வீரைவேண்மான் வெளியன் தித்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வீரை வேண்மான் வெளியன் தித்தன் என்பவன் வீரை என்னும் ஊரையாண்ட வேளிர் குலத்தவனாவான் (குழாத்தவன் ஆவான்)
முதுகூத்தனார் என்னும் புலவர் இவன் மாலையில் முரசில் விளக்கேற்றி வைத்ததைக் குறிப்பிடுகிறார் .[1]
வரலாற்றுக் கோணத்தில் இதனை இப்பகுதியிலுள்ள திருவண்ணாமலைத் தீபத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கவேண்டிய நிலை உள்ளது. சிவன் வரலாற்று அக்கினித்தலம் எனல் வேறுவகை.

வீரை வெளியனார், வீரை வெளியன் தித்தனார் என்னும் புலவர்கள் சங்ககாலத்தவர்.
இந்தப் புலவர்களின் பெயர்களில் அரசன் பெயரில் உள்ள 'வேண்மான்' (வேள் மகன்) என்னும் குறிப்பு இல்லை.
எனவே இந்தப் புலவர்களை அரசன் எனக் கருத இடமில்லை.
இவர்களது பெயரில் உள்ள வீரை என்பது ஊர்ப்பெயர் எனக் கொண்டால் அதனை இக்காலத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர் எனக் கருதலாம்.


காண்க
தித்தன்
வெளியன்
வெளிமான்
வேண்மான்

அடிக்குறிப்பு[தொகு]

  1. வீரை வேண்மான் வெளியன் தித்தன் முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கு - முதுகூத்தனார் பாடல் - நற்றிணை 58