வில்லெம் வீன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வில்ஹெம் வியென் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| வில்லெம் வீன் | |
|---|---|
| பிறப்பு | சனவரி 13, 1864 |
| பிறப்பிடம் | பிரசியா |
| இறப்பு | ஆகத்து 30 1928 (அகவை 64) |
| இறப்பிடம் | முனிச், ஜெர்மனி |
| தேசியம் | ஜெர்மானியர் |
| துறை | இயற்பியல் |
| கல்வி கற்ற இடங்கள் | கோட்டிஞென் பல்கலைக் கழகம் பெர்லின் பல்கலைக் கழகம் |
| ஆய்வு நெறியாளர் | ஹெர்மன் வான் ஹெல்ம்ஹோல்ட்ஜ் |
| குறிப்பிடத்தக்க மாணவர்கள் |
Karl Hartmann Gabriel Holtsmark |
| அறியப்படுவது | கரும்பொருள் கதிர்வீச்சு வியன் இடப்பெயர்ச்சி விதி |
| விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு (1911) |
வில்லெம் வீன் என்றழைக்கப்படும் வில்ஹெல்ம் கார்ல் வெர்னர் ஓட்டோ ஃப்ரிட்ஸ் பிரான்ஸ் வீன் (Wilhelm Carl Werner Otto Fritz Franz Wien , ஜனவரி 13, 1864 – ஆகஸ்ட் 30 1928) வெப்பவியல், மின்காந்தவியல் துறைகளில் முக்கியக் கோட்பாடுகளை உருவாக்கியவர். ஜெர்மன் நாட்டைச் சார்ந்த அறிவியல் அறிஞர். அனைத்துவகைக் கதிர்களையும் உள்ளிழுக்கும் தன்மை வாய்ந்த கரும்பொருள் ஒன்றை வரையறைப் படுத்தியவர். வெப்பக்கதிர்வீச்சு குறித்த பங்கீட்டு விதிகளை உருவாக்கியவர். 1911 ஆம் வெப்பக் கதிர் வீச்சு பற்றிய ஆய்வுகளுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பரிசு பெற்றவர்.
இவற்றையும் பார்க்க [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் வில்லெம் வீன் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |