வோல்டா ஏரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வோல்டா ஏரி | |
|---|---|
|
|
|
| அமைவிடம் | மேற்கு கிழக்கு |
| புவியமைவுக் கூறுகள் | அமைவு: |
| வகை | நீர்த்தேக்கம் |
| உள்வடிகால் | வெள்ளை வோல்டா ஆறு கருப்பு வோல்டா ஆறு |
| வெளிப்போக்கு | வோல்டா ஆறு |
| வடிநிலம் | 3,85,180 கிமீ2 (1 ச மைல்) |
| வடிநில நாடுகள் | கானா |
| மேற்பரப்பளவு | 8,502 கிமீ2 (3 ச மைல்) |
| சராசரி ஆழம் | 18.8 மீ (62 அடி) |
| அதிக அளவு ஆழம் | 75 மீ (246 அடி) |
| நீர் கனவளவு | 148 km3 (32.6 × 1012 gallons) |
| கரை நீளம்1 | 4,800 kilometres (2 மை) |
| மேற்பரப்பின் உயரம் | 85 மீ (279 அடி) |
| 1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவீடல்ல. | |
வோல்டா ஏரி (Lake Volta) பரப்பளவில் உலகின் மிகப்பெரிய ஏரி ஆகும். கொள்ளளவு அடிப்படையில் இது உலகில் நான்காவது மிகப்பெரிய ஏரி ஆகும். இந்த ஏரி முழுவதும் கானா நாட்டில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 8,502 கிமீ² (3,275 சதுர மைல்கள்). வோல்டா ஏரி தீர்க்கரேகை நடுக்கோட்டில் அமைந்துள்ளது. நிலநடுக் கோட்டின் வடக்கில் ஆறு டிகிரி அகலாங்கில் இந்த ஏரி அமைந்துள்ளது. ஏரியின் வடக்கு பகுதி எப்பை நகரத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது. மேலும் இதன் தென்முனை அகோசொம்போ அணையில் முடிகிறது.