வேர்னர் ஐசன்பேர்க்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| வேர்னர் ஐசன்பேர்க் |
||
|---|---|---|
வேர்னர் கார்ல் ஐசன்பேர்க் (1901-1976). நிழற்படம் கி.பி 1927. |
||
| பிறப்பு | டிசம்பர் 5 1901 | |
| பிறப்பிடம் | வூர்ஸ்பர்க், ஜெர்மனி | |
| இறப்பு | பெப்ரவரி 1 1976 (அகவை 74) |
|
| இறப்பிடம் | மியூனிச், ஜேர்மனி | |
| வாழிடம் | வார்ப்புரு:நாட்டுத் தகவல் ஜேர்மனி | |
| குடியுரிமை | வார்ப்புரு:நாட்டுத் தகவல் ஜேர்மனி | |
| பல்கலைக்கழகம் | மியூனிச் பல்கலைக் கழகம் | |
| ஆய்வு நெறியாளர் | ஆர்னோல்ட் சொம்மர்பெல்ட் | |
| குறிப்பிடத்தக்க மாணவர்கள் |
பீலிக்ஸ் புளொச் Edward Teller ருடோல்ப் ஈ. பியர்ல்ஸ் பிரீட்வார்ட் விண்டர்பேர்க் Peter Mittelstaedt Şerban Ţiţeica Ivan Supek Erich Bagge Hermann Arthur Jahn Raziuddin Siddiqui Reinhard Oehme[1] |
|
| உணர் | Uncertainty Principle ஐசன்பேர்க்கின் நுண்நோக்கி Matrix mechanics ஐசன்பேர்க் அறிவியல் முறை Kramers-Heisenberg formula Heisenberg group Isospin |
|
| Influenced | ராபர்ட் டோப்பெல் கார்ல் பிரீட்ரிக் வொன் வீஸ்சாக்கர் ஜான் பார்டீன் |
|
| மதம் | லூதேரன் | |
| பிற குறிப்பு | இவர் நரம்புயிரியலாளர் மார்ட்டின் ஐசன்பேர்க்கின் தந்தையும், ஆகஸ்ட் ஐசன்பேர்க்கின் மகனும் ஆவார் | |
வேர்னர் கார்ல் ஐசன்பேர்க் என்னும் முழுப்பெயர் கொண்ட வேர்னர் ஐசன்பேர்க் (டிசம்பர் 5, 1901 - பெப்ரவரி 1, 1976) ஒரு புகழ் பெற்ற ஜெர்மானிய இயற்பியலாளரும், நோபல் பரிசு பெற்றவரும் ஆவார். குவாண்டம் பொறிமுறையைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவரான இவர் 20 ஆம் நூற்றாண்டின் முக்கியமான இயற்பியலாளர்களுள் ஒருவராகவும் கருதப்படுகிறார். ஐசன்பேர்க், நாஸி ஆட்சியின் கீழ் ஜெர்மன் அணு ஆற்றல் திட்டத்தின் தலைவராக இருந்தார். இத் திட்டத்தின் இயல்பும், இதில் ஐசன்பேர்க்கின் பங்களிப்பும் பெருமளவு விவாதத்துக்கு உரியதாக இருந்தது. இவர், நவீன இயற்பியலின் மையக் கொள்கைகளுள் ஒன்றான ஐசன்பேர்க் uncertainty கொள்கையை கண்டுபிடித்ததன் மூலமும், குவாண்டம் பொறிமுறையின் வளர்ச்சியில் இவருடைய பங்களிப்புக்காகவும் பெரிதும் அறியப்படுகிறார். இதற்காக 1932 ஆம் ஆண்டில் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
Cite error: <ref> tags exist, but no <references/> tag was found