வ. நல்லையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வி. நல்லையா
V. Nalliah
 நாஉ

அஞ்சல், தொடர்புத்துறை அமைச்சர்
பதவியில்
19 சூன் 1952 – 12 சூலை 1952

இலங்கை அரசாங்க சபை உறுப்பினர்
திருகோணமலை-மட்டக்களப்பு
பதவியில்
1943 – 1947

நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி - கல்குடா
பதவியில்
1947 – 1956
பின்வந்தவர் ஏ. எச். மாக்கான் மாக்கார்
அரசியல் கட்சி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்

பிறப்பு அக்டோபர் 9, 1909(1909-10-09)
இறப்பு திசம்பர் 27 1976 (அகவை 67)
துறை ஆசிரியர்

வல்லிபுரம் நல்லையா (Vallipuram Nalliah, 10 செப்டம்பர் 1909 - 27 டிசம்பர் 1976) இலங்கைத் தமிழ் ஆசிரியரும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சரும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை[தொகு]

நல்லையா 1909 அக்டோபர் 9 இல்[1] மட்டக்களப்பு, புளியந்தீவு என்ற கிராமத்தில் பிறந்தவர். புனித மிக்கேல் கல்லூரியில் படித்து, லண்டன் மெற்ரிக்குலேசன் கலைப் பட்டதாரி ஆனார். மகரகமை ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் பயின்று பயிற்சி பெற்ற ஆசிரியரானார்.[2] முதலில் சிவானந்தா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்த நல்லையா பின்னர் அட்டாளச்சேனை ஆண்கள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தலைமை ஆசிரியரானார். தங்கரத்தினம் முத்தையா என்பவரைத் திருமணம் புரிந்தார்.[2] மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.[2]

அரசியலில்[தொகு]

நல்லையா 1943 ஆம் ஆண்டில் திருகோணமலை-மட்டக்களப்புத் தொகுதிக்கு இடம்பெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அரசாங்க சபைக்குத் தெரிவானார்.[2] 1947 நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக கல்குடா தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3] பின்னர் டொன் ஸ்டீபன் சேனாநாயக்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். இதனை அடுத்து அவர் சுகாதாரம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார்.[2] 1952 தேர்தலில் ஐதேக வேட்பாளராகப் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[4] இவர் சிறிது காலம் டட்லி சேனாநாயக்கவின் அமைச்சரவையில் அஞ்சல், தொடர்புத்துறை அமைச்சராகப் பதவியில் இருந்தார்.[5]

1956 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[6] 1960 மார்ச் தேர்தலிலும் தோல்வியடைந்தார்.[7] பின்னர் இவர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக 1965 தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் தோல்வியடைந்தார்.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nalliah, Vallipuram". இலங்கைப் பாராளுமன்றம்.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 116-117. http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon. 
  3. "Result of Parliamentary General Election 1947". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  4. "Result of Parliamentary General Election 1952". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  5. Rajasingham, K. T.. "Chapter 14: Post-colonial realignment of political forces". Sri Lanka: The Untold Story. http://www.atimes.com/ind-pak/CK10Df03.html. 
  6. "Result of Parliamentary General Election 1956". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  7. "Result of Parliamentary General Election 1960-03-19". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  8. "Result of Parliamentary General Election 1965". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
"http://ta.wikipedia.org/w/index.php?title=வ._நல்லையா&oldid=1482017" இருந்து மீள்விக்கப்பட்டது