வெள்ளைப் பெட்டிச் சோதனை
வெள்ளைப் பெட்டிச் சோதனையானது மென்பொருளின் உட்கட்டமைபை வைத்துச் சோதிக்கப்படும் படிமுறையாகும். இது தெளிவான பெட்டிச் சோதனை என்றும் கிளாஸ் பெட்டிச் சோதனை, structural சோதனை என்றவாறும் அறியப்படுகின்றது. மென்பொருளில் இச்சோதனை முறையில் ஒவ்வொரு படிமுறையூடாகவும் செல்வதால் நிராக்கல் மொழியறிவு அவசியம் ஆகும். சோதனையாளார் சோதனை உள்ளீடு ஒன்றை கணினிக்கு வழங்கி அது நிரலில் அது செல்லும் பாதையைப் பின் தொடர்ந்து சரியான வெளீட்டைத் தருகின்றாதா என்பதைச் சரிபார்ப்பார்.
இந்தச் சோதனையானது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றதோ அதைப் பின்பற்றியே நடத்தப்படுவதால், நடைமுறைப்படுத்தும் முறையில் மாற்றங்கள் செய்தால் சோதனையிலும் மாற்றங்கள் செய்யவேண்டும். எடுத்துக்காட்டகா இலத்திரனியல் சோதனை ஒன்றில் புதிதாக சேர்கிட் (Circuit) ஒன்றுதேவைப்பட்டாலும் அதை வணிகரீதியாகத் தரமுடியாமல் இருக்கலாம். எனவே பிழையான பொருள் ஒன்று தொடர்ந்தும் பிழையாகவே இருக்கலாம்.
வெள்ளைப் பெட்டிச் சோதனையானது தொகுதிச் சோதனை, integration சோதனை மற்றும் சிஸ்டம் (system) போன்றவற்றில் பயன்படுத்தக் கூடியதாக இருந்தாலும் பொதுவாகத் தொகுதிச் சோதனைகளிலேயே பயன்படுத்தப்படுகின்றது. பொதுவாக இது ஒரு தொகுதியில் உள்ளே பாதையைச் சரிபார்த்தாலும் integration சோதனையில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் இடையில் எவ்வாறு செல்கின்றது என்பது சரிபார்க்கப்படும். இச்சோதனைமுறையில் வழுக்களைக் கண்டுபிடிகக்கூடியதாக இருந்தாலும் மென்பொருட் தேவைகள் ஆவணத்தில் தரப்பட்டுள்ள எல்லாவற்றையும் பூர்த்தி செய்யும் வகையில் மென்பொருளானது உள்ளதா எனச் சரிபார்க்க இயலாது. ஆயினும் ஒருவர் எல்லாப் பாதைகளும் சரிவரச் சோதிக்கப்படுள்ளது என்பதனை உறுதிப்படுத்த இயலும்.
பொதுவாக வெள்ளைப் பெட்டிச் சோதனையில் கீழ்வரும் முறைகளை உள்ளடக்கியிருக்கும்.
- கட்டுப்படுத்திய பாய்ச்சற் சோதனை
- தரவுப் பாய்ச்சற் சோதனை