வெப்பஇயக்கவியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வெப்ப இயக்கவியல் (Thermodynamics) வெப்பம், அதன் தன்மை, வெப்ப ஆற்றலுக்கும் அல்லது சத்திக்கும் பிற ஆற்ற வடிவங்களுடான தொடர்பு போன்ற விடயங்களை ஆயும் இயல். இயற்பியலின் ஒரு கிளைத் துறையான இது, இயற்பியல் முறைமைகளில், வெப்பநிலை, அழுத்தம், கனவளவு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களின் விளைவுகளை ஆய்வு செய்கிறது. மேற்படி விளைவுகளைப் பெருநோக்கு (macroscopic) அடிப்படையில் துகள்களின் மொத்த இயக்கங்களையும், புள்ளியியல் முறைகளைப் பயன்படுத்தி இது ஆய்வு செய்கின்றது. அண்ணளவாக, வெப்பம் என்பது மாறுநிலையில் உள்ள ஆற்றல் ஆகும். எனவே வெப்ப இயக்கவியலின் பிழிவானது, ஆற்றலின் இயக்கம் பற்றியும், அவ்வாற்றல் எவ்வாறு இயக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றியும் ஆய்வு செய்தல் ஆகும்.இத்துறையை தெறுமத்தினவியல் என்றும் தமிழில் குறிப்பிடலாம் எனச் சிலர் பரிந்துரை செய்கின்றனர்.
தொடக்கத்தில் இத்துறையானது நீராவி எஞ்சினின் பயனுறு திறனை (efficiency) மேம்படுத்துவதற்காகவே உருவாக்கி வளர்க்கப்பட்டது.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- வளிமண்டல வெப்ப இயக்கவியல்
- உயிரியல் வெப்ப இயக்கவியல்
- கருங்குழி வெப்ப இயக்கவியல்
- வேதியியல் வெப்ப இயக்கவியல்
- சமநிலை வெப்ப இயக்கவியல்
- சமநிலையற்ற வெப்ப இயக்கவியல்
- புள்ளியியல் வெப்ப இயக்கவியல்
- வெப்பப்பொருளியல்

