விளாடிமிர் கொமரோவ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| விளாடிமிர் மிக்கைலொவிச் கொமரோவ் Vladimir Mikhaylovich Komarov |
|
|---|---|
| விண்வெளி வீரர் | |
| தேசியம் | சோவியத் |
| பிறப்பு | மார்ச் 16, 1927 மொஸ்கோ, சோவியத் ஒன்றியம் |
| இறப்பு | ஏப்ரல் 24, 1967 ஒரென்பூர்க் ஓப்லஸ்து, சோவியத் ஒன்றியம் |
| வேறு தொழில் | பொறியியலாளர் |
| படிநிலை | பல்கோவ்னிக், சோவ்வியத் வான் படை |
| விண்பயண நேரம் | 2நா 03ம 04நி |
| தெரிவு | வான்படைப் பிரிவு 1 |
| பயணங்கள் | வஸ்கோத் 1, சோயூஸ் 1 |
| பயண சின்னம் |
|
விளாடிமிர் மிக்கைலொவிச் கொமரோவ் (Vladimir Mikhaylovich Komarov, Влади́мир Миха́йлович Комаро́в; மார்ச் 16, 1927, மாஸ்கோ – ஏப்ரல் 24, 1967, ஒரன்பூர்க் ஓப்லஸ்து) சோவியத் விண்வெளி வீரர் ஆவார். இவரே விண்வெளிப் பயணமொன்றில் இறந்த முதலாவது விண்வெளி வீரரும், ஒன்றுக்கு மேற்பட்ட விண்வெளிப் பயணங்களில் பயணித்த முதலாவது சோவியத் வீரருமாவார்.