வேர் ஹேவ் ஆல் தி லீடர்ஸ் ஃகான் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேர் ஹேவ் ஆல் தி லீடர்ஸ் ஃகான்? (Where Have All the Leaders Gone?)
நூலாசிரியர்லீ ஐயகோகா. (Lee Iacocca & Catherine Whitney)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
வெளியிடப்பட்ட நாள்
2007

வேர் ஹேவ் ஆல் தி லீடர்ஸ் ஃகான்? (Where Have All the Leaders Gone?) ஆங்கிலத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான புத்தகம். இதன் ஆசிரியர் லீ ஐயகோகா.

சிறந்த தலைமைக்கான பண்புகளைப் பட்டியலிட்டு அவற்றை விளக்குகிறார் ஆசிரியர்.

இந்த நூலில் அமெரிக்காவின் தலைவர்கள் குறித்த அவரது கூர்மையான கருத்துகள், அமெரிக்காவின் தலைமைப் பண்பு குறைபாடுகள், அமெரிக்க குழந்தைகளின் பள்ளிநாட்களை அதிகரிக்க வேண்டியதின் தேவை குறித்த அவரது சிந்தனைகள், ஆசிரியர்களை ஊக்கப்படுத்த வேண்டியது, ஆசிரியர்களுக்கு உயர்வு அளித்து சமுதாயத்தில் முக்கியமானவர்களாக நடத்த வேண்டியதின் அவசியம், ஆசிரியர்களும் கல்வி கற்பித்தலைத் தவிர வேறு வேலைகள் செய்யாமல் கவனம் குவிக்கவேண்டியதின் அவசியம், தொடக்கக் கல்வியின் முக்கியத்துவம், இந்தியாவின் வளர்ச்சி தடுக்கமுடிதாததெனின் இணைய வேண்டியதன் அவசியம், பிறநாடுகள் மீதான கண்ணோட்டங்கள் என்று பலவும் தொகுக்கப்பட்டுள்ளன. பிரச்சனைகள் அனைத்தையும் சமாளிக்கும் தலைவர்கள் இல்லாதபொழுது ஒவ்வொரு குடிமகனும் தலைவராக உருவாக முயல வேண்டியதின் அவசியத்தையும் குறிப்பிடுகின்றார்.

வெளி இணைப்புகள்[தொகு]