வைரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வைரி Shikra | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சிவப்புக் கண்ணுடன் ஆண் வில்லேத்திரன்
|
||||||||||||||
| காப்பு நிலை | ||||||||||||||
|
அக்கறை வேண்டாதவை LC (IUCN3.1) [1]
|
||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Accipiter badius கிமெலின், 1788 |
வல்லூறு, வில்லேத்திரன் குருவி அல்லது பறப்பிடியன் என்று பலவாறு அழைக்கப்படும் வைரி ஆக்சிபிட்டிரிடே குடும்பத்தைச் சேர்ந்த இரைவாரிச் செல்லும் பறவைகளுள் ஒன்று. இப்பறவை தெற்கு ஆசியாவில், குறிப்பாக இந்தியாவிலும், சகாராவிற்குத் தெற்கிலும் பெருமளவிற்குக் காணப்படுகின்றது.
பொருளடக்கம் |
உடலமைப்பும் நிறமும்[தொகு]
- 30 - 34 செ.மீ உடலளவு [2] கொண்ட (சாதாரண புறாவின் அளவை ஒத்தது) இப்பறவை, நீலச்சாம்பல் நிற மேலுடலும் வெண்ணிற அடியுடலில் பழுப்பு-நிற மென்வரிப் பட்டைகள் குறுக்கேயும் கொண்டிருக்கும். பெண் பறவையின் மேலுடல் கரும்பழுப்பு நிறத்திலிருக்கும்; பெண் சற்று பெரியதாயிருக்கும். இளம்பறவையின் அடியுடலில் செம்பழுப்பு-நிறப் புள்ளிகள் நீள்வாக்கிலிருக்கும்.
- வாலில் கரும்பட்டைகளிருக்கும்.
கள இயல்புகள்[தொகு]
- மரங்கள் நிறைந்த திறந்தவெளிப் பகுதிகளை விரும்பும் வைரி, அடர்ந்த வனங்களைத் தவிர்க்கும். மனித வாழ்விடங்களுக்கு அருகில் அதிகம் காணப்படும்.
- தன் பார்வையிடமான இலைகளடர்ந்த மரக்கிளையிலிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் இரையை நோக்கிக் கீழிறங்கும் வில்லேத்திரன், இமைப்பொழுதில் இரையைக் கொத்திச் செல்லும்.
- இதன் கூப்பாடு கி .. கீ ... என்று தொனியில் கரிச்சான் குருவியின் கூப்பாட்டை ஒத்திருக்கும்.
- இறக்கைகளைப் பலமுறை அடித்த பின் நழுவும் பாணியில் பறந்து செல்லும். வானத்தில் வட்டமிடும் பாணியில் பறப்பதையும் காணலாம்.
உணவு, கூடு, குஞ்சு பொறித்தல்[தொகு]
- அணில்கள், ஓணான்கள், எலிகள், குருவிகள், தட்டானின் இளம்புழுக்கள் போன்றவை இதன் உணவாகின்றன. தன் குஞ்சுகளுக்கு உணவளிக்கும் காலங்களில் வீடுகளிலிருந்து கோழிகளைத் திருடுவதும் உண்டு.
- மார்ச்சிலிருந்து சூன் வரை இதன் கூடு கட்டும் காலமாகும். மாமரத்திலோ அதையொத்த மரத்திலோ காய்ந்த புல், வேர்களாலான காகத்தின் கூட்டையொத்த கூட்டை வில்லேத்திரன் அமைக்கும்.
- மூன்று அல்லது நான்கு நீல வெண்ணிற முட்டைகளைப் பெண் பறவை இடும். ஆணும் பெண்ணும் சேர்ந்தே குஞ்சுகளைப் பாதுகாக்கின்றன.[3]
ஒரு சில களப்பார்வைகள்[தொகு]
- தன் வருகையை வில்லேத்திரன் அறிவித்தவுடனேயே அணில்கள் பரபரப்படைந்து அதே தொனியில் கூச்சலிடுவதைக் காணலாம். எனினும் இரையைத் தெரிவு செய்தபின் வில்லேத்திரன் கூப்பீட்டை நிறுத்தி விடும்.
- வில்லேத்திரனைத் தொடர்ந்தே செல்லும் காகங்கள், அது இரையைக் கொத்தியவுடன் விடாது தொந்தரவு செய்து அதன் இரையைக் கவர எத்தனிக்கும்.
கலைச்சொற்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ BirdLife International (2008). Accipiter badius. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 19 February 2009.
- ↑ The Book of Indian Birds - Salim Ali
- ↑ Book of Indian Birds - Salim Ali
- ↑ விக்சனரி
- ↑ விக்கிப்பீடியா - சிவப்புப் பட்டியல்