ஸ்டுவர்ட் தீவு

ஆள்கூறுகள்: 47°00′S 167°50′E / 47.00°S 167.84°E / -47.00; 167.84
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டுவர்ட் தீவு / ராக்கியூரா
Stewart Island / Rakiura
ராக்கியூரா (மாவோரி)
ஸ்டுவர்ட் தீவின் வரைபடம்
புவியியல்
அமைவிடம்போவா நீரிணை
ஆள்கூறுகள்47°00′S 167°50′E / 47.00°S 167.84°E / -47.00; 167.84
தீவுக்கூட்டம்நியூசிலாந்து தீவுக்கூட்டம்
முக்கிய தீவுகள்ஆங்கரேச் தீவு, பெஞ்ச் தீவு, காட்ஃபிஷ் தீவு, நேட்டிவ் தீவு, நோபிள் தீவு, பேர்ல் தீவு, மட்டன்பேர்ட் தீவுகள், ஊல்வா தீவு
பரப்பளவு1,746 km2 (674 sq mi)
உயர்ந்த ஏற்றம்979 m (3,212 ft)
உயர்ந்த புள்ளிஆங்கிலெம் மலை
நிர்வாகம்
NZL
பிராந்திய உள்ளூராட்சிசவுத்லாந்து
பெரிய குடியிருப்புஓபான் (மக். 322)
மக்கள்
மக்கள்தொகை381 (2013)
அடர்த்தி0.22 /km2 (0.57 /sq mi)

ஸ்டுவர்ட் தீவு / ராக்கியூரா (Stewart Island / Rakiura) என்பது நியூசிலாந்தின் மூன்றாவது பெரிய தீவாகும். இது தெற்குத் தீவின் தெற்கே 30 கிமீ தொலைவில், ஃபோவா நீரிணைக்குக் குறுக்கே அமைந்துள்ளது. ஸ்டுவர்ட் தீவின் மொத்தப் பரப்பளவு 1,680 சதுரகிமீ ஆகும்.[1] 2013 கணக்கெடுப்பின் படி இங்கு 381 பேர் நிரந்தரமாக வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஓபான் என்ற குடியேற்றப்பகுதியில் வசிக்கின்றனர்.

வரலாறு[தொகு]

உள்ளூர் மாவோரி மொழியில் ராக்கியூரா என்பது பொதுவாக வழங்கப்படும் பெயராகும். ஒளிரும் வானங்கள் என இதற்குப் பொருள்.[2] இத்தீவை 1770 இல் முதன்முதலாகக் கண்ணுற்ற ஐரோப்பியர் ஜேம்ஸ் குக் ஆவார். ஆனாலும், அவர் இதனைத் தெற்குத் தீவின் ஒரு பகுதியாகவே கருதினார். இதனால் இதற்கு தெற்கு முனை (South Cape) எனப் பெயரிட்டார். 1809 ல் ஆஸ்திரேலியாவின் ஜாக்சன் துறையில் (சிட்னியில்) இருந்து திமிங்கில வேட்டைக்காக இங்கு வந்த பெகாசசு கப்பலின் முதல் அதிகாரியான வில்லியம் ஸ்டுவர்ட்டின் நினைவாக இத்தீவிற்கு "ஸ்டுவர்ட் தீவு" எனப் பெயரிடப்பட்டது. இத்தீவின் நிலவரையை இவரே முதன்முதலில் வரைந்தார். இதன் மூலம் இவர் இத்தீவின் வடமுனையைக் கண்டறிந்து, இது ஒரு தீவு என நிறுவினார். இங்குள்ள மிகப்பெரும் தென்கிழக்குத் துறைமுகம் பெகாசசு துறை என அழைக்கப்படுகிறது. இவர் மீண்டும் 1820களிலும், 1840களிலும் இத்தீவிற்கு பயணம் மேற்கொண்டார்.[3]

1841 இல் இத்தீவு நியூசிலாந்தின் மூன்று மாகாணங்களில் ஒன்றாக ஆக்கப்பட்டு அதற்கு நியூ லெயின்ஸ்டர் எனப் பெயரிடப்பட்டது. ஆனாலும், ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் இம்மாகாணம் இல்லாதொழிக்கப்பட்டு, தெற்குத் தீவையும் உள்ளடக்கிய நியூ மன்ஸ்டர் மாகாணத்தினுள் கொண்டு வரப்படது.[4] பின்னர் 1853 இல் நியூ மன்ஸ்டர் மாகாணமும் நீக்கப்பட்டு, ஸ்டுவர்ட் தீவு 1861 வரை ஒட்டாகோ மாகாணத்தில் சேர்க்கப்பட்டது. 1876 இல் மாகாணங்கள் இல்லாதொழிக்கப்பட்டன.

20ம் நூற்றாண்டு வரை ஸ்டுவர்ட் தீவு என்ற பெயரே அதிகாரபூர்வமாக இருந்தது. பின்னர் 1998 ஆம் ஆண்டில் இத்தீவின் பெயர் அதிகாரபூர்வமாக ஸ்டுவர்ட் தீவு/ராக்கியூரா என மாற்றப்பட்டது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Walrond, Carl (3 September 2012). "Stewart Island / Rakiura – New Zealand's third main island". Encyclopedia of New Zealand. Manatū Taonga Ministry for Culture and Heritage. பார்க்கப்பட்ட நாள் 16 December 2012.
  2. "Features: Rakiura National Park". Department of Conservation (New Zealand). பார்க்கப்பட்ட நாள் 2014-05-06.
  3. Bernard John Foster. 1966
  4. "New Leinster, New Munster, and New Ulster". Encyclopedia of New Zealand. Manatū Taonga Ministry for Culture and Heritage. 
  5. Schedule 96 Alteration of place names

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டுவர்ட்_தீவு&oldid=1694813" இலிருந்து மீள்விக்கப்பட்டது