வேலன்சியா கால்பந்துக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வேலன்சியா கால்பந்துக் கழகம்
Valencia Cf Logo original.png
இணையதளம் Club home page
Home colours
Away colours
Third colours

Current season

வேலன்சியா கால்பந்துக் கழகம் (Valencia Club de Fútbol) என்பது எசுப்பானியாவின் வேலன்சியா நகரை அமைவிடமாகக் கொண்ட கால்பந்துக் கழகமாகும். இக்கழகம் எசுப்பானியாவின் முதல்நிலைக் கூட்டிணைவான லா லீகாவில் பங்குகொள்கிறது. எசுப்பானியாவிலும் ஐரோப்பாவிலும் பெரும் வெற்றிகள் கண்ட ஒரு முக்கியமான கால்பந்துக் கழகம் இதுவாகும்.

வேலன்சியா வென்ற கோப்பைகள் பின்வருமாறு:

வேலன்சியா கால்பந்துக் கழகம் தொடர்ச்சியாக இருமுறை யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு இறுதிப் போட்டிகளை எட்டியுள்ளனர். 2000-ஆம் ஆண்டின் இறுதிப் போட்டியில் சக எசுப்பானிய அணியான ரியல் மாட்ரிட்-டிடம் தோற்றனர். 2001-ஆம் ஆண்டில் செருமனி அணியான பேயர்ன் மியூனிச்-சிடம் பெனால்டி முறையில் தோற்றனர்; முழு-நேர ஆட்ட முடிவில் 1-1 என்ற இலக்குகள் கணக்கில் இருந்தனர். மொத்தமாக ஏழு ஐரோப்பிய கோப்பை இறுதிப் போட்டிகளை எட்டி, அவற்றுள் நான்கை வென்றுள்ளனர்.

ஒட்டுமொத்த லா லீகா வரலாற்றில் பெற்ற புள்ளிகள் பட்டியலில், இவர்கள் பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளுக்கடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கின்றனர். ஐரோப்பிய அளவிலும் அவ்விரு அணிகளுக்கு அடுத்தபடியாக அதிக வெற்றிகள் பெற்ற எசுப்பானிய அணியாக இருக்கின்றனர். இம்மூன்று அணிகள் மட்டுமே ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஐரோப்பிய கோப்பைகளை வென்ற எசுப்பானிய அணிகள்.[1]

குறிப்புதவிகள்[தொகு]