ஷார்டு
| தி ஷார்டு | |
|---|---|
மே 2012இல் தி ஷார்டு |
|
| பொதுவான தகவல்கள் | |
| அமைவிடம் | 32 இலண்டன் பிரிட்ஜ் சாலை, சௌத்வாக், இலண்டன், ஐக்கிய இராச்சியம் |
| கட்டுமானம் | |
| தொடக்கம் | மார்ச்சு 2009 |
| நிறைவு | சூலை 2012 (திறப்பு பெப்ரவரி 2013) |
| தள எண்ணிக்கை | 95 (இயந்திரங்களுடைத் தளங்கள் உட்பட), 72 (வசிக்கத்தக்கன) |
| தளப்பரப்பு | 12,00,000 சதுர அடி (1 மீ2) |
| முதன்மை ஒப்பந்தகாரர் | மேசு நிறுவனம் |
| செலவு | ~ £450 மில்லியன் |
| வடிவமைப்புக் குழு | |
| கட்டிடக்கலைஞர் | ரென்சோ பியானோ |
| அமைப்புப் பொறியாளர் | டர்னர் & டவுன்சென்டு (திட்ட மேலாண்மை), டபுள்யூஎஸ்பி கன்டர் செய்நுக் (அமைப்புப் பொறியாளர்கள்), இராபர்டு பேர்டு குழுமம் (கான்கிரீத்து வேலைகள்) இசெபெக் டைட்டன் 40+ தளங்களிலும் காங்கிரீத்தும் |
| சேவைகள் பொறியாளர் | அரூப் |
| References | |
தி ஷார்டு (The Shard, முன்னதாக ஷார்டு இலண்டன் பிரிட்ஜ், இலண்டன் பாலம் கோபுரம்[2][3] அல்லது கண்ணாடிச் சில்லு)[4][5] ஐக்கிய இராச்சியத்தின் இலண்டனில் உள்ள ஓர் வானளாவி ஆகும். தரைமட்டத்திற்கு மேலே 309.6 மீட்டர்கள்s (1 அடி) உயரமுடைய இது சூலை 2012இல் கட்டி முடிக்கப்பட்டது. [6] இதுவே ஐரோப்பாவிலுள்ள மிக உயரமான கட்டிடங்களில் முதல்நிலையில் உள்ளதாகும். ஐக்கிய இராச்சியத்தில் மிக உயரமான கட்டுமானமாக இரண்டாம்நிலையில் உள்ளது; முதலாவதாக 330-மீட்டர்கள் (1 அடி) உயரமுடைய எம்லி மூர் ஒலிபரப்புக் கோபுரம் விளங்குகிறது.
1975ஆம் ஆண்டில் சௌத்வாக்கில் கட்டப்பட்டிருந்த 24 தளக் கட்டிடம்,சௌத்வாக் கோபுரத்தை இடித்து அங்கு இது கட்டப்பட்டுள்ளது. இதனை கட்டிடக் கலைஞர் ரென்சோ பியானோ திட்டமிட்டு வடிவமைத்துள்ளார். இந்தக் கட்டிடத்தில் 72 தளங்கள் வசிக்கத்தக்கன; 245 மீட்டர்கள்s (804 அடி) உயரத்திலுள்ள 72வது தளத்தில் பார்வையாளர் அரங்கமும் திறந்தவெளி அவதானிப்பு மேல்தட்டும் உள்ளன.[7] கீழிருந்து மேல்வரை ஓர் ஒழுங்கற்ற பிரமிடு வடிவத்தில் முழுமையும் கண்ணாடியால் போர்த்தப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனாலேயே இக்கட்டிடம் சில்லு எனப்பொருள்பட ஷார்டு எனப் பெயரிடப்பட்டது. இந்தக் கட்டிடம் சூலை 5, 2012 அன்று திறக்கப்பட்டது. பொதுமக்களுக்கு பெப்ரவரி, 2013இல் திறந்துவிடத் திட்டமிடப்பட்டுள்ளது.[8][9]
மேற்கோள்களும் குறிப்புக்களும் [தொகு]
- ↑ ஷார்டு at Emporis
- ↑ "London Bridge Tower, London". Designbuild-network.com (2011-06-15). பார்த்த நாள் 2012-07-06.
- ↑ "Shard funding crisis: Tower finances cast shadow over project". World Architecture News. 10 September 2007. http://www.worldarchitecturenews.com/index.php?fuseaction=wanappln.projectview&upload_id=1387. Retrieved 7 July 2010.
- ↑ Bar-Hillel, Mira (24 February 2009). "£28bn Shard of Glass to start its ascent". London Evening Standard. http://www.thisislondon.co.uk/standard/article-23651085-28bn-shard-of-glass-to-start-its-ascent.do. Retrieved 7 July 2010.
- ↑ "Work starts on Shard of Glass". New Civil Engineer. 2 April 2009. http://www.nce.co.uk/news/structures/work-starts-on-shard-of-glass/1996445.article. Retrieved 7 July 2010.
- ↑ "Shard London Bridge". SkyscraperNews.com. பார்த்த நாள் 2 April 2012.
- ↑ Whitten, Nick (2009-05-20). ""Shard observation deck to be Europe's highest"". Cnplus.co.uk. பார்த்த நாள் 2012-07-06.
- ↑ ""Prince Andrew and Qatari prime minister to open Shard on 5 July"". London-se1.co.uk. பார்த்த நாள் 2012-07-06.
- ↑ ""Qatar's Shard the tallest building in Europe now"". Gulf-times.com (2012-01-03). பார்த்த நாள் 2012-07-06.
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Shard London Bridge தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- [www.the-shard.com அதிகாரப்பூர்வ இணையதளம்]
- டுவிட்டரில் ஷார்டு
- London Bridge Quarter website
- Overview of London Bridge Tower Project by Cliff L'Aimable
- Article describing the demolition and the tower's construction
- The London Bridge BID Company
- The Shard Special on Estates Gazette
- James Sellar, CEO of Sellar Property Group, discusses the Shard of Glass at New London Architecture, 2010(Video)
- General information, timeline and a gallery of pictures relating to the Shard
- Shardcam – live daylight webcam image
- Computer generated virtual panorama