வைரவன் சுதர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வைரவன் சுதர்மன் (பிறப்பு: ஆகத்து 28 1928 தமிழ்நாடு தேவகோட்டையில் பிறந்த இவர் அங்கே தனது ஆரம்பக் கல்வியைக் கற்று பின்னர் உயர்நிலைக் கல்வியை மலேசியாவின் கோலப்பிலாவிலும், குளுவாங்கிலும் பெற்றார்.

தொழில்[தொகு]

தமிழ், ஆங்கிலம், மலாய், சீனம், இந்தி போன்ற மொழிகளில் நன்கு தேர்ச்சிபெற்ற இவர் சிங்கப்பூர் விமான நிலையத்தில் சுமார் 24 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

பதவிகள்[தொகு]

இவர் சிங்கப்பூர் எழுத்தாளர் சங்கத்தின் செயலவை உறுப்பினராகவும், துணைத்தலைவராகவும், மாதவி இலக்கிய மன்றத் துணைத் தலைவராகவும் பதவி வகித்தார். நேதாஜி சுபாஸ் சந்திரபோல் அடைத்த இந்திய தேசிய ராணுவம், தொழிற்சங்கம், பொதுவுடைமை இயக்கம் மலாயன் இந்தியன் காங்கிரஸ் போன்றவற்றிலும் இவர் இடம்பெற்றிருந்தார்.

இலக்கியப் பணி[தொகு]

1946ல் எழுதத் தொடங்கிய இவர் கவிதை, கட்டுரை, பயணக் கட்டுரை போன்றவற்றை எழுதியுள்ளார்.

எழுதியுள்ள நூல்கள்[தொகு]

  • யார் குற்றவாளி?
  • சமூகமா? சம்பிரதாயமா?
  • நினைவலைகள்
  • சமயத்தால் ஓர் உலகம்
  • உலக வரலாற்றுத் தோற்றக் கூறுகளும் மனித நேயமும்
  • சிங்கப்பூரும் தமிழரும்
  • இனிய நினைவுகள்
  • எண்ண அலைகள்
  • சுழலுகின்ற உலகில் சுற்றுகின்ற வாழ்க்கை

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

இவரது ‘வரலாற்று நினைவுகள்’ எனும் நூலுக்காக தமிழக அரசின் பாராட்டுச் சான்றிதழ் (1991)

உசாத்துணை[தொகு]

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைரவன்_சுதர்மன்&oldid=2713106" இலிருந்து மீள்விக்கப்பட்டது