால் மிகவும் தேவைப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டவர்.[2] ஐக்கிய நாடுகளின் தீர்மானம் எண் 1267இன்படி திசம்பர் 2008இல் ஜமாத்-உத்-தாவா ஓர் தீவிரவாத அமைப்பாகவும் ஹபீஸ் சயீத் ஓர் தீவிரவாதியாகவும் அறிவிக்கப்பட்டது.[3] ஹபீஸ் சயீத் தமக்கு லஷ்கர்-ஏ-தொய்பாவுடன் தொடர்பில்லை என மறுத்துள்ளார்.[4] [5] 2008 மும்பை தாக்குதல்களில் சாட்டுரைக்கப்பட்ட இவரை காட்டிக் கொடுப்பவர்களுக்கு ஐக்கிய அமெரிக்கா $10 மில்லியன் பரிசுத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது .[6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jamaat-ud-Dawah website-Organization". Archived from the original on 2018-07-16. பார்க்கப்பட்ட நாள் 2012-04-05.
  2. India's most wanted. 19. Frontline. 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0066210631 இம் மூலத்தில் இருந்து 2009-01-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090131212439/http://www.hinduonnet.com/fline/fl1902/19020180.htm. பார்த்த நாள்: 2009-02-02. 
  3. Roggio, Bill (11 December 2008). "UN declares Jamaat-ud-Dawa a terrorist front group". The Long War Journal. பார்க்கப்பட்ட நாள் 2010-03-19.
  4. "Third Mumbai Terrorist Suspect Placed Under House Arrest; Charity a Front Group For Terrorist Organization". Fox News. 2008-12-10. http://www.foxnews.com/story/0,2933,464730,00.html. பார்த்த நாள்: 2008-12-11. 
  5. "Jamaat chief rejects Indian charges". Al Jazeera English (Aljazeera IT). 2010-02-18. http://english.aljazeera.net/news/asia/2010/02/201021785121810598.html. பார்த்த நாள்: 2010-02-22. 
  6. http://www.ndtv.com/video/player/news/india-welcomes-10-million-bounty-on-hafiz-saeed/228229
  7. Daniel, Frank Jack (2012-04-03). "U.S. puts $10 million bounty on Pakistan militant; India pleased". Yahoo! News. Reuters இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 6, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120406080257/http://news.yahoo.com/u-puts-10-million-bounty-pakistan-militant-india-090803106.html. பார்த்த நாள்: April 03, 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹபீஸ்_முஹம்மது_சயீத்&oldid=3573665" இலிருந்து மீள்விக்கப்பட்டது