சந்தனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வெண்சந்தனம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சந்தனம்
சந்தன மரத்தில் பகுதிகள்
சந்தன மரத்தில் பகுதிகள்
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
நிலைத்திணை
(தரப்படுத்தப்படாத): பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத) Eudicots
(தரப்படுத்தப்படாத) Core eudicots
வரிசை: Santalales
குடும்பம்: Santalaceae
பேரினம்: Santalum
இனம்: S. album
இருசொற்பெயர்
Santalum album
லின்னேயஸ்

சந்தனம் (Santalum album, Indian sandalwood) மருத்துவப் பயன்பாடுடைய ஒரு மரமாகும். சந்தனக் கட்டையைச் சந்தனக் கல்லில் [2] தேய்த்து வரும் சாந்தை கோடை வெப்பத்தைத் தணிக்க மார்பில் பூசிக்கொள்வது இந்திய மக்களின் வழக்கம். இந்திய மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரம். இதன் தாயகம் இந்தியா. இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுந்து காணப்படும். சுமாரான உயரத்துடன் கூடிய மரம். வளர்ந்த மரம் வாசனை நிரம்பியது. மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து நிரம்பியது. இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்னும் எண்ணெய் மருத்துவப் பண்புகள் கொண்டவை. சருமத்திற்கு குளிர்ச்சியளிக்கக் கூடியவை.

சந்தன மர அமைப்பு[தொகு]

சந்தன பூக்கள்

மரத்தின் வைரம் பாய்ந்த நடுப்பகுதியும், வேர்களும் மிகுந்த மணம் கொண்டவையாகும். சந்தன மரம் 12 முதல் 40 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. சந்தனமரம் தனித்து வளராது. வேறு மரத்திற்கு அருகில்தான் வளரும். மற்ற மரத்தின் வேரிலிருந்து தனக்கு வேண்டிய ஊட்டச் சத்துகளைப் பெற்றுக் கொள்கிறது. மரம் வளர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பழங்களை தருகிறது.

வளரும் இடம்[தொகு]

இதன் தாயகம் இந்தியா[சான்று தேவை]. சந்தன மரம் உலக விளைச்சலில் 65 சதவீதம் இந்தியாவில், குறிப்பாக கர்நாடகாவில் விளைகிறது. கர்நாடகத்தில் ஒரு குறிப்பிட்ட சுற்றளவு கொண்ட சந்தன மரங்கள் அரசுக்கு சொந்தமானவை. மேலும் சந்தன மரத்தை வெட்டுவது வனத்துறையால் செய்யப்படுகிறது.[3] இலங்கையிலும் பன்னெடுங் காலமாகவே சந்தன மரங்கள் காணப்படுகின்றன. இப்போதும் இலங்கையின் மேல், தென், மத்திய, சப்பிரகமுவா, ஊவா ஆகிய மாகாணங்களில் சில காட்டுப் பகுதிகளில் தானாக வளர்ந்த சந்தன மரங்களைக் காணலாம். தற்காலத்தில் சந்தன மரங்கள் வணிகப் பயிர்களாக வளர்க்கப்படும் திட்டங்கள் ஆங்காங்கே செயற்படுத்தப்படுகின்றன.

வெள்ளை சந்தனம்[தொகு]

வெள்ளை சந்தனம் சாதாரண சந்தன மரங்களுள் ஒன்று, இதை அறிவது மிக கடினம், மரபு அணு சோதனை முலம் மட்டும் தான் கண்டுபிடிக்க முடியும். இந்த வெள்ளை சந்தனம் பல லட்சக்கணக்கான மரங்களுள் ஒன்று அல்லது இரண்டு மட்டுமே விளையகூடியது. வெள்ளை சந்தனம் சிறப்பு வாய்ந்த சந்தன மரங்களுள் ஒன்று. வெள்ளை சந்தன மரத்தின் சிலை (முருகன், சிவன், வேல்) சமய வழி பாட்டில் முக்கிய இடம் பெறுகிறது. நறுமணம் இல்லை. வெள்ளை சந்தனம் மரங்களுக்கு மருத்துவக் குணங்களும் உண்டு. இதை அன்றே சித்தர்கள் கண்டறிந்து பல நூல்களில் எழுதி வைத்தனர்.

வெந்சந் தனமரத்தா னல்லறிவு மின்பமெழிற்
பொற் செந்திருவருளும் பூமிதத்துண் - மெச்சுஞ்
சரும வழகுந் தனிமோ கமுமாம்
மிருமுநோ யேகும் பறழ்ந்து

- பதார்த்த குணபாடம் - பாடல் (209)

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Asian Regional Workshop (1998). Santalum album. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 2007-02-08.
  2. சந்தனக் கல்
  3. Karnataka Forest Department Rules
"http://ta.wikipedia.org/w/index.php?title=சந்தனம்&oldid=1703055" இருந்து மீள்விக்கப்பட்டது