வெப்பக் கடத்தல்
|
இக்கட்டுரை அல்லது இக்கட்டுரையின் ஒரு பகுதி விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இது விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்றப்பட வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம் மற்றும் நடைக் கையேடு ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம். |
திண்மப் பொருளொன்றில் வெப்பம் கடத்தப்படலே வெப்பக்கடத்தல் எனப்படும். வெப்பம் கூடுதலான இடத்திலிருந்து குறைவான இடத்திற்கு இங்கு கடத்தல் நடைபெறும். திரவங்களிலும் வாயுக்களிலும் இச்செயற்பாடு மேற்காவுகை மூலம் நடைபெறும்.
உலோகக் கோலொன்றின் யாதேனுமொரு பகுதியை வெப்பமேற்றும் போது அப்பகுதியில் காணப்படும் சுயாதீன இலத்திரன்கள் இயக்க சக்தியைப் பெற்று வேகமாக அதிர்வடைய ஆரம்பிக்கும். அவை எழுமாறாக இயங்கி ஏனைய சுயாதீன இலத்திரன்களுடன் மோதுவதன் மூலம் வெப்பசக்தி கடத்தப்படும். வெப்பக்கடத்தலானது மூலக்கூறுகளின் அதிர்வின் மூலமும் கடத்தப்பட்டாலும் அது குறைந்த செல்வாக்கையே வெப்பக்கடத்தலில் ஏற்படுத்தும். எனவே தான் சுயாதீன இலத்திரன்களைக் கொண்ட உலோகங்களும், காரீயமும் வெப்பத்தை நன்றாகக் கடத்தும்.