சாலி ஹாக்கின்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஷேலி ஹாக்கின்ஸ் (நடிகை) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சாலி செசிலியா ஹாக்கின்ஸ்
2017 இல் ஹாக்கின்ஸ்
பிறப்பு(1976-04-27)ஏப்ரல் 27, 1976
டலிச், இலண்டன், இங்கிலாந்து
படித்த கல்வி நிறுவனங்கள்அரங்கக் கலைகளுக்கான ராயல் அக்காடமி
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1998–தற்சமயம்
பெற்றோர்ஜாக்கி ஹாக்கின்ஸ் (தாய்)

சாலி ஹாக்கின்ஸ் (Sally Cecilia Hawkins, பிறப்பு: ஏப்ரல் 27, 1976) என்பவர் ஆங்கிலேயத் திரைப்பட நடிகை ஆவார். 2002 ஆம் ஆண்டில் தனது முதல் திரைப்படமான ஆல் ஆர் நத்திங்கில் (அனைத்தும் அல்லது ஒன்றும் இல்லை) நடித்தார்.[1] இதனை மைக் லீக் என்பவர் இயக்கினார். மீண்டும் இவரின் இயக்கத்தில் 2004 இல் வெரா ட்ரேக் எனும் திரைப்படத்தில் துணைக் கதாப்பத்திரத்தில் நடித்தார்.[2] பின் 2008 இல் ஹேப்பி கோ லக்கி எனும் திரைப்படத்தில் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தார். இதில் நடித்தற்காக பல விருதுகளைப் பெற்றார். குறிப்பாக சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருது பெற்றார். சிறந்த நடிகைக்கான சில்வர் பியர் விருது பெற்றார்.

ஷேலி ஹாக்கின்ஸ் வுடி ஆலனுடைய இரு திரைப்படங்களில் நடித்துள்ளார். முதல் திரைப்படம் 2007 இல் காசண்ட்ராஸ் ட்ரீம் (காசண்ட்ராவினுடைய கனவு) [3] மற்றொன்று 2013 இல் புளூ ஜாஸ்மின் (நீல மல்லிகை) ஆகும். அதன் பிறகு சிறந்த துணை நடிகைக்கான கோல்டன் குளோப் விருதிற்கும் , பிரிட்டிசு அகாதமி விருதிற்கும் பரிந்துரை செய்யப்பட்டார். 2010 இல் நிக்கோல் கோல் இயக்கிய மேட் இன் டேகென்ஹம் (டேகென்ஹம்மில் தயாரிக்கப்பட்டது) , 2014 இல் பால் கிங்கின் இயக்கத்தில் பட்டிங்டன் எனும் இயங்குபடத்தில் நடித்தார். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான பட்டிங்டன் 2 திரைப்படத்தில் நடித்தார். 2017 இல் கில்லர்மோ டெல் டோரோ இயக்கத்தில் ஷேப் ஆஃப் வாட்டர் (நீரின் வடிவம்) எனும் திரைப்படத்தில் வாய் பேச இயலாத பெண் கதாப்பத்திரத்தில் நடித்திருப்பார். இதில்நடித்ததற்ககாக சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதிற்கும் , பிரிட்டிசு அகாதமி விருதிற்கும் பரிந்துரை செய்யப்பட்டார். மேலும் அமெரிக்க திரைப்பட நிறுவனம் அளித்த 2017 வருடத்திற்கான சிறந்த பத்து படங்களில் இந்தப் படமும் இடம் பெற்றிருந்தது.[4]

ஷேலி ஹாக்கின்ஸ் நாடகத் திரைப்பட நடிகராக தனது நடிப்பு வாழ்க்கையைத் துவங்கினார். ரோமியோ ஜூலியட்டில் ஜூலியட் கதாப்பாத்திரத்தில் நடித்தார். வில்லியம் சேக்சுபியரின் மச் அதோ அபவுட் நத்திங் மற்றும் எ மிட் சம்மர் நைட்ஸ் ட்ரீம் ஆகியவற்றில் நடித்தார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஷேலி ஹாக்கின்ஸ் ஏப்ரல் 27 1976 இல் டல்விச், இலண்டனில் பிறந்தார். இலண்டனிலுள்ள பிளாக்ஹீத் நகரத்தில் வாழ்ந்து வந்தார். இவரின் பெற்றோர் ஜாக்கி ஹாக்கின்ஸ் - காலின் ஹாக்கின்ஸ் ஆவர். இவரின் தாய் குழந்தைகளுக்கான நூல்களின் எழுத்தாளார் ஆவார். இவரின் பெற்றோர் இருவரும் அயர்லாந்து கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்தவர்கள்.[5] இவருக்கு ஃபின்பர் ஹாக்கின்ஸ் எனும் மூத்த சகோதரர் உள்ளார். இவர் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் மூன்று வயதாக இருக்கும் போது வட்டரங்கு காட்சி பார்க்கச் சென்றபோது தான், நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. நகைச்சுவைக் கதாப்பத்திரத்தில் நடிக்க வேண்டுமென்று நினைத்தார் ஆனால் நாடகத் திரைப்படத்தில் நடிக்க நேர்ந்தது.[6] இவர் டல்விச்சிலுள்ள ஆலன்ஸ் பெண்கள் பள்ளியில் சேர்ந்தார். பின் 1998 ஆம் ஆண்டில் ராயல் நாடகக் கலை அகாதமியில் பட்டம் பெற்றார். இவருக்கு எழுத்துமயக்கம் குறைபாடு உள்ளது.[7]

சான்றுகள்[தொகு]

  1. "All or Nothing (2002) - Box Office Mojo", www.boxofficemojo.com (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-04-15
  2. Leigh, Mike (2005-02-04), Vera Drake, Imelda Staunton, Jim Broadbent, Heather Craney, பார்க்கப்பட்ட நாள் 2018-04-15
  3. ஐ எம் டி பி இணையதளத்தில்காசண்ட்ராஸ் ட்ரீம்/
  4. "AFI Awards 2017". AFI. பார்க்கப்பட்ட நாள் December 8, 2017.
  5. "Children's Books – Articles – Authorgraph No.116: Colin and Jacqui Hawkins | BfK No. 116". Booksforkeeps.co.uk. Archived from the original on 14 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 4 April 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. Galloway, Stephen; Guider, Elizabeth (8 December 2008). "Oscar Roundtable: The Actresses". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் 3 November 2014.
  7. Hoggard, Liz (10 November 2012). "Sally Hawkins: 'You only do good work when you're taking risks'". The Independent. பார்க்கப்பட்ட நாள் 24 March 2017.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலி_ஹாக்கின்ஸ்&oldid=3553565" இலிருந்து மீள்விக்கப்பட்டது