வேமசித்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வேமசித்திரின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வேமசித்தன்(वेमचित्रिन्) பௌத்தத்தில் அசுரர்களின் முக்கியமான தலைவர்களுள் ஒருவன். இவனை குறித்த செய்திகள் பல பௌத்த சூத்திரங்களில் காணப்படுகின்றன. இவன் பாளி மொழியில் வேமிசித்தி(वेमिचित्ति) என அழைக்கப்படுகிறான்.

தாவதிம்ச உலகத்தில் உள்ள தேவர்களுடன் போர் மூண்டபோது வேமசித்திரின் மிக முக்கியமான தலைவர்களுள் ஒன்றாக இருந்தான். இவ்வாறாக ஒரு போரின் பிறகு, சிறைப்படுத்தப்பட்டு ஒரு கைதியாக இந்திரன் முன் நிறுத்தப்பட்டான். அப்போது சக்ரனை நோக்கி கடும் சொற்களை வேமிசித்திரின் கூறினான். இருப்பினும் இந்திரன் அவன் செய்த அவமானங்களை பொறுத்துக்கொண்டு பொறுமையே பலத்தின் அடையாளம் என்று அவனிடம் கூறினார்.(வேபசித்தி சூத்திரம்)

இன்னொரு முறை, வேமசித்தனக்கும் இந்திரனுக்கும் இடையே கவிப்போட்டி தேவர்கள் மற்றும் அசுரர்களின் முன்னிலையில் நடைபெற்றது. ஒருவரின் கவிதைக்கு இன்னொருவர் பதில் கவிதை இயற்றினர். இரு சாராரும் சக்ரனுடைய கவிதைகளையே சிறந்த கவிதைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஏனெனில் இந்திரனின் கவிதைகள் அறிவுறுத்தும் விதமாகவும் சமாதன போக்குடனம் இருந்தது. ஆனால் வேமசித்திரினின் கவிதைகளில் வாதமும் வன்முறையும் நிரம்பி இருந்ததாக கருதப்பட்டது (சுபாசிதஜெய சூத்திரம்)

வேமசித்தனின் மகளின் பெயர் சுயா ஆகும். பல வருடங்களாக இவளும் இந்திரனும் பல காலமாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதன் விளைவாக வேமசித்திரின் தன்னுடைய எதிரியின் மாமனார் ஆனான்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேமசித்தன்&oldid=3824060" இலிருந்து மீள்விக்கப்பட்டது