வெப்பக்குகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெப்பக் குகை அல்லது வெப்ப ஆய்வகம் (hot cave, அல்லது hot lab) என்பது அதிக கதிரியக்க முடைய பொருட்களைக் கையாளுவற்காக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக்கூடமாகும். இப்படிப்பட்ட ஆய்வகத்தில் எல்லாப்பணிகளும் தானியங்கிகளால் அல்லது தொலைவிலிருந்து இயக்குமாறு அமைக்கப்பட்டுள்ளள்ளன. பல மீட்டர் தடிமனான உயிரியல் காப்புத் தகடும் தொலைவும் இங்கு பணியில் இருப்பவர்களை மிகவும் ஊடுருவல் பண்புடைய கதிர்களிலிருந்து பாதுகாக்கின்றன. கதிரியக்க கழிவுகளான ஆவி, தூசு முதலியன மனிதர்கள் புழங்கும் இடம் நச்சிப்படாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. கதிரியக்கப் பொருள் இருக்கும் இடம் எதிர் (-) அழுத்தத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் எளிதில் கதிரியக்க மாசு பணியாளர்கள் இருக்கும் இடத்திற்குப் பரவாது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்பக்குகை&oldid=1376182" இலிருந்து மீள்விக்கப்பட்டது