வோலோஃப் மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வோலோஃப் மொழி, வோலோஃப் இனத்தவரின் மொழியாகும். இது, செனகல், கம்பியா, மௌரித்தானியா ஆகிய நாடுகளில் பேசப்படுகின்றது. இம் மொழி, நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தில், அத்திலாந்திக் கிளையைச் சேர்ந்தது.
வோலோஃப், செனகல் நாட்டில் ஏறத்தாழ 40% மான பெரும்பான்மையினர் மொழி என்பதுடன், செனகல் முழுவதிலும் உள்ள ஏனைய இனத்தவராலும் பேசப்படுகின்றது.