வெள்ளலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வெள்ளலூர்
வெள்ளலூர்
இருப்பிடம்: வெள்ளலூர்

, தமிழ்நாடு மாவட்டம் = கோயம்புத்தூர்

கணக்கெடுப்பு வருடம் = 2001
அமைவிடம் 10°58′02″N 77°01′40″E / 10.96722, 77.02778அமைவு: 10°58′02″N 77°01′40″E / 10.96722, 77.02778
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ்நாடு

மாவட்டம் = கோயம்புத்தூர் கணக்கெடுப்பு வருடம் = 2001

[[தமிழ்நாடு

மாவட்டம் = கோயம்புத்தூர் கணக்கெடுப்பு வருடம் = 2001 ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]

[[தமிழ்நாடு

மாவட்டம் = கோயம்புத்தூர் கணக்கெடுப்பு வருடம் = 2001 முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]

மக்கள் தொகை 17,294
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

வெள்ளலூர் (ஆங்கிலம்: Vellalur அல்லது Vellalore), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதி ஆகும். அருகில் போத்தனூர், செட்டிபாளையம் கிராமம், சிங்காநல்லூர் ஆகியவற்றை கொண்டுள்ளது. பணடைய ரோமானியர்களின் வணிகத்தில் இந்த ஊர் மிகவும் முக்கிய வணிகப் பகுதியாக இருந்துள்ளது. கொங்கு கலைக் களஞ்சியத்தைச் சார்ந்த அதிகாரி ஜெகதீசன் என்பவர் தமிழகத்தில் கண்டெடுக்கபட்ட ரோமானிய நாணயங்களில் 80% இங்கே தான் கிடைத்துள்ளது என்கிறார். மேலும் அவ்வணிகம் முதலாம் நூற்றாண்டுக்கு முன்னரே நடந்ததாக அவர் கூறுகிறார். இந்த ஊர், நொய்யல் ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,294 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வெள்ளலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வெள்ளலூர் மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கோயில்கள்[தொகு]

வெள்ளலூர் பல பழமையான பெருமை வாய்ந்த கோயில்களை கொண்டுள்ளது. கரிவரதராஜப் பெருமாள் கோயில், தேனீஸ்வரர் கோயில், பேச்சியம்மன் கோயில், பெரிய விநாயகர் கோயில், எமதர்ம ராஜா கோயில் போன்ற பல திருக்கோயில்கள் இவ்வூரில் அமைந்து உள்ளன.

புகைப்படங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.


"http://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளலூர்&oldid=1525406" இருந்து மீள்விக்கப்பட்டது