வேலைக்கான நேர்முகத் தேர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேலைக்கான நேர்முகத் தேர்வு என்பது, வேலை கொள்வோர் தமக்குப் பொருத்தமான பணியாளர்களை மதிப்பீடு செய்வதற்காக 16 ஆம் நூற்றாண்டில் இருந்தே கைக்கொள்ளும் ஓர் வழிமுறையாகும்.

முறைகள்[தொகு]

வேலை தொடர்பான விளம்பரங்கள் பத்திரிகையூடாகவும் இணையத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் அறிவிக்கப்படும். இந்த வேயைப் செய்ய விரும்புபவர்கள் தமது சுயவிபரக் கோவையை விண்ணப்பத்துடன் அனுப்புவார்கள் (பொதுவாக மனிதவளப் பிரிவிற்கு). அங்கே பொருத்தமானவை எனக்கருதும் சில சுயவிபரக்கோவைகள் வடிகட்டி எடுக்கப்படும். பழையகாலத்தில் 2 பக்கங்களுக்கு மிகையாகாமல் சுயவிபரக்கோவையையே விரும்பினார்கள் எனினும் அண்மைக்காலத்தில் சுயவிபரக்கோவைகள் பல பக்கங்களிலும் இருப்பதும் ஓர் போட்டியாளரில் இருந்து இன்னோர் போட்டியாளரை பிறிதாகத் தரம் பிரித்துக் காட்டும் என்பதால் இதுவும் இப்பொழுது விரும்பப்படுகின்றது.

ஸ்டைல்கள்[தொகு]

சுயவிபரக் கோவையானது பொதுவாகச் சுருக்கமாக 2 பக்கங்களில் இருக்கலாம். இவை A4 மற்றும் Letter அளவிலோ இருக்கலாம்.

காலரீதியாக வகைப்படுத்தல்[தொகு]

பொதுவாக சுயவிபரக்கோவையை காலரீதியாக அண்மைக்காலத்தில் இருந்து ஆரம்பித்து முந்தையவற்றைக் கீழும் காட்டுதலே விரும்பப்படுகின்றது. எடுத்துக்காட்டாக ஓருவர் பல்கலைக் கழகப் பட்டப்படிப்பு உடையவர் என்றால் முதலில் அதைப்பற்றி விளக்கிவிட்டு பின்னர் அதற்கு முந்தையவற்றைக் கீழே தரலாம். வேலை சம்பந்தமான விபரங்களும் இவ்வாறானதே.

நேர்முகத் தேர்வுக்குத் தயார்படுத்தல்[தொகு]

எப்பொழுதுமே நேர்முகத்தேர்விற்கு ஆகக்குறைந்தது 15 நிமிடமாவது முன்னரே செல்லவதே நல்லது. நேர்முகத் தேர்வு நடக்கும் இடம் பரீட்சயமானதாக இல்லாவிட்டால் இயன்றவரை 1/2 மணித்தியாலமாவது முன்னரே போவது நல்லது. இடையில் எதிர்பாராத வாகன நெரிசல்கள் வேறு பிரச்சினைகள் வரக்கூடும் என்பதையும் கருத்திற் கொள்ளவும். நேர்முகத் தேர்விற்குப் போகமுன்னர் முதல்நாளே வேண்டிய ஆவணங்களைத் எல்லாம் தயார்படுத்திவிட்டு அடுக்கி நேரத்திற்கு தூங்கவும். இயன்றவரை பணியாற்ற விரும்பும் அமைப்பின் தகவலகளைப் பெற்றுக்கொள்ளவும். இணையத்தளங்கள் தெரிந்தவர்கள் ஊடகங்கள் போன்றவை இதற்கு உதவி செய்யும்.

நேர்முகப் பரீட்சையை எதிர்கொள்ளல்[தொகு]

நேர்முகத் தேர்வு இடத்திற்கு வந்ததும் நீங்கள் வந்திருப்பதைக் காரியதரிசியிடம் உறுதிப்படுத்திக் கொள்ளவும். அவர்கள் அழைத்தவுடன் நீங்கள் வணக்கம் கூறி உங்களை நீங்கள் சுய அறிமுகம் செய்துகொள்ளவும்.

நேர்முகப் பரீட்சையில் கேட்கப்படும் பொதுவான கேள்விகளும் விடைகளும்[தொகு]

  • பொதுவாக நேர்முகப் பரீட்சையைச் செய்பவர்கள் முதலில் உங்களைப் பற்றி அறிமுகப்படுத்தும் படி கேட்டுக்கொள்வார்கள் ஏனென்றால் முதலில் உங்களைப் பற்றி அறிந்துகொண்டால் மாத்திரம்தான் உலகத்தைப் பற்றி அறிந்துகொள்ளலாம் என்னும் கோட்பாடேயாகும்.
    • விடையளிக்கும் பொழுது நீங்கள் நன்றாக வினைத்திறனாவர் என்றும் வேலை சம்பந்தமாக ஏற்கனவே அனுபவம் உண்டென்றும் (அப்படியில்லாவிட்டால் ஏற்கனவே பல்கலைக்கழகத்தில் நன்கு கற்றுள்ளார் என்று குறிப்பிடுவது நலம்)
  • உங்களுடைய பலங்கள் யாவை?
    • கடந்தகாலத்தில் நீங்கள் ஆற்றிய பணிகளின் சுருக்கம்
    • கடந்தகால விடையளிக்கும் பொழுது நேர்மையானவர் என்றும் பொது

உசாத்துணைகள்[தொகு]