வையாபுரி ஐயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வையாபுரி ஐயர் என்பவர் கிபி 14ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த புலவர். பண்டத்தரிப்பு கோயிற்பற்றைச் சேர்ந்த மாதகல் என்னும் ஊரில் பிறந்தவர். சயவீர சிங்கையாரியன் என அழைக்கப்பட்ட ஐந்தாம் செகராசசேகரன் (1380 - 1414) காலத்தில் சமத்தானப் புலவராய் இருந்தவர்[1]. வையாபாடல் என்ற யாழ்ப்பாண வரலாற்று நூலை எழுதியவர்.

இயற்றிய நூல்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. கணபதிப்பிள்ளை, மு. தென்புலோலியூர், ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள், வெளியீடு: பாரி நிலையம், சென்னை. பக். 213.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வையாபுரி_ஐயர்&oldid=1653074" இலிருந்து மீள்விக்கப்பட்டது