வி. கிருஷ்ணமூர்த்தி (எழுத்தாளர்)
வி. கிருஷ்ணமூர்த்தி (பிறப்பு: ஏப்ரல் 21, 1925) சிறுவர் இலக்கிய எழுத்தாளர். வாண்டுமாமா, விசாகன், சாந்தா மூர்த்தி போன்ற புனைபெயர்களில் குழந்தைகளுக்கும் கௌசிகன் எனும் புனைபெயரில் பெரியவர்களுக்கும் எழுதி வருபவர். கல்கி, பூந்தளிர், கோகுலம் போன்ற பல இதழ்களில் எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் பணியாற்றுபவர். எழுத்தோடு ஓவியத்திலும் ஆர்வம் கொண்டவர்.
தொடக்கத்தில் வானவில், கிண்கிணி போன்ற குழந்தைகள் இதழ்களில் எழுதி வந்த வாண்டுமாமா, கல்கி இதழில் 23 ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். இவருக்காகவே கல்கி அதிபர் கோகுலம் என்ற குழந்தைகள் வார இதழைத் தொடங்கினார். அதன் பின் பூந்தளிர் என்ற குழந்தைகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றிய வாண்டுமாமா இதுவரை 160க்கும் மேலான குழந்தை இலக்கியங்களைப் படைத்துள்ளார். மிகவும் எளிமையாக, அழகாக, அழகான சித்திரங்களுடன் இவரது படைப்புகள் வெளிவரும். இவரது ஓநாய்க்கோட்டை போன்ற சித்திரக்கதைகள் சில கல்கியில் தொடராக வெளிவந்தன.
[தொகு] படைப்புகள்
- மூன்று விரல்கள் (1991)
- பைபிள் பாத்திரங்கள் (1989)
- அதிசய நாய் (1988)
- அழிந்த உலகம் (1988)
- நெருப்புக் கோட்டை (1988)
- நீலப்போர்வை (1987)
- மூன்று வீரர்கள் (1983)
- வரலாறு படைத்த வல்லுநர்கள் (2003)
- ஷீலாவைக் காணோம்
- கனவா நிஜமா
- அவள் எங்கே?
- வீர விஜயன்
- கழுகு மனிதன் ஜடாயு
- ரத்தினபுரி ரகசியம்
- தங்கச் சிலை
- மரகதச்சிலை
- சூரியக் குடும்பம்
- தோன்றியது எப்படி? (நான்கு பாகங்கள்)
- விண்வெளி வாழ்க்கை
- தெரிந்து கொள்ளுங்கள்
- இதையும் தெரிந்து கொள்ளுங்கள்
- இன்னும் தெரிந்து கொள்ளுங்கள்
- மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
- உலகத்தின் கதை
- உலோகங்களின் கதை
- மருத்துவம் பிறந்த கதை
- மூளைக்கு வேலை (இரண்டு பாகங்கள்)
- கதைக் களஞ்சியம்
- பல தேசத்துப் பண்பாட்டுக் கதைகள்
- அதிசயப் பிராணிகளின் அற்புதக் கதைகள்
- ஷேக்ஸ்பியர் நாடகக் கதைகள்
- ஹோமரின் இலியத் - கிரேக்க புராணக் கதைகள்
- நிலாக்குதிரை
- புதையல் வேட்டை
- உலகம் சுற்றும் குழந்தைகள் (இரண்டு பாகங்கள்)
- மர்ம மனிதன்
- சி.ஐ.டி சிங்காரம்
- ஆடுவோமே! விளையாடுவோமே!
- மலைக்குகை மர்மம்
- குள்ளன் ஜக்கு
- மாய மோதிரம்
- மாயச் சுவர்
- தவளை இளவரசி
- அரசகுமாரி ஆயிஷா
- மந்திரச் சலங்கை
- துப்பறியும் புலிகள்
- கண்ணாடி மனிதன்
- தேதியும் சேதியும்
- பலே பாலுவும் பறக்கும் டிராயரும்
- மர்ம மாளிகையில் பலே பாலு
- விந்தை விநோதம் விசித்திரம்
- நீதிநெறி நூல்கள்
- ஔவையார் அருளிய ஆத்திசூடி விளக்கம்
- ஔவையார் அருளிய கொன்றை வேந்தன் விளக்கம்
- சதுரநீதி நூல்கள் (மூதுரை, நல்வழி, நன்னெறி, உலகநீதி ஆகியவை பற்றி)
- புலி வளர்த்த பிள்ளை
- முன்னேற்றத்தின் முன்னோடிகள் (முதல் தொகுதி)
- நாய் வளர்ப்பு
- பூனை வளர்ப்பு
- மீன் வளர்ப்பு
- இயந்திரங்கள் இயங்குவது எப்படி?
- தகவல் புதையல் (இரண்டு பாகங்கள்)
- கடலோடிகள்
- சரித்திரச் சம்பவங்கள்
- நீங்களே செய்யலாம் (இரண்டு பாகங்கள்)
- நீங்களும் மந்திரவாதி ஆகலாம்
- க்விஸ் க்விஸ் க்விஸ் (இரண்டு பாகங்கள்)
- பச்சைப் புகை
- மான்கள்
- யானைகள்
- கானகத்தினுள்ளே குரங்குகள்
- கானகத்தினுள்ளே மான்கள்
- கானகத்தினுள்ளே விலங்குகள்
- குழந்தைகளுக்கான நீதிக்கதைகள் (இரண்டு பாகங்கள்)
- உலகின் பழங்குடி மக்கள்
- விளையாட்டு விநோதங்கள்
- சித்திரக் கதைகள் (இரண்டு பாகங்கள்)
- அதிசய நாய் ராஜாவின் சாகசங்கள்
- தப்பியோடியவர்கள்
- குழந்தைகளுக்கு பலதேசக் கதைகள் (ஐந்து பாகங்கள்)
- வரலாறு படைத்த வல்லுநர்கள்
- பாட்டி பாட்டி கதை சொல்லு
- தாத்தா தாத்தா கதை சொல்லு
- அம்மா அம்மா கதை சொல்லு
- அப்பா அப்பா கதை சொல்லு
- கதை கதையாம் காரணமாம்
- பெண் சக்தி
- கடல்களும் கண்டங்களும்
- நிலம் நீர் காற்று
- அன்றிலிருந்து இன்றுவரை (இரண்டு பாகங்கள்)
- தெரியுமா தெரியுமே
- வேடிக்கை விளையாட்டு விஞ்ஞானம்
- அறிவியல் தகவல்கள் (மூன்று பாகங்கள்)
- நமது உடலின் மர்மங்கள்
- முதலுதவி
- இயற்கை அற்புதங்கள்
- அன்றும் இன்றும்
- உலக அதிசயங்கள்
- பரவசமூட்டும் பறவைகள்
- வாண்டுமாமாவின் வரலாற்றுக் கதைகள்
- அழகி
- ஜுலேகா (இரண்டு பாகங்கள்)
- பாமினிப் பாவை
- அடிமையின் தியாகம்
- சுழிக்காற்று
- சந்திரனே சாட்சி
- மெழுகு மாளிகை
- புலிக்குகை
- ஒற்று உளவு சதி
- டாக்டர் ராதாகிருஷ்ணன்
- ராஜாஜி
- ஸ்ரீமத் பாகவதம்
- முன்னேற்றத்தின் முன்னோடிகள் (இரண்டாம் தொகுதி)
- யோகா
- எதிர்நீச்சல்
- மாயாவி இளவரசன்
- மேஜிக் மாலினி
- மாதர்குல திலகங்கள்
- பாரதப் பண்டிகைகள்
- அதிசயப் பேனா
- வயலின் வசந்தா
[தொகு] சிறுகதைகள்
- நூறு கண் ராட்சதன்
