வேமனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேமனா
வேமனாவின் உருவம் பொறித்த அஞ்சல் தலை
வேமனாவின் உருவம் பொறித்த அஞ்சல் தலை
பிறப்பு17ஆம் நூற்றாண்டு
கடப்பா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா[சான்று தேவை]
இறப்புகடாருபள்ளி அனந்தபூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
தொழில்அச்சலா யோகி, கவிஞர், சமூக சீர்திருத்தவாதி

யோகி வேமனா என பிரபலமாக அறியப்படும் வேமனா என்பவர் தெலுங்கு கவிஞரும், மெய்யியலாளரும் ஆவார். இவரது பாடல்கள் இயல்பான, எளிமையான தெலுங்கிலேயே எழுதப்பட்டிருக்கும். அறிவு, நேர்மை உள்ளிட்ட குணங்களைப் பற்றியே இவரது பாடல்களில் போதித்திருப்பார். இவர் நினைவாக பெயரிடப்பட்ட யோகி வேமனா பல்கலைக்கழகம், ஆந்திராவில் உள்ளது.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

வேமனன் வாழ்ந்த காலம் பற்றி அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. வேமனைப் பற்றிய ஆராய்ச்சிக்காகப் பெயர் பெற்ற சி. பி. பிரவுன், இவருடைய சில வசனங்களின் அடிப்படையில் இவர் பிறந்த ஆண்டை 1652 என்று மதிப்பிடுகிறார். இவர் பதினைந்தாம், பதினாறாம், பதினேழாம் நூற்றாண்டு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் பிறந்தார் என்று பல்வேறு ஆதாரங்கள் கூறுகின்றன[1] வேமனா ஒரு வேத அறிஞரும், அச்சல சித்தாந்தத்தில் சிறந்த யோகியும் ஆவார்.[2]

வேமனா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கடப்பா மாவட்டத்தில் உள்ள காந்திகோட்டாவில் பிறந்தவர்.

கவிதை நடை[தொகு]

வேமனாவின் கவிதைகள் உலக ஒழுக்கங்கள். சமூக உணர்வு என்பது அவருடைய கவிதைகளின் சிறப்பியல்பு. சமூகத்தின் அனைத்துப் பிரச்சனைகளையும் பல்வேறு கோணங்களில் பார்த்து அந்த பார்வையை தனது கவிதைகளில் வெளிப்படுத்தியவர் வேமனார். குடும்ப அமைப்பு குறைபாடுகள், மதத்தின் பெயரால் சுரண்டல், உருவ வழிபாட்டுக்கு எதிர்ப்பு, குருக்கள் மற்றும்  துறவிகள் என ஒவ்வொரு சமூக சீர்கேட்டையும் தமது பாடலகளில் வெளிப்படுத்தினார்,


அனைத்து கவிதைகளையும் ஆடவெலதி(ఆటవెలది) சந்தத்தில் இயற்றினார். மிக ஆழமான உணர்வுகளை எளிய மொழியில், அழகான உதாரணங்களுடன் நெஞ்சைத் தொட்டுப் பேசினார் வேமனார். வழக்கமாக அவர் முதல் இரண்டு வரிகளில் உள்ள நெறிமுறைகளை முன்மொழிகிறார் மற்றும் மூன்றாவது வரியில் அதற்கு பொருத்தமான உருவகத்தைக் காட்டுகிறார். சில பாடல்களில் முதலில் உருவகத்தையும் பிறகு நெறிமுறைகளையும் கூறுகிறார்.நான்காவது வரியில் "விஸ்வதாபிராம வினுர வேம" என்று முடிக்கிறார். இந்த முடிவின் பொருளைப் பற்றி இரண்டு விதமாக வாதங்கள் உள்ளன.

* வேமனாவின் உறவினர் விஸ்வதாவையும் மற்றும் அவரது நண்பன் அபிராமா ஆகியோருக்கு அமரத்துவம் வழங்கும் விதமாக என்பது ஒரு வாதம்.

* விஸ்வதா என்றால் படைத்தவன், அபிராம என்றால் பிரியமானவன் - வேமா, படைப்பாளிக்கு பிரியமானவன்  என்று இதற்கு அறிஞர்கள் வேறு பொருள் கொடுத்துள்ளனர்.

பிரவுன் இந்த இரண்டாவது பொருளை எடுத்துக்கொண்டு கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்

வேமனாவைப் பற்றிய ஆய்வு[தொகு]

வேமனாவின் கவிதைகள் பலநூறு ஆண்டுகளாக எழுதப்படாமல் சாமானியர்களின் வாய்வழியாக மட்டுமே இருந்தது. 1806 ஆம் ஆண்டில், இந்தியாவுக்கு வருகை தந்த ஒரு பிரெஞ்சு மிஷனரி, ஜே ஏ துபாய், ஹிந்து பழக்கம், பழக்கவழக்கங்கள் மற்றும் பண்டிகைகள் என்ற பெயரில் பிரெஞ்சு மொழியில் ஒரு புத்தகத்தை எழுதினார். இது 1887 இல் ஹென்றி கே பியூகாம்ப் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ஆன்மாவின் புனிதத்தைப் பற்றி விவாதிக்கும் போது, ​​சேற்றை உண்டாக்கி சுத்தம் செய்யும் தண்ணீரைப் போல, ஒருவரின் சித்தமே பாவத்திற்குக் காரணம், சித்தத்தால் மட்டுமே ஒருவன் புனிதமாக முடியும் என்ற வேமனாவின் பாடலில்லிருந்து மேற்கோள் காட்டுகிறார். 1816ல் இந்தியா வந்த சார்லஸ் பிலிப் பிரவுன் பல வேமனாவின் கவிதைகளைத் திரட்டினார். ஏறக்குறைய 18 ஆண்டுகள், வேமனார் இலக்கியத்தில் கவனம் செலுத்தினார்.  நூற்றுக்கணக்கான கவிதைகளைச் சேகரித்து லத்தீன் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். வில்லியம் ஹோவர்ட் கேம்ப்பெல் (1910), ஜி.யு.போப் மற்றும் சி.இ.கௌவர் போன்ற ஆங்கில இலக்கியவாதிகள் வேமனனை மதச்சார்பற்ற கவிஞர் என்று பாராட்டினர்.

1928 இல், ராலபள்ளி அனந்தகிருஷ்ண சர்மா ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு ஆராய்ச்சி செய்து விரிவுரை செய்தார். ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் ஆருத்ராவால் வேமன்னாவைப் பற்றிய விரிவுரைகளை நடத்தியது. மேற்குறிப்பிட்ட எழுத்தாளர்களின் முயற்சிக்குப் பின், வேமனுடைய எழுத்துக்களுக்கு அறிஞர்களின் தனி மரியாதை கிடைத்தது. பின்னாட்களில் பல இளம் கவிஞர்களும் எழுத்தாளர்களும் வேமனா கவிதைகளைப் பற்றியும் வேமனாவைப் பற்றியும் ஆய்வு செய்தனர். அவர்களில் என். கோபியும் பாங்கூரும் முக்கியமானவர்கள்,

இறப்பு[தொகு]

ஆந்திரப் பிரதேசம், அனந்தப்பூர் மாவட்டம், கதிரி வட்டத்தில் உள்ள கடாருபள்ளி (கதிரி நகரம்) என்ற கிராமத்தில் யோகி வேமனனின் கல்லறையைக் குறிக்கும் ஒரு கல்லறைக்கல் உள்ளது. இக்கிராமத்தில் வேமனர் இறந்ததாக பரவலாக நம்பப்படுகிறது. அவர் ஒரு யோகி என்பதால், தகனம் செய்யப்படாமல் புதைக்கப்பட்டார்.

குறிப்புகள்[தொகு]

  1. Jackson, William Joseph (2004). Vijayanagara voices: exploring South Indian history and Hindu literature. Ashgate Publishing. பக். 112. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7546-3950-3. https://books.google.com/books?id=PxvDNBc4qwUC&pg=PA112e. 
  2. "Vemana Community". Indian Cinema Wiki.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேமனா&oldid=3683395" இலிருந்து மீள்விக்கப்பட்டது