வீ. கே. சமரநாயக்க
| வீ. கே. சமரநாயக்க V. K. Samaranayake |
|
| பிறப்பு | 1939 கொழும்பு, இலங்கை |
|---|---|
| இறப்பு | ஜூன் 6, 2007 சுவீடன் |
| பணி | கணினித்துறைப் பேராசிரியர் |
| வாழ்க்கைத் துணை | சிறியா சமரநாயக்க |
"வித்யா ஜோதி" பேராசிரியர் வீ.கே.சமரநாயக்க B.Sc (Ceyl), D.I.C., Ph.D.(Lond), D.Sc.(Colombo), MBCS, MCS(SL), FNASSL, MIEEE (1939 - ஜூன் 6, 2007) இலங்கையில் கணணி மற்றும் தகவல் தொடர்பாடல் துறையின் வளர்ச்சிக்கு வித்திட்டவர். இதனால் தான் இவர் "இலங்கையின் கணணித் துறையின் தந்தை" என அழைக்கப்படுகின்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியாக கடமையாற்றிய பேராசிரியர் வீ.கே.சமரநாயக்க ஒரு கணணி விஞ்ஞானப் பேராசிரியர் ஆவார். இலங்கையின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி என்பவற்றின் வளர்ச்சியில் பேராசிரியர் வீ.கே.சமரநாயக்க ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. பேராசிரியர் வீ.கே.சமரநாயக்க உருவாக்கிய கொழும்பு பல்கலைக்கழக கணணிக் கல்லூரி (UCSC) இன்று இலங்கையின் பிரதான கணணிக் கற்கை நிலையமாக விழங்குகின்றது. பேராசிரியர் வீ.கே.சமரநாயக்க அவர்கள் இறக்கும் போது இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவராண்மை நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.
[தொகு] ஆரம்பக் கல்வியும் குடும்ப வாழ்க்கையும்
திரு திருமதி V.W சமரநாயக்க தம்பதிகளின் புதல்வரான பேராசிரியர் சமரநாயக்க தனது இடைநிலைக் கல்வியினை கொழும்பு றோயல் கல்லூரியிலும் உயர் கல்வியினை இலங்கைப் பல்கலைக் கழகத்திலும் பயின்றார்.
[தொகு] வாழ்க்கை
1961ம் ஆண்டு முதல் பேராசிரியர் சமரநாயக்க அவர்கள் தான் பட்டபப்டிப்பினை மேற்கொண்ட கொழும்பு பல்கலைக் கழகத்திலேயே பணிபுரிய ஆரம்பித்தார். தொடர்ச்சியாக 43 வருடங்கள் பேராசிரியர் அவர்கள் அங்கு பணிபுரிந்தார். (இக் காலகட்டத்தில் 1974ம் ஆண்டு இலங்கைப் பல்கலைக் கழகம் கொழும்பு பல்கலைக் கழகமாக மாற்றம் கண்டது.) 43 வருட காலப் பகுதியில் விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியாகவும் கணணிக் கல்லூரியின் நிறுவுனராகவும் இதன் இயக்குனராகவும் பணி புரிந்தார்.
[தொகு] விருதுகள்
இலங்கை அரசு 1997ம் ஆண்டு பேராசிரியர் சமரநாயக்க அவர்களுக்கு “வித்யா பிரசாதினி” விருதையும் 1998ம் ஆண்டு “வித்யா ஜோதி” விருதினாயும் வழங்கியது. ஜப்பான் சர்வதேச கூட்டுறவு மையம் (JICA) 1996ம் ஆண்டு சர்வதேச கூட்டுறவுக்கான தலைவர் விருதினை வழங்கியது. கொழும்பு பல்கலைக்கழகம் 2005ம் ஆண்டு கலாநிதிப் பட்டத்தினை வழங்கியது.