வேலை-வாழ்வு சமநிலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேலை-வாழ்வு சமநிலை என்பது ஒருவரின் வேலை அல்லது தொழிலுக்கும் அவரது தனிப்பட்ட வாழ்வுக்கும் (நலம், ஈடுபாடுகள், குடும்பம்) இடையேயான நேர அல்லது ஆற்றல் பங்கீட்டைப் பற்றிய கருத்துரு ஆகும். தரமான வாழ்வுக்கு முறையான வேலை-வாழ்வு சமநிலையைப் பேணுவது அவசியம் என உளவியலாளர்கள், சமூகவியலாளர்கள் கூறுகிறார்கள். வேலை-வாழ்வு சமநிலை தனிமனிதத் தெரிவுகளாலும், அரசியல் பொருளாதாரச் சூழ்நிலைகளாலும் தீர்மானிக்கப்படுகிறது.