இசுகைப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஸ்கைப் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இசுகைப்
Skype logo.svg
உருவாக்குனர் இசுகைப் நிறுவனம்
துவக்க வெளியீடு ஆகத்து 2003
நிரலாக்க மொழி Embarcadero Delphi, Objective-C (iOS, Mac OS X), சி++ with Qt4 (Linux)
இயக்குதளம் பல் இயங்குதளம்
மொழிகள் பன்மொழி
வகை இணையமூடான ஒலி / நிகழ்நிலைத் தூதுவன்/ வீடியோ அழைப்பு
அனுமதி இலவச மென்பொருள் (கட்டண செலுத்துவதன் ஊடாக மேலதிக சேவைகள்)
இணையத்தளம் http://www.skype.com/

இசுகைப் (Skype) என்பது இணையமூடாக ஒலி ஒளி அழைப்புக்களையும் அரட்டை அடிக்க வசதியையும் ஏற்படுத்த உதவும் ஓர் கணினி மென்பொருள் ஆகும். இதில் இதே வலையமைப்பில் உள்ளவர்களுக்கு இலவசமாக ஒலியழைப்பினை வழங்குதோடு தொலைபேசி மற்றும் நகர்பேசிகளுக்கு ஏற்கனவே பணம் கட்டியிருந்தால் அதிருந்து அழைப்புக்களுக்கான கட்டணைத்தை அறவிட்டு அழைப்பினை ஏற்படுத்த இயலும். இதை விட மேலதிக வசதிகளாக நிகழ்நிலை உரையாடல், கோப்புப் பரிமாற்றம், ஒளித்தோற்ற (வீடியோ) உரையாடல்களையும் நிகழ்த்த இயலும். 2010ஆம் ஆண்டளவில் 663 பதிவுசெய்யப்பட்ட பயனர்களைக் கொண்டுள்ளது. [1]

இசுகைப் குழுமத்தில் தலமை அலுவலகம் இலக்சம்பேர்க்கில் அமைந்துள்ளது. இசுகைப்பின் விருத்தியாளர்களில் பெரும்பாலானவர்களும் 44% ஆன பணியாளர்கள் எசுத்தோனியாவில் உள்ள தலிலின், தார்ட்டுப் உள்ள அலுவலகங்களிலேயே பணியாற்றுகின்றனர். [2][3]

ஏனைய இணையமூடான ஒலியழைப்புக்களை ஏற்படுத்தும் மென்பொருள் போல் அல்லாமல் இசுகைப் சகா-சகா முறையிலேயே இணைப்புக்களை ஏற்படுத்துகின்றது.

இசுகைப் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே வாடிக்கயாளர்களைக் கவர்வதில் வெற்றிகண்டு அபரிமிதமாக வளர்ந்து வருகின்றது. ஈபே என்கின்ற இணைய வணிக நிறுவனத்தினால் செப்டமபர் 2005 ஆம் ஆண்டு உள்வாங்கப்பட்டது.

வசதிகள்[தொகு]

இசுகைப் இன்[தொகு]

இசுகைப் இன் பொதுவான தொலைபேசிகளில் இருந்து கணினிக்கு ஒலி அழைப்புக்களை ஏற்படுத்தப் பயனபடும். உள்ளூர்த் தொலைபேசி இலக்கங்கள் ஆஸ்திரேலியா, பிறேசில், சிலி, டென்மார்க் டொமினிக்கன் றிப்பப்றிக் எசுத்தோனியா பின்லாந்து பிரான்ஸ் ஜேர்மனி ஹாங்ஹாங் ஹங்கேரி ஐயர்லாந்து இத்தாலி ஜப்பான் மெக்சிக்கோ நியூசிலாந்து போலாந்து றொமேனியா தென்கொரியா சுவீடன் சுவிட்சர்லாந்து ஐக்கிய இராச்சியம் அமெரிக்கா ஆகிய நாடுகளின் உள்ளூர்த் தொலைபேசி இலக்கத்தினைப் பெற்றுக் கொள்ளலாம். இசுகைப் பயனர் ஒருவர் இந்த நாடுகளில் ஏதாவது ஒன்றில் உள்ளூர் தொலைபேசி இலக்கத்தினைப் பெற்றுக் கொள்ளலாம். எனவே கணினிக்கு அழைப்பு எடுப்பதற்கு ஆகும் செலவு உள்ளூர் தொலைபேசிக்கு ஏற்படுத்தும் அழைப்புக்கான கட்டணமே ஆகும். எடுத்துக் காட்டாக ஐரோப்பாவில் உள்ளூர்த் தொலைபேசி இலக்கங்களுக்கு கட்டணம் ஏதும் இன்றி இணைப்பை ஏற்படுத்த இயலும் எனில் இசுகைப் பயனருக்கும் அவ்வாறே கட்டணம் ஏதும் இன்றி அழைப்பை ஏற்படுத்தலாம். பிரான்ஸ் ஜேர்மான் ஆகிய நாடுகளில் வசிக்காமல் உள்ளூர்த் தொலைபேசி இலக்கத்தைனைப் பாவிப்பதானது சட்டபூர்வமற்ற ஓர் செயலாகும்.

ஒளிக் குழு விவாதங்கள்[தொகு]

ஒலி அழைப்புக்களுக்கு மேலதிகமாகப் முகத்தைப் பார்த்தவண்ணமே உரையாடலை நிகழ்த்தக் கூடியதான வசதி ஜனவரி 2006 இல் விண்டோஸ் மற்றும் மாக் ஓ. எசு. இயங்குதளங்களுக்காக அறிமுகப்படுத்தப் பட்டது. 13 மார்ச் 2008 இல் லினக்சு இயங்குதளத்திற்கான இசுகைப் 2.0 இந்த வசதியினைக் அறிமுகப்படுத்தியது. விண்டோசு இயங்குதளத்தில் இயங்கும் இசுகைப் 3.6.0.216 பதிப்பில் இருந்து சிறந்த காணொளித் தரத்துடன் பல்வேறு வசதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இசுகைப் அவுட்[தொகு]

இசுகைப் அவுட் (Skypeout) இசுகைப்பின் ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட சேவையாகும். இதன் மூலம் உலகின் எப்பாகத்திலுள்ளவர்களிற்கும் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்த முடியும்.

இது மூடிய Peer-to-peer முறையில் இயங்கும் இணையத் தொலைபேசி, தொலையெழுது வலையமைப்பு ஆகும். இந்த மென்பொருளானது பல்வேறு பாதுக்காப்புத் தடுப்புகள் (சுவர்கள்) கொண்டதும் மற்றும் NAT ஊடாக ஒலியழைப்புக்கள் சிறு பொதிகளாக்கப் பட்டு வேறு கணினி மென்பொருட்களுடன் சேர்த்து அனுப்பப்படும் அமைப்பு கொண்டது. ஒரு 'ஸ்கைப் பயனர் பிறிதோர் இசுகைப் பயனருடன் அல்லது இசுகைப்பில் குழு உரையாடலிலும் (ஒலி சார்ந்த உரையாடல்களிற்கு 5 பேரிற்கு மிகையாகமல்) முற்றிலும் இலவசமாக உரையாட முடியும். இது தவிர விண்டோசு எக்ஸ்பி பயனர்கள் இணைய ஒளிப்படக் கருவி (காமிரா) இருப்பின் அழைக்கபட்டவர்களைப் பார்த்துக் கொண்டே உரையாடமுடியும். இசுகைப் பயனர்கள் கட்டணம் செல்லுத்தி பன்னாட்டு மற்றும் உள்ளூர் அழைப்புகளை மேற்கொள்ளமுடியும் இச்சேவையை இசுகைப் அவுட்(SkypeOut) எனக் கூறுவர். இது மாத்திரமன்றி நிலம்வழி கம்பி-வடம் வழியாக இயங்கும் தொலைபேசியில் இருந்து இசுகைப்பிற்கும் தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்த முடியும் இது இசுகைப் இன் (SkypeIn) என்றழைக்கப் படுகின்றது.

2005ல் சுமார் 225 நாடுகள் மற்றும் தன்னாட்சிப் பகுதிகளில் வாழும் 54 பயனர்களைக் கொண்டுள்ளது. நாளொன்றுக்கு 150,000 புதுப்பயனர்களை ஈர்த்துக்கொண்டு வருகின்றது என அறியப்படுகின்றது.

மைக்ரோசாப்ட் கொள்முதல்[தொகு]

பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் மே 10, 2011 அன்று இசுகைப் நிறுவனத்தைத் தாம் 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்குக் கொள்வனவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் இசுகைப் நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருப்பதுடன், இசுகைப் நிறுவன நிறைவேற்று அதிகாரி அதே நிறுவனத்தின் அதிபராக நியமனம் பெற்றுள்ளதுடன் மைக்ரோசாப்ட் நிறைவேற்று அதிகாரி ஸ்டீவ் பால்மருக்கு கீழ் பணியாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. "Skype grows FY revenues 20%, reaches 663 mln users".
  2. {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்."".
  3. "Skype employees".

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இசுகைப்&oldid=1683404" இருந்து மீள்விக்கப்பட்டது